ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Sunday, September 24
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»சிறப்புக்கட்டுரைகள்»யார் இந்த சுப்பிரமணிய சாமி?
    சிறப்புக்கட்டுரைகள்

    யார் இந்த சுப்பிரமணிய சாமி?

    AdminBy AdminOctober 29, 2014Updated:November 2, 2014No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தமிழ் (தேசிய) ஊடகங்கள், அவரை  மக்கள் ஆதரவற்ற தனி நபர் போன்றும், அரசியல் கோமாளி போன்றும் சித்தரித்து வருகின்றன. அவர்களில் பலருக்கு சு.சாமி புலிகளுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிப்பது மட்டுமே பிடிக்கவில்லை. ஆனால், அதே சு.சாமி முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கும் நேரத்தில் யாரும் கண்டிப்பதில்லை.

    சு. சாமி ஒரு சி.ஐ.ஏ. உளவாளி என்பது ஏற்கனவே பலருக்கும் தெரிந்த விடயம் தான். ராஜீவ் காந்தி கொலையை விசாரித்த ஜெயின் கமிஷன் அறிக்கையில் அது விபரமாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    சுப்பிரமணிய சாமி மட்டுமல்லாது, புலிகள், சி.ஐ.ஏ., மொசாட் ஆகிய அந்நிய சக்திகளும், ராஜீவ் கொலையில் சம்பந்தப் பட்டுள்ளதாக, ஜெயின் கமிஷன் எழுதி இருந்தது.

    ஆனால், தமிழினவாதக் குழுக்களும், தமிழ் ஊடகங்களும், சுப்பிரமணிய சாமி மட்டுமே ராஜீவ் காந்தியை கொலைக்கு காரணம் என்பது போல, கால்வாசி உண்மையை சொல்லிக் கொண்டிருந்தன.

    சு.சாமிக்கும், சி.ஐ.ஏ.க்கும் இடையிலான உறவு, இன்று நேற்று ஆரம்பிக்கவில்லை. எழுபதுகளில் இருந்தே தொடர்ந்து இருந்து வருகின்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து, காங்கிரஸ் கட்சி மட்டுமே தொடர்ச்சியாக ஆண்டு கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது.

    அது பனிப்போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலம். சர்வதேச அரசியலில் இந்தியாவின் முக்கியத்துவம் கருதி, சோவியத் யூனியன் அதனுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது. அளவு  கடந்த  சோவியத்  இராணுவ, நிதியுதவி பெற்று வந்த, சோஷலிச முகாமை சேராத நாடு இந்தியா ஆகும்.

    இந்தியாவில் இந்திரா காந்தி நடைமுறைப் படுத்திய அவசர கால சட்ட ஆட்சியின் விளைவாக பாதிக்கப் பட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்தன. 1977 ம் ஆண்டு, பொதுத் தேர்தல் அறிவிக்கப் பட்ட நேரம், எதிர்க் கட்சிகளின் கூட்டமைப்பான ஜனதாக் கட்சி உருவானது.

    சுப்பிரமணிய சாமி அதன் நிறுவனர்களில் ஒருவர் ஆவார். இந்திரா காந்தியின் அவசரகால ஆட்சி, பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கி இருந்ததால், தேர்தலில் ஜனதாக் கட்சியை வெல்ல வைத்தனர். மொரார்ஜி தேசாய், இந்தியாவின் முதலாவது காங்கிரஸ் அல்லாத பிரதமர் ஆனார்.

    அமெரிக்காவில் புலிட்சர் பரிசு பெற்ற எழுத்தாளர் Seymore Hersh, எழுதிய   The Price of Power எனும்  நூலில், மொரார்ஜி தேசாய் ஒரு சி.ஐ.ஏ. உளவாளி என்று குறிப்பிடப் பட்டிருந்தது. மொரார்ஜி தேசாய் அந்த எழுத்தாளருக்கு எதிராக நஷ்டஈடு கோரி வழக்குத் தொடர்ந்திருந்தார்.

    ஆரம்பத்தில் அதனை அலட்சியப் படுத்தியதாக காட்டிக் கொண்ட சி.ஐ.ஏ., ஜனதாக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இருந்த சு.சாமிக்கு ஒரு டெலேக்ஸ் அனுப்பியது.

    சி.ஐ.ஏ. யின் மும்பைக் கிளை அலுவலகத்தில் இருந்து, மொரார்ஜி தேசாயின் கட்சியை தொடர்பு கொண்ட விபரம் கூட சு.சாமி மூலம் தான் வெளியானது. (ஆதாரம் : CIA: Club der Mörder, Kunhanandan nair, Michael Opperskalski)

    எழுபதுகளில் ஜனதாக் கட்சியை ஆதரித்து வந்த சி.ஐ.ஏ., பின்னர் அதன் தேவை முடிந்ததும் கை விட்டு விட்டது. தொண்ணூறுகளின் பின்னர், பாஜக என்ற குதிரையின் மேல் பந்தயம் கட்டி வந்தது.

    அதனால், சி.ஐ.ஏ.யின் நம்பிக்கைக்குரிய முகவர் சுப்பிரமணிய சாமி, 2013 ஆம் ஆண்டு, ஜனதாக் கட்சியை கலைத்து விட்டு, பாரதிய ஜனதாக் கட்சியில் சேர்ந்து விட்டார்.

