Site icon ilakkiyainfo

ரணிலை களமிறக்குவதில் எந்த முரண்பாடும் இல்லை: மாதுலுவாவே சோபிததேரர் கூறுகிறார்

சர்­வா­தி­கார போக்கில் இருந்து நாட்டை காப்­பாற்­று­வதும் அதி­கா­ரப்­ப­கிர்­வி­னூ­டான ஜன­நா­ய­கத்தை நோக்கி பய­ணிப்­ப­துமே எமது நோக்கம். இலங்­கையில் நடை­பெறும் இறுதி ஜனா­தி­பதி தேர்தல் இது­வா­கவே இருக்க வேண்டும் என தெரி­வித்த சமூக நீதிக்­கான தேசிய இயக்­கத்தின் தலை­வரும் கோட்டை நாகவிகா­ரையின் விகா­ரா­தி­ப­தி­யு­மான மாது­லு­வாவே சோபித தேரர்,

ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­தான எதிர்த்­த­ரப்பு வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வதில் எவ்­வித முரண்­பா­டு­களும் இல்லை. வாக்கு­று­தி­களை நிறை­வேற்­று­வா­ராக இருப்பின் ஆத­ரிக்­கத்­தயார் எனவும் தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி தேர்­தலில் பொது வேட்­பாளர் போட்டி நில­வு­கின்ற சந்­தர்ப்­பத்தில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் சார்பில் ரணில்­விக்­கி­ர­ம­சிங்­கவை கள­மி­றக்­கு­வது தொடர்பில் செய்­திகள் கசிந்­துள்ள நிலையில் அது தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;

நாட்டில் ஜன­நா­ய­கத்­துக்கு முர­ணான வகையில் இடம்­பெறும் ஆட்­சி­யினை முடி­விற்கு கொண்­டு­வர வேண்டும். அர­சாங்கம் ஆட்­சி­ய­மைத்த போது பொது மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை மீறி தான்­தோன்­றித்­த­ன­மான ஆட்­சி­யினை மேற்­கொண்டு வரு­கின்­றது.

எனவே, அதனை தடுக்க வேண்டும் என்­ப­தற்­கா­கவே நாம் அனை­வரும் இவ்­மு­யற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்றோம். அதேபோல் இலங்­கையில் நடை­பெறும் இறுதி ஜனா­தி­பதி தேர்­த­லாக தற்­போது நடை­பெ­ற­வி­ருக்கும் ஜனா­தி­பதி தேர்­தலே அமைய வேண்டும்.

அதனை ஏற்­றுக்­கொண்டு ஆறு மாத காலத்­தினுள் ஜனா­தி­பதி முறை­யினை மாற்றி அனைத்து அதி­கா­ரங்­க­ளையும் பாரா­ளு­மன்­றத்­திடம் ஒப்­ப­டைக்க தயார் எனின் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அந்த வாக்­கு­று­தி­களை எமக்கு வழங்­கினால் நாம் ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை ஆத­ரிக்க தயார்.

அதேபோல் பொது எதி­ர­ணியின் சகல எதிர்க்­கட்­சி­களும் ஒன்று சேர வர­வேண்டும். குறிப்­பாக இந்த ஆட்­சி­யினை மாற்­றி­ய­மைக்க பல­மான பொது எதி­ர­ணி­யொன்று உரு­வா­கு­மாயின் அதுவே சிறந்த முடி­வாக அமையும்.

ஐக்­கிய தேசி­யக்­கட்சி, மக்கள் விடு­தலை முன்­னணி மற்றும் ஜன­நா­யக கட்சி ஆகிய கட்­சி­களின் துணை மிகவும் அவ­சி­ய­மா­னது. ஆகவே, இம்­மூன்று கட்சிகளின் ஒரு­மித்த ஆத­ர­வுடன் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கள­மி­றங்­குவார் என்றால் அடுத்த அர­சாங்கம் இல­குவில் உரு­வாகும்.

மேலும், தமிழ் – முஸ்லிம் கட்­சி­களின் ஆத­ரவு மிகவும் முக்­கி­ய­மா­னது. சிறு­பான்மை மக்­களின் ஆத­ரவு முழு­மை­யாக இருக்­கு­மாயின் அதுவே இவர்களுக்கு கிடைக்கும் முதல் வெற்­றி­யாகும்.

அதற்­கா­க­வேனும் தமிழ் முஸ்லிம் மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பிர­தான கட்­சி­களை தன்­வ­சப்­ப­டுத்­திக்­கொள்ள பிர­தான எதிர்க்­கூட்­டணி முயற்­சிக்க வேண்டும்.

