Site icon ilakkiyainfo

ஜெனீவா தூதுவரின் இல்லத்தை புனரமைக்கும் ஒப்பந்தத்தை புலிகளுக்கு வழங்கியது யார்? -சபையில் சஜித் எம்.பி. கேள்வி

ஜெனீ­வாவின் இலங்­கைக்­கான தூது­வரின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தை புனர்­நிர்­மாணம் செய்­வ­தற்­கான ஒப்­பந்­தத்தை புலிகள் அமைப்­புக்கு வழங்­கி­யது யார்? இதுவா அரசின் தேசப்­பற்று என நேற்று சபையில் கேள்வி எழுப்­பிய ஐ.தே.கட்சி அம்­பாந்­தோட்டை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சஜித் பிரே­ம­தாஸ,

வடக்கு, கிழக்கில் இன்­னமும் தமிழ் மக்கள் அகதி முகாம்­களில் வாழ்­கின்­றனர். அம்­மக்­க­ளுக்கு காணி உரி­மை­களை வழங்க வேண்டும். அதே­போன்று மலை­யக மக்­களின் காணி உரி­மைகள் பாது­காக்­க­ப்பட வேண்­டு­மென்றும் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற காணி (பரா­தீ­னப்­ப­டு த்தல் மீதான மட்­டுப்­பா­டுகள்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்­பீடு மீதான விவா­தத்தில் உரை­யாற்றும் போதே சஜித் பிரே­ம­தாஸ எம்.பி. இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்..

அர­சாங்கம் தாம் தான் தேசப்­பற்று மிக்­கவர்கள் என்றும் நாட்டை காட்டிக்கொடுக்க மாட்­டோ­மென்றும்மார் தட்­டு­வ­தோடு ஐ.தே.கட்­சிக்கு தேசப்­பற்று இல்லை­யென்றும் விமர்­சிக்­கின்­றது. ஆனால், ஜெனீ­வா­வி­லுள்ள இலங்கை தூது­வரின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தை புனர்­நிர்­மாணம் செய்­வ­தற்­கான ஒப்பந்தம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

இந்த ஒப்­பந்­தத்தை வழங்­கி­யது யார்?

இதற்­காக வழங்­கப்­படும் பணம் புலி­க­ளையே சென்­ற­டை­கி­றது. யார் இந்த ஒப்­பந்­தத்தை கொடுத்­தார்கள்.

யார் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும். இவ்­வி­டயம் தொடர்­பான கணக்­காய்வு அறிக்­கையும் மோச­டி­யா­ன­தா­கவே காணப்­ப­டு­கின்­ற­னது.

தேசப்­பற்றை பேசும் அரசு ஜெனீ­வாவில் ஒப்­பந்­தத்தை புலி­க­ளுக்கு வழங்­கி­யுள்­ளது.

வெளி­நாட்­ட­வ­ருக்கு காணிகள் வழங்­கு­வதை மட்­டுப்­ப­டுத்த சட்டம் கொண்­டு­வ­ரு­வ­தாக கூறும் அர­சாங்கம் நாட்டு மக்­க­ளுக்கு கார­ணி­களை வழங்கவில்லை. 15 இலட்­சத்­திற்கும் மேற்­பட்ட மக்கள் வீட்­டில்­லாமல் வாழ்­கின்­றனர்.

ஆனால், இங்­குள்ள தீவு­களும் காணி­களும் பெரு­ம­ளவில் வெளி­நா­டு­க­ளுக்கு விற்றுத் தீர்க்­கப்­பட்­டு­விட்­டன.

வட கிழக்கு யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்டு இடம்­பெ­யர்ந்த தமிழ்­மக்­க­ளுக்கு இன்­னமும் காணிகள் வழங்­கப்­பட இல்லை. பெரும்­பா­லான மக்கள் இன்­னமும் அகதி முகாம்­களில் வாழ்­கின்­றனர்.

யுத்தம் முடிந்து 5 வரு­டங்கள் கழிந்த பின்­னரும் இன்றும் அகதி முகாம்கள் மூடப்­ப­டாத நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது.

அர­சாங்கம் இன்று வரை தமிழ் மக்­களின் இத­யங்­களை வெற்றிக் கொள்­வ­தற்­கான எந்­த­வி­த­மான முயற்­சி­க­ளையும் மேற்­கொள்­ள­வில்லை.