    2009 ஆம் ஆண்டு, ஈழப்போரின்  இறுதியில்  திடீரென முளைத்த  “நாம் தமிழர்”, “மே 17” போன்ற தமிழின பிழைப்புவாத இயக்கங்கள், “தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பது தான் தமது இலட்சியம்” என்று பகிரங்கமாகவே சொல்லி வந்தன. அதற்காக, வெளிப்படையாகவே நரேந்திர மோடியையும், பாஜக வையும் ஆதரித்து பிரச்சாரம் செய்து வந்தன.

    இதிலே வேடிக்கை என்னவென்றால், தமிழகத்தில் இயங்கும் தமிழின பிழைப்புவாத இயக்கங்கள், தம்மை “புலி ஆதரவாளர்கள்” போன்று காட்டிக் கொண்டன. சுப்பிரமணிய சாமி தன்னை ஒரு “புலி எதிர்ப்பாளர்” போன்று காட்டிக் கொண்டார்.

    ஆனால், இரண்டு தரப்பினரும், பாஜக வின் தேர்தல் வெற்றிக்காக பாடுபட்டார்கள். இன்று, “புலி ஆதரவாளர்களின்” தயவில், ஒரு “புலி எதிர்ப்பாளர்” மோடியின்  அரசாங்கத்தில் வீற்றிருக்கிறார்!  உலகில் வேறெந்த நாட்டிலும், இப்படி ஒரு வினோதமான கூட்டணியை காண முடியாது.

    இதிலே முரண்நகை எதுவும் கிடையாது. கூட்டிக் கழித்துப் பார்த்தால், கணக்கின் விடை சரியாகத் தான் வருகின்றது. பல உலக நாடுகளிலும் உள்ள, குறுந் தேசியவாத, மதவாத அரசியல் சக்திகள், சும்மா பாசாங்குக்குக் கூட, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் பேசுவதில்லை.

    இந்தியாவில் இன்னும் எத்தனை பேர் சி.ஐ.ஏ. சம்பளப் பட்டியலில் இருக்கிறார்கள் என்ற விபரம், விக்கிலீக்ஸ் மாதிரி, யாராவது அமெரிக்க தூதரக கேபிள்களை வெளியிட்டால் தான் தெரிய வரும்.

    இந்திய அமைதிப்படை இலங்கையில் கால் பதித்ததன் நோக்கம் என்ன?? (பகுதி-4)

    Post Views: 45

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    கேணல் மும்மர் கடாபி: இந்திரா காந்தியை லிபியா வரவழைக்க கடைபிடித்த உத்தி என்ன தெரியுமா?

    September 24, 2023

    நேட்டோ ஏகாதிபத்தியமும் லிபியா வெள்ளப் பேரழிவும்

    September 19, 2023

    பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலைக்காக TMVP தலைவர் “பிள்ளையான்” எப்படி கைது செய்யப்பட்டு 5 வருட சிறைவாசத்தின் பின்னர் விடுவிக்கப்பட்டார்??

    September 16, 2023

    Leave A Reply Cancel Reply

    October 2014
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
    « Sep   Nov »
    Advertisement
    Latest News

    கேணல் மும்மர் கடாபி: இந்திரா காந்தியை லிபியா வரவழைக்க கடைபிடித்த உத்தி என்ன தெரியுமா?

    September 24, 2023

    உடுக்கை Entrance; திரிசூல Light; சிவன் வடிவில் உருவாகும் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம்!-வீடியோ

    September 24, 2023

    என் கணவர் பாக்ஸிங் செய்ய ரெடி.. சீமானின் சவாலை ஏற்று நாள் குறித்த வீரலட்சுமி..!

    September 24, 2023

    2 குழந்தைகளுடன் பெண் போலீஸ் உயிரை மாய்த்த விவகாரம்: கள்ளக்காதல் பிரச்சனையில் போலீஸ்காரரும் தற்கொலை

    September 24, 2023

    மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் படுகொலை – ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்ட நிலையில் சடலங்கள் மீட்பு- சந்தேகநபர்களும் இலங்கையர்கள்

    September 23, 2023
    • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
    • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
    • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
    • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?
    • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • கேணல் மும்மர் கடாபி: இந்திரா காந்தியை லிபியா வரவழைக்க கடைபிடித்த உத்தி என்ன தெரியுமா?
    • உடுக்கை Entrance; திரிசூல Light; சிவன் வடிவில் உருவாகும் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம்!-வீடியோ
    • என் கணவர் பாக்ஸிங் செய்ய ரெடி.. சீமானின் சவாலை ஏற்று நாள் குறித்த வீரலட்சுமி..!
    • 2 குழந்தைகளுடன் பெண் போலீஸ் உயிரை மாய்த்த விவகாரம்: கள்ளக்காதல் பிரச்சனையில் போலீஸ்காரரும் தற்கொலை
    Recent Comments
      Quick Links
      • முகப்பு
      • இந்தியா
      • உலகம்
      • வெளிநாட்டு
      • சினிமா
      • விளையாட்டு
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • வினோதம்
      • அரசியல்
      Quick Links
      • கட்டுரைகள்
      • தொடர் கட்டுரைகள்
      • கவிதைகள்
      • கலைகள்
      • வீடியோ
      • புகைப்பட தொகுப்பு
      • தொழில்நுட்பம்
      • வேலைவாய்ப்பு
      • கல்வி
      Quick Links
      • ஆரோக்கியம்
      • அந்தரங்கம்
      • ஆன்மீகம்
      • சுற்றுலா
      • சிறப்பு செய்திகள்
      • வினோதம்
      BRAKING NEWS
      • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
      • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
      • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
      • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?
      • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்
      2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

      swissreplicas.to

      bestwatchreplica.co
      replica watches

      swiss replica website

      fake rolex for sale
      relogios replicas
      Go to mobile version