எனவே, நாட்டின் ஜன­நா­ய­கத்­தினை நிலை­நாட்டி அதி­கா­ரப்­ப­கிர்வு நோக்­கிய பொது எதி­ரணி உரு­வா­கு­மாயின் சகல எதிர்க்­கட்­சி­களின் ஆதரவுடன் அதேபோல் ஆட்சியமைத்து 6 மாத காலத்தினுள் ஜனாதிபதி அதிகாரங்களை பாராளுமன்றிடம் ஒப்படைப்பாராயின் தயக்கமின்றி நாம் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்போம்.

எமக்கு யார் பொது வேட்பாளர் என்பதை விடவும் பொது வேட்பாளர் கொடுத்த வாக்கினை காப்பாற்ற வேண்டும் என்பதே முக்கியமானது எனவும் அவர் தெரிவித்தார்.

 

பொது­வேட்­பா­ள­ராக ரணிலை நிறுத்­து­வது தொடர்பில் எதி­ர­ணி­யுடன் ஐ.தே.க. பேச்சு: சரத் பொன்­சேகா, மாதுலுவாவே சோபித தேரர் ஆத­ரவு
13-10-2014
பொது­வேட்­பா­ள­ராக ரணிலை நிறுத்­து­வது தொடர்பில் எதி­ர­ணி­யுடன் ஐ.தே.க. பேச்சு: சரத் பொன்­சேகா, மாதுலுவாவே சோபித தேரர் ஆத­ரவு

ஜனா­தி­பதித் தேர்­தலில் எதிர்க்­கட்சித் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிய­மிப்­ப­தற்கு ஐக்­கிய தேசியக் கட்சி தீர்­மானித்துள்ளது. இந்­த­நி­லையில் அவரை பொது வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கு­வது தொடர்பில் ஏனைய கட்­சி­க­ளு­டனும் பேச்­சுக்­களை நடத்­து­வ­தற்கு அக்­கட்சி தீர்­மா­னித்­துள்­ளது.

ஜனா­தி­பதி வேட்­பா­ளரை தெரி­வு­செய்­வ­தற்­கென ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தலை­மைப்­பீ­ட­மா­னது ஜீ 20 என்ற அமைப்­பினை உரு­வாக்­கி­யி­ருந்­தது.

இந்த அமைப்­பா­னது கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்டு கட்­சியின் தலை­வ­ரான ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை ஜனா­தி­பதி தேர்­தலில் வேட்­பா­ள­ராக நிறுத்­து­வ­தென வெள்­ளிக்­கி­ழமை தீர்­மா­னித்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து தமது கட்­சியின் வேட்­பா­ளரை எதி­ர­ணியின் சார்பில் பொது வேட்­பா­ள­ராக நிய­மிப்­ப­தற்கு ஏனைய எதிர்க்­கட்­சி­களின் ஆத­ரவைப் பெறு­வ­தற்கு இந்தக் குழு தீர்­மா­னித்­துள்­ளது.

இதன் ஓரங்­க­மாக எதிர்க்­கட்சித் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான தூதுக்­குழு நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியின் தலைவர் மனோ கணே­சனை சந்­தித்து பேசி­யுள்­ளது.

இந்தச் சந்­திப்­பின்­போது ரணில் விக்­ர­ம­சிங்­கவை பொது வேட்­பா­ள­ராக நிறுத்த வேண்­டி­யதன் அவ­சியம் தொடர்பில் ஆரா­யப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்படுகின்றது.

அடுத்த கட்­ட­மாக ஜன­நா­யகக் கட்­சியின் தலைவர் சரத் பொன்­சேகா, தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் ஆகி­யோ­ரையும் சந்­தித்து பேசு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை ஜனா­தி­பதி தேர்­தலில் ஆத­ரிப்­ப­தற்கு ஜன­நா­யக கட்­சியின் தலைவர் சரத் பொன்­சேகா இணக்கம் தெரி­வித்­தி­ருக்­கின்றார். ஆனால் பொதுச் சின்­னத்தில் அவர் கள­மி­றங்க வேண்டும் என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஜன­நா­யகக் கட்­சியின் தலைவர் சரத் பொன்­சே­காவை மனோ கணேசன் தலை­மை­யி­லான ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியின் தூதுக்­குழு சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்­தது. இந்தப் பேச்­சு­வார்த்­தை­யின்­போதும் பொது வேட்­பாளர் ஒரு­வரை நிய­மிப்­பது தொடர்பில் கலந்துரை­யா­டப்­பட்­டி­ருக்­கின்­றது.

