தங்கர்பச்சான் இயக்கத்தில் பிரபுதேவா, பூமிகா மற்றும் பிரகாஷ்ராஜ் நடிப்பில் தயாராகி உள்ள களவாடிய பொழுதுகள் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதாம்.
நீண்ட காலத்திற்குப் பின் பிரபுதேவா மற்றும் பூமிகா நடித்துள்ள இப்படத்தை மக்கள் அதிகம் எதிர்பார்த்த போதும், கடும் நிதி நெருக்கடி மற்றும் சரியான விலை கிடைக்கமாமை போன்ற காரணங்களால் படத்தை தயாரித்த ஐங்கரன் தயாரிப்பு நிறுவனம் களவாடிய பொழுதுகளை ரிலீஸ் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தது.
எனினும் அந்தப்படத்தை விரைவில் வெளியிடுவது தொடர்பில் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் லைகாவுடன் இணைந்து விஜயின் கத்தி படத்தை ஐங்கரன் தயாரித்துள்ளது. எதிர்ப்புகள் இருந்தபோதும், கத்தி நல்ல விலை போயுள்ளதாகத் தெரிகிறது.
எனவே கத்தி படத்தின் மூலம் கிடைக்கப்பெற்றுள்ள இலாபத்தில், களவாடிய பொழுதுகள் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளதாக கோடாம்பாக்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கணவருடன் ஒட்டிக்கொண்டு படப்பிடிப்புக்கு புறப்படும் நஸ்ரியா
14-010-2014
சென்னை: கணவர் பஹத் பாசில் படப்பிடிப்புக்கு செல்லும்போது அவருடன் ஒட்டிக்கொண்டு சென்று பொழுதை கழிக்கிறார் நஸ்ரியா. மலையாள நடிகர் பஹத் பாசில், நடிகை நஸ்ரியா நாசிம் இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.
நடிக்கும்போது வெளியூர் ஷூட்டிங், ஆடியோ விழா என பறந்துகொண்டிருந்த நஸ்ரியா திருமணத்துக்கு பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கி இருப்பதால் காலை கட்டிப்போட்டது போல் வீட்டையே சுற்றி சுற்றி வந்துக்கொண்டிருக்கிறார்.
கணவரை உடனிருந்து கவனித்துக்கொள்ளும்படி உறவினர்கள் அறிவுரை கூறியதையடுத்து பஹத் பாசில் வேலை விஷயமாக வெளியே செல்லும் போது அவரது தேவையை பூர்த்தி செய்வதற்காக நஸ்ரியாவும் உடன் செல்கிறார்.
உணவு பரிமாறுவதுமுதல் அவரது ஷூட்டிங் விஷயங்கள் உள்ளிட்டவரை ஒரு பி.ஏ.போல் உடனிருந்து கவனித்துக்கொள்கிறார். கோழிக்கோடில் நடந்துவந்த மலையாள பட ஷூட்டிங் அடுத்து பெங்களூரில் நடக்க உள்ளது.
அவருடன் நஸ்ரியாவும் பெங்களூருக்கு ஜோடிபோட்டு புறப்பட்டுவிட்டார். இப்படத்தில் ராதிகா ஆப்தே ஹீரோயினாக நடிக்கிறார். நடிப்புக்காக தான் படித்து வந்த பி.காம் பட்டப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்தி இருந்தார் நஸ்ரியா.
தற்போது அதை முடிக்க எண்ணி உள்ளார்.அதற்கான புத்தகங்களும் வாங்கியவர் படிப்பிலும் தனது கவனத்தை செலுத்துகிறாராம். நடிப்பு எப்போது என்று கேட்டால் அதுபற்றி பிறகு பார்க்கலாம் என்று கூறிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறார்.
ரஜினி முன் அனுஷ்காவுக்கு ஷாக் கொடுத்த சந்தானம்
14-10-2014
சென்னை: ரஜினி முன்னிலையில் அனுஷ்காவுக்கு ஷாக் கொடுத்தார் சந்தானம்.ஹீரோக்களுக்கு ஜோடி சேர ஆர்வம் காட்டும் ஹீரோயின்கள் காமெடியன்களுக்கு ஜோடியாக நடிக்க கேட்கும்போது ஓட்டம் பிடிக்கின்றனர்.
இம்சை அரசன் 23ம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா அழகப்பன், தெனாலிராமன் ஆகிய படங்களில் வடிவேலு சோலோ ஹீரோவாக நடித்தார். அவருக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் கால்ஷீட் கேட்டபோது கைவிரித்துவிட்டனர்.
கருணாஸ் ஹீரோவாக நடித்த அம்பாசமுத்திரம் அம்பானி, சந்தமாமா, ரகளபுரம் ஆகிய படங்களிலும் அவருக்கு ஜோடியாக நடிக்க பல ஹீரோயின்களிடம் கால்ஷீட் கேட்டபோது வெவ்வேறு காரணம் சொல்லி மறுத்துவிட்டனர்.
இவர்களைத் தொடர்ந்து ஹீரோவாக களத்தில் குதித்தார் சந்தானம். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் 3 ஹீரோக்களில் ஒருவராக நடித்தார். இதில் விசாகா சிங் ஹீரோயினாக நடித்திருந்தாலும் கதைப்படி அவர் மற்றொரு ஹீரோவுக்குதான் ஜோடியாக நடித்தார்.
இதையடுத்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்தபோது அனுஷ்கா உள்பட மார்க்கெட்டில் உள்ள பல ஹீரோயின்களை அணுகினர். யாரும் ஓ.கே. சொல்லவில்லை. பிறகு புதுமுகம் ஆஷ்னா ஹீரோயினாக நடித்தார்.
சந்தானம் ஹீரோ ஆனதை பாராட்டி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுஷ்கா, நல்ல ஸ்கிரிப்டா வந்தா சொல்லுங்க சேர்ந்து நடிப்போம் என்றாராம். அப்போது சந்தானம், அடுத்து ராஜேஷ் இயக்கும் படத்தில் நடிக்கப்போறேன். நீங்க ஜோடியா நடிக்கிறீங்களா என்றாராம்.
அதற்கு அனுஷ்கா, நான் ஜோடியாக நடித்தால்தான் கால்ஷீட் தருவேன் என்று கறாராக சொல்லிவிடுங்கள் சேர்ந்து நடிச்சிடுவோம்‘ என்று விளையாட்டாக பதில் சொன்னார். சமீபத்தில் ‘லிங்கா‘ பட ஷூட்டிங்கில் ரஜினியை சந்திக்க வந்திருந்தார் இயக்குனர் ராஜேஷ்.
அப்போது அனுஷ்கா, சந்தானம் அருகில் இருந்தனர். அடுத்தபடம் பற்றி ராஜேஷிடம் ரஜினி விசாரித்தார். அருகில் இருந்த சந்தானம், ‘அந்த படத்தில் எனக்கு ஜோடியா இவங்கதான் நடிக்கிறாங்க‘ என்று அனுஷ்காவை சுட்டிக்காட்னார்.
அதை கேட்டு ஷாக் ஆன அனுஷ்கா சிரித்தும், மழுப்பி பேசியும் நிலைமையை சமாளித்தாராம்.