ilakkiyainfo

நீரிழிவு நோயால் வந்த சந்தேகம்: பாகிஸ்தானில் மனைவி-கைக்குழந்தையை கவுரவக் கொலை!!

பாகிஸ்தானில் மனைவி மற்றும் 10 மாத கைக்குழந்தையை கவுரவக் கொலை செய்த வாலிபர் சரண் அடைந்தார்.

லாகூர் பழைய நகரை சேர்ந்தவர் சாஜித் அகமது. இவரது மனைவி சுமாரியா பீபி (30). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகின்றன. 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், தன் மனைவி சுமாரியாவுக்கு வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பு இருப்பதாகவும் மூன்றாவது பிறந்த ஆண் குழந்தை (தற்போது 10 மாதம்) தனக்கு பிறக்கவில்லை என்றும் சாஜித் சந்தேகப்பட்டார்.

மூன்றாவது குழந்தைக்கு நீரிழிவு நோய் இருந்தது. தனக்கோ, தன் மனைவிக்கோ அந்த நோய் இல்லாதபோது, குழந்தைக்கு எப்படி நோய் வந்தது? என்று சாஜித் கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பாக கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

நேற்றும் இதேபோல் சண்டை ஏற்பட்டது. அப்போது தன் மனைவி மற்றும் 10 மாத குழந்தையை சாஜித் சுட்டுக்கொன்றார். பின்னர் காவல் நிலையத்தில் சரண் அடைந்து குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த குற்றத்தை செய்யத்தூண்டியதாக அவரது சகோதரியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தானில் கடந்த ஆண்டு 860 பெண்கள் கவுரவக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மது அருந்திய மூவர் பலியான வழக்கில் திருப்பம்: தந்தையைக் கொல்ல மகள் வைத்த விஷம் மூவரின் உயிரைப் பறித்தது

imagesதிருவாரூர் மாவட்டம், வலங்கை மான் அருகே டாஸ்மாக் மது குடித்த நால்வரில் மூவர் இறந்த சம்பவத்தில் பாலியல் தொல்லை அளித்து வந்த தந்தையைக் கொலை செய்ய மதுவில் விஷம் கலந்த மகளை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், கீழ அமரா வதி சிவன் கோயில் தெருவைச் சேர்ந்த ராமரத்தினம்(40), தேவேந் திரன்(45), கஜேந்திரன்(40), தென்கரை குச்சுப்பாளையத்தைச் சேர்ந்த ஆனந்த்(35) ஆகியோர் நண்பர்கள். கூலித் தொழிலாளர் களான நால்வரும் தினந்தோறும் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள்.

தீபாவளி பண்டிகைக்காக இரு மதுபாட்டில்களை வாங்கி அன்று ஒரு பாட்டில் மதுவைக் குடித்து விட்டு, மற்றொரு பாட்டிலை மறுநாள் இரவு குடித்துள்ளனர்.

சிறிது நேரத்திலேயே நால்வருக் கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. கஜேந்திரனைத் தவிர மற்ற மூவரும் உயிரிழந்தனர். ஒரே ஊரில் மது குடித்து மூவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.தர்மராஜன், கும்பகோணம் உதவி காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், வலங்கைமான் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் மற்றும் போலீஸார் சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் திருப்பம்…

போலீஸாரின் விசாரணையில் ராமரத்தினம் தனது மூத்த மகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை அளித்ததுடன் செல்போனில் ஆபாச படங்களைக் காட்டி தொல்லை கொடுத்து வந்தாராம்.

இதனால் தந்தை மீது ஆத்திரம் அடைந்த அவர் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிக் கொல்லி மருந்தை ராமரத்தினம் வைத்திருந்த மது பாட்டிலில் கலந்துவிட்டாராம்.

இதனை அறியாமல் குடித்த ராமரத்தினம் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் இறந்துவிட்டனர். விசாரணையில் இது தெரியவந்ததை அடுத்து போலீஸார் ராமரத்தினத்தின் மூத்த மகளை கைது செய்து வலங்கைமான் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

நீதிமன்ற நடுவர் உமாமகேஸ்வரி, அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து திருவாரூரில் உள்ள மகளிர் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

Exit mobile version