ஜன­நா­யகக் கட்­சியின் தலைவர் சரத் பொன்­சே­காவை ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மங்­கள சம­ர­வீர சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். இந்தச் சந்­திப்­பின்­போது பொதுச் சின்­னத்தில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க போட்டியிட்டால் ஆதரிக்க தயார் என்று பொன்சேகா தெரிவித்துள்ளதாக தெரிகின்றது.

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் தலைமையிலான தூதுக்குழுவினர் இன்று மாதுலுவாவே சோபித தேரரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இந்தச் சந்திப்பின்போதும்பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

ரணில் விக்கிரம சிங்கவை பொதுவேட்பாளராக நியமிப்பதற்கு மாதுலுவாவே சோபித தேரரும் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிகின்றது.

பொதுவேட்பாளராக ரணிலை ஒருபோதும் ஆதரியோம்: ஜே.வி.பி.தலைவர் அநுரகுமார
13-10-014

ஆட்சி மாற்­றத்­திற்­கான பொது எதி­ரணி என்றால் அதில் பொது வேட்­பா­ள­ரையே நிய­மிக்க வேண்டும். அதை­வி­டுத்து பொது எதி­ர­ணியில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஒரு­வரை நிறுத்­துவதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என தெரி­விக்கும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக்க, ரணிலை பொது வேட்­பா­ள­ராக்­கு­வதை ஒரு போதும் ஆத­ரிக்க மாட்டோம் எனவும் குறிப்­பிட்டார்.

ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தலைவர் ரணில்m­விக்­கி­ர­ம­சிங்­கவை பொது வேட்­பா­ள­ராக்கும் முயற்­சிகள் எடுக்­கப்­ப­டு­கின்ற நிலையில் ஜே.வி.பி. யின் ஆத­ரவு தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;

ஜனா­தி­பதி தேர்­தலில் எதிர்க்­கட்­சி­களின் பொது எதி­ரணி தொடர்பில் சிந்­திப்­பது வர­வேற்­கத்­தக்க விட­யமே. சகல கட்­சி­க­ளையும் ஒன்­றி­ணைத்த பொது எதிர­ணிக்கு மக்கள் விடு­தலை முன்­னணி தனது ஆத­ர­வினை தெரி­விக்கும்.

ஆனால் பொது எதி­ர­ணியில் கள­மி­றக்­கப்­ப­டு­பவர் பொது­வான கொள்­கை­யி­னையும் சகல கட்­சி­களின் ஏற்­றுக்­கொள்ளக் கூடிய விதி­களை அனு­ச­ரிப்­ப­வ­ரா­கவும் இருக்க வேண்டும்.

இவ்­வி­ட­யத்தில் ஐக்­கிய தேசியக் கட்சி தமது சுய­ந­லத்­தினை மட்­டுமே கருத்­திற்­கொண்டு செயற்­ப­டு­வது ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. பொது வேட்­பாளர் எனும் சொற்­ப­தத்­திற்கு ரணில் விக்­கி­ர­ம­சிங்க தகு­தி­யா­னவர் அல்ல. ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை கள­மி­றக்­கு­வது பொது எதி­ர­ணியும் அல்ல. எனவே அவ்வாறா­ன­தொரு நிலையில் நாம் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை ஆத­ரிக்க தயா­ரில்லை.

அதேபோல் ஜனா­தி­பதி தேர்­தலின் உத்­தி­யோ­க­பூர்வ திக­திகள் இன்­னமும் வெளி­யி­டப்­ப­டா­த­தனால் எமது இறுதி முடிவு எடுக்­கப்­ப­ட­வில்லை. ஜனா­தி­பதித் தேர்தல் எப்­போது என்­பது வெளி­யி­டப்­பட்­டதும் ஜே.வி.பி. யின் முடிவும் தெரி­விக்­கப்­படும்.

அது வரையில் சகல தரப்­புக்­க­ளு­டனும் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி இணக்­கப்­பாட்­டினை எட்டும் முயற்­சி­களை மேற்­கொள்வோம். அதேபோல் தமிழ் – முஸ்லிம் தரப்­பி­ன­ரு­டனும் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தும் திட்­ட­முள்­ளது.

எது எவ்­வாறு இருப்­பினும் பொது எதிரணியில் பொருத்தமான ஒருவரை நியமிக்க வேண்டும். இல்லையேல் ஜே.வி.பி. தனது தனிப்பட்ட கொள்கையில் செயற்படும். அதை விடுத்து தனிப்பட்ட கட்சிகளின் சுயநல கொள்கைகளுக்கு எமது ஆதரவு கிடைக்காது எனவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version