ilakkiyainfo

குழப்பம் முடிவுக்கு வந்தது: வெளியில் வந்தார் வட கொரிய அதிபர் கிம் ஜோங்

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் கடந்த 40 நாட்களாக அந்நாட்டில் நடந்த எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்தார். இதனால் அவரது நிலை குறித்து பல்வேறு சர்ச்சைகள் ரெக்கை கட்டி பறந்தது.

இறுதியாக கடந்த செப்டம்பர் மாதம் அவர் இசை நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவியுடன் கலந்துக் கொண்டார். அதன் பின்னர் எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்காமல் போனதால் பெரும் குழுப்பம் நிலவியது.

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு தரப்பு  ராணுவ பயிற்சியில் ஈடுபட்டபோது அவரது காலில் காயம் ஏற்பட்டதாக தெரிவித்தது. அவர் குணமடையும் வரை அவரது சகோதரி கிம் யோ ஜோங் அதிபருக்கான பணியை கவனிப்பார் என்றும் அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அந்நாட்டின் தலைநகர் பியாங்யாங்கில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் கிங் ஜோங் உன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கட்டிட பணிகளை அவர் வெகுவாக பாராட்டியதாக அரசு தரப்பு கூறியுள்ளது. கைத்தடி உதவியுடன் அவர் நடந்துவரும் புகைப்பட காட்சியும் வெளியாகியுள்ளது. அப்போது அவருடன் அதிகாரிகளும் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு நகரத்தை தாரைவார்த்த ஈராக்
14-10-2014

Iraq.All.01

தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒரு நகரத்தை ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஈராக் தாரை வார்த்தது.

ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பெரும்பாலான நகரங்களை பிடித்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தற்போது அன்பர் மாகாணத்தில் முற்றுகையிட்டு நகரங்களை கைப்பற்றி வருகின்றனர்.

அவர்களின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த ராணுவம் கடுமையாக போராடி வருகிறது. அங்கு இயூபிரேட்ஸ் ஆற்றின் கரையில் ஹீத் என்ற நகரம் உள்ளது.

அதை முற்றுகையிட்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வந்தனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவம் அங்குள்ள ஆசாத் முகாமில் தங்கியிருந்து தாக்குதல் நடத்தியது. ஆனால் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ராணுவத்தால் ஈடுகொடுக்க முடியவில்லை.

இதற்கிடையே ஹீத் நகரின் மைய பகுதியை தீவிரவாதிகள் ஆக்கிரமித்தனர். எனவே ஹீத் நகரை தீவிரவாதிகளுக்கு ஈராக் ராணுவம் விட்டுக் கொடுத்து தாரை வார்த்தது.

ஆசாத் முகாமில் இருந்து வெளியேறி வேறு இடத்துக்கு சென்று விட்டது. ஆசாத் முகாம் வடமேற்கு ஹீத் பகுதியில் உள்ள மிகப் பெரிய முகாம் ஆகும்.

இதன் ஒரு பகுதி இன்னும் அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இது பாலைவனத்தால் சூழப்பட்டது. எனவே அது ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு சவாலாக இருந்தது. இருந்தும் அதை தீவிரவாதிகள் முறியடித்துள்ளனர்.

இதற்கிடையே வடக்கு ஈராக்கில் உள்ள யாஷிடி மைனாரிட்டி இனத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடித்து சிறை வைத்துள்ளனர்.

அவர்களை அடிமைகளாக விற்பனை செய்வதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகளின் அட்டகாசத்தை ஒடுக்க அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

அமெரிக்காவின் போர் விமானங்கள் தங்கள் முகாம்களை பயன்படுத்தி கொள்ள துருக்கி அனுமதி அளித்துள்ளது. சிரியாவில் சொபானே நகரில் தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடிக்க அமெரிக்கா – துருக்கி இடையே இதுகுறித்து ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version