மீபத்தில் ‘ஹேப்பி என்டிங்’ என்னும் இந்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டில் திரைப்படத்தின் கதாநாயகியான நடிகை இலியானாவும் கலந்து கொண்டார்.
அப்படி கலந்து கொள்ளும் போது அவர் மிகவும் அழகான கருப்பு நிற மின்னும் குட்டையான கவுனை அணிந்து வந்திருந்தார். இந்த உடையில் இவர் சற்று ஹாட்டாக காணப்பட்டார்.
இதற்கு முக்கிய காரணம் அவர் அணிந்து வந்த டிசைனர் அர்மானி கவுன் தான். ஏனெனில் இந்த உடையானது குடையாக இருப்பதுடன், பக்கவாட்டில் தொடை தெரியுமளவு இடைவெளி கொண்டது. அதுமட்டுமின்றி, இது ஸ்ட்ராப்லெஸ் கவுன் என்பதால், இவர் இன்னும் ஹாட்டாக காணப்பட்டார்.
பொதுவாக இலியானா சிக்கென்று ஒல்லியாக இருப்பார். அதில் இந்த உடை அணிந்திருப்பதால், அவரது உடலமைப்பு அழகாக காணப்பட்டது.
மேலும் இவர் இந்த உடைக்கு ஏற்றவாறு ஹாட் லுக்கை பெறும் வகையில் கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப் போட்டு, லேசாக பிங்க் பிளஷ் அடித்து, உதடுகளுக்கு மின்னும் லிப்கிளாஷ் போட்டு வந்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல் அவர் அட்டகாசமாக உடைக்கு பொருத்தமாக கருப்பு நிற ஹை ஹீல்ஸ் அணிந்து வந்திருந்தது, இவரை இன்னும் சிறப்பாக வெளிக்காட்டியது.
என்ன நண்பர்களே! உங்களுக்கு இலியானாவின் இந்த லுக் பிடித்துள்ளதா…?
Aaha Anjali – Diwali Special Program
கருப்பு நிற புடவையில் செக்ஸியாக வந்த ஸ்ருதிஹாசன்!!!
ரசிகர்களை கவரும் வண்ணம் விதவிதமான ஆடைகளை அணிந்து வருபவர்களில் ஒருவர் தான் ஸ்ருதிஹாசன். பொதுவாக இது நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் போது மார்டனான ஆடைகளைத் தான் தேர்ந்தெடுத்து அணிந்து வருவார்.
அப்படி அணிந்து வரும் ஆடைகள் அனைத்துமே சற்று செக்ஸியாகத் தான் இருக்கும். ஆனால் சமீபத்தில் நடந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கு ஸ்ருதிஹாசன் புடவையிலும், லெஹெங்காவிலும் வந்திருந்தார்.
அதில் ஒன்று கோல்டன் பார்டன் கொண்ட கருப்பு நிற புடவை, மற்றொன்று சிவப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் லெஹெங்கா. இந்த இரண்டு உடையிலுமே ஸ்ருதிஹாசன் கவர்ச்சியாகத் தான் காணப்பட்டார்.
அதிலும் கருப்பு நிற புடவையை எடுத்துக் கொண்டால், அதில் ஸ்ருதியின் அழகிய நெளிவுகள் காணப்பட்டது. இருந்தாலும் இவர் இந்த புடவைக்கு மேற்கொண்டு வந்த ஸ்டைல் அவ்வளவு அழகாக இல்லை
குறிப்பாக ஸ்ருதிஹாசன் புடவைக்கு மேற்கொண்டு வந்த ஹேர் ஸ்டைல் தான் அவரது அழகையே கெடுத்தது. இருந்தாலும் அவரது அந்த வட்ட வடிவ சிவப்பு நிற பொட்டு அவரை பாரம்பரிய தோற்றத்தில் வெளிக்காட்டியது.
இது ஸ்ருதிஹாசன் பூஜை படத்தின் இசை வெளியீட்டின் போது அணிந்து வந்த சிவப்பு மற்றும் கோல்டன் நிறங்கள் கலந்த ஸ்ட்ராப்லெஸ் லெஹெங்கா. இந்த உடையிலும் இவர் செக்ஸியாக காணப்பட்டதுடன், இந்த உடையில் பளிச்சென்று தெரியும் வண்ணம் மேக்கப் போட்டு வந்திருந்தார்.
என்ன நண்பர்களே! உங்களுக்கு ஸ்ருதிஹாசனின் எந்த லுக் பிடித்துள்ளது…?