மலை­யகம்

மலை­யக தோட்டத் தொழி­லா­ளர்­களின் காணி உரி­மை­களை பாது­காக்­கவும் எது­வி­த­மான நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை. அம்­மக்­க­ளுக்கு 50,000 வீடுகள் நிர்­மா­ணித்து கொடுக்கும் திட்­டமும் ஸ்தம்­பி­த­ம­டைந்­துள்­ளது. அம் மக்­க­ளுக்கு காணிகள் பகிர்ந்­த­ளிக்­கப்­பட வேண்டும்.

தடை நீக்கம்

ஐரோப்­பிய ஒன்­றியம் புலிகள் மீதான தடையை நீக்­கி­யுள்­ளது. மறு­புறம் மீன் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது.  இவ்வாறான நிலைமை ஏற்படக் காரணம் என்ன? அரசாங்கம் அனைத்து வெளிநாடுகளையும் பகைத்துக் கொண்டுள்ளது.

நிலையான தெளிவான வெளிநாட்டுக் கொள்கை இல்லை. எனவே, சர்வதேசம்  இன்று எமது நாட்டை சுற்றிவளைத்துள்ளது என்றும் சஜித் பிரேமதாச எம்.பி. தெரிவித்தார்.

கொலைகாரர்களை விடுவிப்பதற்கு சமன்:தடை நீக்கம் குறித்து கோத்தபாய
21-10-2014

புலிகள் மீதான தடையை நீக்­கு­வ­தற்கு ஐரோப்­பிய ஒன்­றிய நீதி­மன்றம் எடுத்த தீர்­மா­ ன­மா­னது கொலை­யா­ளர்­களை விடு­விப்­ப­தற்கு சம­மா­ன­தாகும் என்று பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார்.

சமா­தா­னத்தை விரும்பும் மக்கள் ஒரு­போதும் இந்த தீர்­மா­னத்தை ஏற்­றுக்­கொள்ள­மாட்­டார்கள் என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். புலிகள் மீதான தடை யை ஐரோப்பிய ஒன்­றி­யத்தின் நீதி­மன்றம் கடந்­த­வாரம் நீக்­கி­யமை தொடர்பில் கருத்து வெளி­யிட்­டுள்ள பாது­காப்பு செய­லாளர் அது தொடர்பில் மேலும் கூறியுள்­ள­தா­வது

இலங்­கை­யிலும் வெளி­நாட்­டிலும் புலி ஆத­ரவு புலம்­பெயர் மக்­களை ஆத­ரிக்­கின்­ற­வர்கள் உள்­ளனர். புலி­களை மீள் உரு­வாக்க நிதி சேக­ரிப்­ப­வர்­களும் உள்ளனர்.

எனினும் இந்த செயற்­பா­டுகள் ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­களின் சட்டம் ஒழுங்கில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும்­போது தடை நீக்­கத்­துக்கு ஆத­ரவு தெரிவிக்கின்றவர்கள் தமது மடை­மையை உணர்­வார்கள்.

புலி ஆத­ரவு புலம்­பெயர் மக்­களை ஆத­ரிக்­கின்­ற­வர்கள் அவர்­களின் செயற்­பா­டு­களின் விளை­வு­களை புரிந்­து­கொள்­வார்கள். இவர்கள் சந்­தர்ப்­ப­வா­திகள். எவ்­வா­றெ­னினும் இலங்­கையில் மீண்டும் புலிகள் செயற்­பட இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது.

இலங்­கையில் புலிகள் அமைப்பு தடை செய்­யப்­பட்ட அமைப்பாகவே இருக்கும். தற்போது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மேற்கு சக்திகள் தாம் பாதிப்படையும்போதுதான் அதன் அபாயத்தை உணர்ந்துகொள்ளும்.

மூன்றாவது அணியாக களமிறங்கத் தயார்: ஜாதிக ஹெல உறுமயவின் 11 ஆவது தேசிய மாநாட்டில் இணைத் தலைவர் அத்துரலிய ரத்ன தேரர் சூளுரை
20-102014

ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்னர் எமது கொள்கைப் பிர­க­ட­னத்­தினை அர­சாங்கம் ஏற்றுக் கொண்டு தீர்­மா­ன­மொன்­றினை எடுக்­கா­விடின் சகல எதி­ர­ணிகளையும் இணை த்துக் கொண்டு மூன்றாம் அணி­யாக கள­மி­றங்க தயார்.

ஆனால் ஐக்­கிய தேசியக் கட்­சியினை ஆட்­சியில் அமர்த்­து­வ­தற்கு ஒரு­போதும் அனு­ம­திக்க மாட்டோம் என ஜாதிக ஹெல உறு­ம­யவின் தேசிய மாநாட்டில் அக் கட்­சியின் இணைத் தலை வர் அத்­து­ர­லிய ரத்­ன­தேரர் சூளு­ரைத்­துள் ளார்.

