Site icon ilakkiyainfo

ஸ்ரீரங்கத்துப் பொண்ணு என்று சொன்னதால் ஸ்ரீரங்கத்து மக்கள் என்ன சொல்கிறார்கள்

அம்மா ஜெயிலுக்குப் போன அதிர்ச்சியில் 150 பேர் இறந்தாங்க. அதில் ஒண்ணும் ஆச்சரியம் இல்லை. அவங்க மக்களுக்கு நிறைய நல்லது செய்து கொடுத்தாங்க. எங்களுக்கு அவங்க, அவங்களுக்கு நாங்க. அவங்க மீண்டும் இங்கதான் போட்டியிடுவாங்க. இனிமேல் எல்லாம் நல்லதாகவே நடக்கும்!

சொத்து வழக்கில் ஜெய­ல­லி­தா­வுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் அளித்­ததைத் தொடர்ந்து அவர் வென்ற ஸ்ரீரங்கம் தொகுதி மக்­களில் பலரும் தீபா­வ­ளியை முன்­கூட்­டியே கொண்­டா­டி­விட்­டார்கள்.

குடும்­பத்தில் பலரும் படித்து பல நல்ல பத­வி­க­ளிலும் வெளி­நா­டு­க­ளிலும் இருக்க, திரா­விடக் கலாசா­ரங்­க­ளுக்குள் சிக்­கி­வி­டாமல் தனி மனித துதி­க­ளிலும் தங்­களை ஈடு­ப­டுத்­திக்­கொள்­ளா­த­வர்கள் ஸ்ரீரங்­கத்­து­வா­சிகள்.

ஆனால், இந்தத் தொகு­தியில் போட்­டி­யிடும் போது நான் ஸ்ரீரங்­கத்துப் பொண்ணு என்று ஜெய­ல­லிதா சொன்­ன­தாலோ என்­னவோ இந்த கட்டுகளையெல்லாம் உடைத்­தெ­றிந்து ஜெய­ல­லி­தாவின் மீது பாசத்தை வெளிப்­ப­டுத்­தி­னார்கள்.

சுப்ரீம் கோர்ட் உத்­த­ரவு பிறப்­பிப்­ப­தற்கு முதல் நாளான 16ஆம் திகதி ஸ்ரீரங்­கத்தில் பெரும்­பா­லான வீடு­களில் விளக்­கேற்றி வைத்து பிரார்த்­தனை செய்தனர்.

எந்த அறி­விப்பும் இல்­லாமல் அ.தி.மு.க. கட்­சிக்கு சம்­பந்­த­மில்­லாத பலரின் வீடு­க­ளிலும் இந்தக் காட்­சியைக் காண முடிந்­தது. மறுநாள் அக்.17ஆம் திகதி காலையில் ஜெய­ல­லி­தா­வுக்கு ஜாமீன் கிடைத்த தகவல் பர­வி­யதும் எல்லா வீடு­க­ளி­லுமே ஸ்வீட் கொடுக்கத் துவங்­கினர். கோயி­லுக்குச் செல்­வோ­ருக்கு வழி நெடுக ஸ்வீட் கிடைத்­தது.

இந்தத் தொகுதி மக்­களின் மன­நி­லையை அறிய சில­ரிடம் பேசி­ய­போது அவர்கள் கூறி­ய­தா­வது;

தெற்கு உத்­திர வீதியில் உள்ள ஒரு வீட்­டுக்குள் நுழைந்­த­துமே அந்த வீட்டில் வசிக்கும் இல்­லத்­த­ரசி ஜெயந்தி ஸ்வீட் தட்டை நீட்­டினார்.

அவர் கூறி­ய­தா­வது;

அம்மா இந்த முறை மிகவும் சிறப்­பான ஆட்சி செஞ்­சாங்க. சாதா­ரண மக்­களின் சாப்­பாட்டில் இருந்து படிப்பு வரைக்கும் எதுக்­குமே சிர­மப்­ப­டவே இல்லை. லேடீ­ஸூக்கு நாப்கின் இல­வ­ச­மாக கொடுத்­தாங்க. ரிக் ஷாக்காரர் பத்து ரூபாய்க்கு அம்மா உண­வ­கத்­துல வயி­றார சாப்­பிட முடிஞ்­சது.

அம்மா குடிநீர், அம்மா மினி பஸ்ன்னு எல்­லாமே மக்­க­ளுக்­குப்­பி­டிச்­சு­ருந்­துச்சு. சந்­தோ­ஷ­மான சூழ்­நி­லை­யில அம்மா திடீர்ன்னு ஜெயி­லுக்குப் போனது பெண்­களால் சகிச்­சுக்க முடி­ய­லேங்­க­ற­துதான் உண்மை. எங்­களால் தாங்­கிக்க முடி­யல. நாங்க தாயார் சந்­நி­தியில் போய் குத்­து­வி­ளக்குப் பூஜை நடத்தினோம். பாபா கோயிலில் ஆரத்தி பூஜை நடத்­தினோம்.

