இங்கிலாந்தில் புடவை அணிந்து தீபாவளியை கொண்டாடிய பிரதமர் டேவிட் கேமரூன் மனைவி சமந்தா கேமரூன் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் தீபாவளி திருநாள் கடந்த வாரம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இங்கிலாந்து நாட்டிலும் 5 நாட்கள் தீபாவளி கொண்டாடப்பட்டது. வெஸ்ட்மின்ஸ்டரில் 5 நாட்கள் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் தனது மனைவி சமந்தா கேமரூடன் கலந்து கொண்டார்.
இந்துக்கள் பண்டிகையாக தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சமந்தா கேமரூன் புடவை அணிந்து வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 43 வயதான சமந்தா கேமரூன் வண்ணமயமான உடையை அணிந்திருந்தார்.
சமந்தா கேமரூன் ராயல் புளு நிறத்திலான புடவை அணிந்திருந்தார். புடவை தங்க நிறத்திலான பார்டர் அமைக்கப்பட்டு இருந்தது.
லண்டன் தீபாவளியில் அசத்திய பிரதமர் டேவிட் கமரன்…(வீடியோ)
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரன் லண்டனில் இடம்பெற்ற தீபாவளி பண்டிகை நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தார். தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் உலகத் தமிழர்களுக்கு பிரதமர் டேவிட் கமரன் தனது வாழ்த்துக்களையும் இதன்போது தெரிவித்துக் கொண்டுள்ளார்.
British Prime Minister David Cameron Celebrates Hindu New Year at London Mandir -2013