அதே­நேரம் ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்­ன­ராக நாட்டில் மாற்றம் ஒன்­றினை ஏற்­ப­டுத்த வேண்டும் என்­ப­தோடு அதி­காரப் பகிர்வு அவ­சியம் எனவும் அவர் சுட்டிக் காட்­டினார்.

ஜாதிக ஹெல உறு­ம­யவின் 11 ஆவது தேசிய மாநாடு மஹ­ர­கம இளைஞர் பாரா­ளு­மன்­றத்தில் நேற்று இடம் பெற்­றது. அக் கட்­சியின் இணை தலைவர் அத்­து­ர­லிய ரத்ன தேரரின் தலை­மையில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த இம் மாநாட்டில் கட்­சியின் செய­லாளர் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க உள்­ளிட்ட பிரதான உறுப்­பி­னர்­களும் மதத் தலை­வர்­களும் கலந்து கொண்­டி­ருந்­தனர். இம் மாநாட்டில் உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறு­கையில்;

நாட்டின் பகி­ரப்­பட வேண்டும் என சக­லரும் எதிர்ப்­பார்க்­கின்ற அதி­காரப் பகிர்­வினை ஒரு தனி நபரின் கீழ் வைத்து ஆட்சி நடத்த ஜனா­தி­பதி முயற்சிக்கின்றார்.

அதனை அடிப்­ப­டை­யாகக் கொண்ட தற்­போது ஜனா­தி­பதித் தேர்தல் ஒன்­றிணை நடத்த ஜனா­தி­பதி திட்­ட­மிட்­டு­வுள்ளார். இது தொடர்பில் நாம் எதையும் அறிந்­தி­ருக்­க­வில்லை.  எம்­மு­டனோ ஏனைய அர­சாங்­கத்­தி­டனோ ஜனா­தி­பதி கலந்­து­ரை­யா­ட­வு­மில்லை.

அதையும் தாண்டி இன்று நாட்டில்  மாற்றம் ஒன்று ஏற்­பட வேண்டும் என சக­லரும் எதிர்ப்­பார்க்­கின்றோம். குறிப்­பாக ஜனா­தி­ப­திக்கு இருக்கும் நிறை­வேற்று அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட வேண்டும்.

பாரா­ளு­மன்­றத்­திற்கும்   பிர­த­ம­ருக்­கு­மான அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட வேண்டும். சுயா­தீன சேவைகள் செயற்­பட வேண்டும். சுயா­தீன பொலிஸ் சேவை, நீதி சேவை, தேர்­தல்கள் ஆணைக்­குழு என்­பன சரி­யான முறையில் நாட்டில் செயற்­பட வேண்டும்.

அமைச்­சர்­களின் எண்­ணிக்கை 29 தொடக்கம் 35 ஆக குறைக்­கப்­பட வேண்டும். அதேபோல் ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்­திற்கும் பொறுப்பு கூற வேண்டும்.

மாகாண சபைக்­கான பொலிஸ் அதி­காரம் அர­சியல் அமைப்பில் இருந்து நீக்­கப்­பட வேண்டும்.  மாகாண சபை­களின் தன்­னிச்­சை­யான செயற்பா­டு­களை கட்­டுப்­ப­டுத்த வேண்டும்.

அதேபோல் பௌத்த கலா­சா­ரத்­தி­னையும் மதத்­தி­னையும் பாது­காக்கும் பௌத்த சாசன அமைச்­சினை உறு­திப்­ப­டுத்த வேண்டும். பௌத்த சாசன அமைச்சினை ஜனா­தி­ப­தியின் கீழ் கொண்டு வந்து அபி­வி­ருத்­திக்­கான    சகல நட­வ­டிக்­கை­க­ளையும் எடுப்­ப­தோடு நாட்டில் உள்ள சகல மதங்­களின் உரிமை­க­ளையும் சுதந்­தி­ரங்­க­ளையும் உறு­திப்­ப­டுத்த வேண்டும்.

சிங்­கள மக்­களின் உரி­மை­களை பாது­காக்க வேண்டும். 1971 ஆம் ஆண்டில் அதற்கு முன்னர் வடக்கில் சரா­ச­ரி­யான அளவில் சிங்­கள மக்கள் வாழ்ந்­தனர். எனினும் விடு­தலைப் புலி­க­ளு­ட­னான யுத்­தத்தின் பின்னர் வடக்கில் இருந்து சிங்­க­ள­வர்கள் விரட்­டி­ய­டிக்­கப்­பட்­டனர்.