மத்­த­வங்­க­ளுக்கு அர­சி­யலா இருக்­கலாம். ஸ்ரீரங்கம் மக்­க­ளுக்கு இத்­தனை நாளும் சோகம்தான்.

கடந்த சனிக்­கி­ழமை ஜாமீன் கொடுத்­ததா சொல்­லிட்டு திரும்­பவும் இல்­லைன்னு சொன்­னதும் நிறையப் பேரு அழு­தாங்க. அதைப் பார்க்­க­ற­வுங்­க­ளுக்கே துக்கம் தொண்­டையை அடைச்­சது.

அதனால் எங்­க­ளுக்கு இன்­னைக்­குத்தான் தீபா­வளி. எங்க தொகு­திக்கு கடைசி வரைக்கும் அம்­மாதான் வேண்டும். வேற யார் வந்­தாலும் ஏத்­துக்க மாட்டோம். வட­கி­ழக்குப் பரு­வ­மழை தென்­மேற்குப் பரு­வ­மழை எல்லாம் பொய்த்­து­விட்­டதா சொன்­னாங்க.

ஆனால் ஜாமீன் கொடுத்த தகவல் வரும்­போது ஆரம்­பித்த மழை கொட்டோ கொட்­டுன்னு கொட்டித் தீர்த்­து­விட்­டது. அம்­மாவின் விடு­தலை வருண பக­வா­னையே மகிழ வைத்­து­விட்­டது. இப்­படி உரு­கிக்­கொண்­டி­ருந்­த­வ­ரிடம் விடை பெற்றோம்.

அடுத்து பெட்­டிக்­கடை வைத்­தி­ருக்கும் குக­நா­தனைச் சந்­தித்தோம். அவர், அம்மா ஒரு நம்­பிக்கை நட்­சத்­திரம், அவங்­களை நினைத்­தாலே ஒரு பாசிடிவ் எனர்­ஜிதான்.

அவங்­க­ளுக்கு எப்­ப­வுமே பாசிடிவ் திங்க்­கிங்தான். ஒரு விச­யத்தை நினைச்­சுட்டா செய்து முடிச்­சுட்­டுத்தான் விடு­வாங்க. கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக நல்ல ஆட்சி கொடுத்­தாங்க. அரசு திட்­டங்கள் சரி­யாக மக்­க­ளுக்குச் சென்­ற­டை­யும்­படி அதி­கா­ரி­களை வேலை வாங்­கி­னாங்க.

அப்­ப­டிப்­பட்ட நேரத்தில் எப்­போதோ நடந்த பிரச்­சி­னைக்கும் போடப்­பட்ட இந்த வழக்கு நிறைய கஷ்­டத்தைக் கொடுத்­து­ருச்சு. தான் எந்தத் தவறும் செய்யலைங்­கிற மன உறு­தி­யுடன் இருந்து இன்­னைக்கு சட்­டப்­படி ஜாமீன் வாங்கி வெளியே வந்­தி­ருக்­காங்க. இந்த சம்­ப­வத்­தால அவங்­க­ளுக்கு செல்­வாக்கு அதி­க­ரிச்­சி­ருக்­கி­றது என்­ப­துதான் உண்மை என்றார்.

ஸ்ரீரங்­கத்தின் தெற்குச் சித்­திரை கடை வீதியில் காய்­கறி வியா­பாரம் செய்யும் சந்­திரா கூறி­ய­தா­வது,

அம்மா சீக்­கிரம் ஜாமீன்ல வர­ணும்னு விளக்கு ஏத்தி பிரார்த்­தனை பண்­ணி­னாங்க. அப்போ என்­னைத்தான் கூப்­பிட்டு முதல் விளக்கு ஏத்தச் சொன்­னாங்க. நாம எல்லாம் கட்­சிக்­கா­ரங்க கிடை­யாது. நமக்கு உழைச்­சாத்தான் சோறு.

ஆனால் அது என்­னமோ இந்­தம்மா மேல நமக்கு ஒரு பாசமாப் போச்சு. எங்க ஊரு பக்கம் நிறைய நல்­லது பண்­ணி­யி­ருக்­காங்க. எங்க பேரப்­புள்­ளை­க­ளுக்கு கம்ப்­யூட்டர், சைக்கிள் எல்லாம் கொடுத்து நல்லாப் படிக்க வச்­சி­ருக்­காங்க.

அந்­தம்மா ஜெயி­லுக்குப் போன அதிர்ச்­சி­யில 150 பேர் வரை இறந்­ததா சொல்­றாங்க. அதுல ஒண்ணும் ஆச்­ச­ரியம் இல்ல. அவங்க மக்­க­ளுக்கு நெறைய நல்­லது செய்­து­கொ­டுத்­தாங்க. எங்­க­ளுக்கு அவங்க, அவங்­க­ளுக்கு நாங்­கன்னு ஆகிப்­போச்சு. அவங்க இங்­கதான் திருப்­பியும் போட்­டி­யி­டு­வாங்க. கடவுள் புண்­ணி­யத்­துல இனிமே எல்லாம் நல்­லதா நடக்கும் என்றார்.

இன்­ஜி­னீ­யரிங் கல்­லூரி மாணவர் குமா­ர­சாமி கூறி­ய­தா­வது,

நான் தனியார் இன்­ஜி­னீ­யரிங் கல்­லூ­ரியில் பி.இ.கம்ப்­யூட்டர் சயின்ஸ் படிக்­கிறேன். அவங்க மேல சொத்து வழக்­கு­போட்டு ஜெயி­லுக்கு அனுப்­பி­னாங்க. அதைப் பத்தி எங்­க­ளுக்குத் தெரி­யாது. நான் படிக்­கிற போது ஸ்கூல்ல கம்ப்­யூட்­ட­ரையே பார்த்­த­தில்லை.

இப்ப பிளஸ் டூ படிக்­கிற பிள்­ளை­க­ளுக்கே லேப்டாப் கொடுத்து, அவங்­கள் அதைப் பயன்­ப­டுத்தி நல்லாப் படிக்­கி­றாங்க. தூரத்­துல ஸ்கூல் இருக்­கி­ற­தால ஸ்கூலுக்குப் போகா­த­வங்க எல்­லாரும்    இப்ப சைக்கிள் இருக்­கி­ற­தால எல்­லாரும் படிப்­பை­வி­டாம படிக்­கி­றாங்க.

இன்­னிக்கு இருக்­கிற அர­சி­யல்­வா­தி­களில் இவங்க எவ்­வ­ளவோ நல்­ல­வங்க. எப்­ப­டியும் வழக்­குல விடு­த­லை­யாகி இந்தத் தொகுதி எம்.எல்.ஏ.வா வரு­வாங்­கன்னு நம்­பிக்கை இருக்கு என்றார்.

நம்மைத் தேடி வந்து பேசிய பள்ளி ஆசி­ரியை பிரியா ராக­வேந்­திரன் கூறி­ய­தா­வது,

அவங்க ஜெயி­லுக்குப் போன அன்­னைக்கு எங்க வீட்­டுக்குப் பக்­கத்­தில உள்ள ஒரு 88 வயசு பாட்டி சாப்­பி­டவே இல்லை. இன்­னைக்­குத்தான் எல்­லோரும் சந்­தோ­ஷமா இருக்கோம். நாக்­கூ­சாம பேச­ற­வங்­க­ளுக்கு இன்­னைக்கு பெய்த மழையே பதில் சொல்லும். ஒரு குடும்­பத்தை ஒழுங்கா நடத்­தவே இப்­படி சிர­மப்­ப­டு­கிறோம். அவங்க ஒரு மாநி­லத்­தையே ஆட்சி செய்­யி­ற­வங்க.

அவங்­க­ளுக்கு எத்­தனை சிர­மங்கள் இருக்கும்? அவங்­க­ளுக்கு தண்­டனை என்­றதும் மன­சுக்குக் கஷ்­டமா போச்சு. இப்ப ஜாமீன்ல வெளியே வந்­துட்­டாங்க. அவங்க ரொம்ப வைராக்­கி­ய­மா­ன­வங்க. சீக்­கி­ரமே சி.எம்.ஆவாங்க என்றார்.

இவ்­வாறு அர­சியல் சார்­பற்­ற­வர்­களும் உருக்­க­மாகப் பேசி­யது ஆச்­ச­ரி­ய­ம­ளித்­தது!

ஸ்ரீரங்கம் தொகு­தியில் அக்.17ஆம் திக­தி­யி­லி­ருந்து மூன்று நாட்­க­ளுக்கு பட்­டாசு வெடித்தும் ஸ்வீட் கொடுத்தும் அ.தி.மு.கவினர் கொண்­டா­டி­னார்கள். அ.தி.மு.க.அனு­தாபி ஒருவர் நம்­மிடம் இப்­படிச் சொன்னார்.

1984இல் உடல்­நிலை சரி­யில்­லாமல் சிகிச்­சைக்­காக அமெ­ரிக்­கா­வுக்குப் போனார் எம்.ஜி.ஆர். அப்­போது அவரைத் தங்கள் குடும்பத் தலைவனாகவே எண்ணி ஆளாளுக்குப் பிரார்த்தனை செய்தார்கள்.

அந்த பிரார்த்தனைகளின் பலனாக அவர் மீண்டு வந்தார். இப்போதும் அதே போலத்தான். மிகச்சிறப்பான ஆட்சியைத் தந்து கொண்டிருந்த அம்மாவுக்கு ஒரு சோதனை வந்தபோது ஏழை மக்களால், இல்லத்தரசிகளால் ஏதும் செய்ய முடியவில்லை.

அவர்கள் மனதாரப் பிரார்த்தனை செய்தார்கள். அதற்குப் பலனாகவே அம்மாவும் சிறை மீண்டு ஜாமீனில் வந்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

ஜெயலலிதாவே தங்கள் தொகுதிக்கு மீண்டும் எம்.எல்.ஏவா வர வேண்டும் என்று ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள் விரும்புவதை அவர்களின் பேச்சுக்கள் மேற்கண்டவாறு வெளிப்படுத்துகிறது!.

Exit mobile version