அவர்­களை மீண்டும் வடக்கில் குடி­ய­மர்த்த வேண்டும். அதேபோல் நாட்டில் அபி­வி­ருத்­திக்­கான சகல முயற்­சி­க­ளையும் அர­சு­மேற்­கொள்­வ­துடன் மக்களின் அபி­வி­ருத்­தி­யிலும் வாழ்­வா­த­ரத்­திலும் அரசு முக்­கி­யத்­துவம் கொடுக்க வேண்டும்.

நாட்டில் பரவி வரு­கின்ற சூது , போதைப்­பொருள் ஆகி­ய­வற்­றினை கட்­டுப்­ப­டுத்தி விவ­சா­யிகள், தொழி­லா­ளர்­க­ளுக்­கான உரி­மை­க­ளையும் சலு­கை­க­ளையும் ஏற்­ப­டுத்தி கொடுக்­க­வேண்டும்.

இவை அனைத்­தையும் தான் மக்கள் இன்று எதிர்ப்­பார்க்­கின்­றனர். ஜன­நா­யகம் ஒன்­றினை மக்கள் விரும்­பு­கின்­றனர்.ஆனால் இந்த அர­சாங்கம் அவ் அவைத்­திற்­கு­மான நிவா­ர­ணத்­தினை பாரா­ளு­மன்­றிலும் ஏனைய இடங்­க­ளிலும் தெரி­விக்­கின்­றதே தவிர செயற்­பாட்டில் அவை இல்லை.

இன்று ஜனா­தி­ப­திக்கு மதிப்பும் ஆத­ரவும் இருக்­கின்­றது என்றால் அதற்­கான காரணம் தீவி­ர­வா­தத்­தினை அழித்­த­மை­யாகும். அந்த ஒன்று மட்­டுமே தற்­போது ஜனா­தி­ப­திக்கு உள்­ளது.

மக்­களை பாது­காக்கும், நாட்டை பாது­காக்கும் தலைவர் தன்­மையில் இருந்து ஜனா­தி­பதி வீழ்ச்­சி­கண்­டுள்ளார்.  எனவே இவை அனைத்­தையும் மாற்றியமைக்க ஜனா­தி­பதி எம்­முடன் இணைந்து செயற்­பட்டு எமது கொள்­கை­களை ஏற்றுக் கொண்டால் அதனை நாம் ஆத­ரித்து அர­சாங்­கத்தை பாது­காப்போம்.

ஆனால் அர­சாங்­கமும்  ஜனா­தி­ப­தியும் அதற்­கு­இ­ணங்­கா­விடின் நாமும் தனி கொள்­கை­யினை தீர்­மா­னிக்க வேண்­டி­ய­நிலை ஏற்­படும். எனவே ஜனாதிபதியே இப்­போது தீர்­மானம் எடுக்க வேண்டும்.

ஆகை­யினால் அர­சாங்கம் நடாத்­த­திட்­ட­மிட்­டி­ருக்கும் ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்னர் எமது கொள்கை பிர­க­ட­னத்­தினை ஜனா­தி­பதி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நாம் விரும்பும் மாற்­றத்­தினை ஜனா­தி­ப­தியும் விரும்­பு­கின்­றனர். இல்­லையேல் நாம் புதிய மாற்றம் ஒன்­றினை ஏற்­ப­டுத்­துவோம்.

எனினும் ஐக்­கிய தேசி­யக்­கட்சி அர­சாங்­கத்தை அமைப்­ப­தற்­கான எந்தவொரு சந்தர்ப்பத்தினையும் நாம் வழங்க மாட்டோம். அதற்காக அரசாங்கத்தை சுயவிருப்பத்திற்கு செயற்பட அனுமதிக்கவும் மாட்டோம்.

எமது கொள்கை பிரகடனம் அரசாங்கத்தினால் நிராகரிக்கப்படும்மாயின் ஜனாதிபதி தேர்தலின் அரசாங்கத்தை கவிழ்த்துவதற்கான மூன்றாவது பொது எதிரணியினை களமிறக்க தயார்.

அரசாங்கத்தையும் ஜனாதிபதி முறைமையையும் எதிர்க்கும் சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து கொண்டு பொது எதிரணியை அமைத்து மூன்றாவது அணியாக களமிறங்க தயாராகவும் உள்ளோம் என்றார்.

Exit mobile version