மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவின் கிம் கர்தஷியான் என்பது இவரது செல்லப் பெயர். ஆனால் இவரைச் சுற்றியிருக்கும் ஆபத்துக்களையும், எதிர்ப்புகளையும் பார்த்தால் மிரண்டு போய் விடுவீர்கள். எப்போதும் ஆயுதம் தாங்கிய கமாண்டோக்களின் பாதுகாப்புடன் கவர்ச்சிகரமாக வலம் வரும் இவர்தான், மெக்சிகோவின் அதி பயங்கரமான போதைப் பொருள் கும்பலின் தலைவி இந்த கிளாடியா ஓச்சாவோ.
கிளாடியா பார்க்க மட்டுமல்ல, செயல்களிலும் பயங்கரமாக இருக்கிறார். கவர்ச்சிகரமாக, கட்டழகோடு கிட்டத்தட்ட கிம் கர்தஷியானின் அங்க அடையாளங்களுடன் காணப்படும் கிளாடியோ உலகின் மிகக் கொடூரமான கொலைகாரர்கள் கூட்டத்திற்குத் தலைமை வகிப்பவர் என்றால் நம்ப முடிகிறதா..
ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். இவரது டிவிட்டர் பக்கம் மிகப் பிரபலம். அதில் இவரது கவர்ச்சிகரமான செல்பிகளை நிறைய பார்க்கலாம். தனது உடல் கவர்ச்சியை முழுவதுமாக வெளிக்காட்டும் படங்களைத்தான் போட்டு நிரப்பி வைத்துள்ளார் கிளாடியா.
கிளாடியா உண்மையில் கோடீஸ்வரக் கொலைகாரி ஆவார். இவரது தலைமையில்தான் உலகின் மிகக் கொடூரமான போதைப் பொருள் கும்பல் என்று அமெரிக்காவால் வர்ணிக்கப்படும் லாஸ் ஆன்ட்ராக்ஸ் என்ற கும்பல் இயங்கி வருகிறது.

இந்தக் கும்பலை உலகின் மிகக் கொடூரமான போதைப் பொருள் கும்பல், உலகின் ஈவு இரக்கமற்ற கொலைகாரர்கள் என்று அமெரிக்கா மேலும் வர்ணிக்கிறது.
ரத்தக் காட்டேரிகள் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் இதுவரை நூற்றுக்கணக்கானோரை கொன்று குவித்துள்ளனர். சமீபத்தில் கட போட்டி போதைப் பொருள் கும்பலைப் பழி தீர்ப்பதற்காக சினலோவா என்ற இடத்தில் பலரைக் கொன்று குவித்தது இக்கும்பல்.
சில காலத்திற்கு முன்பு 3 பேரைக் கொன்று உடல்களை பாலத்தில் தொங்க விட்டு விட்டனர் இந்த அமைப்பினர். மேலும் வாலிபால் விளையாடிய 8 பேரை சுட்டுக் கொன்றனர்.

அதேபோல போட்டிக் குழு ஒன்றுடன் நடந்த சண்டையில் 30 பேரைப் போட்டுத் தள்ளியவர்கள் இவர்கள்.

இவர்களை மிகவும் அபாயகரமான போக்கிரி ராஜாக்கள் என்கிறார்கள். யார் எதிர்த்தாலு்ம் உடனே பால் ஊற்றி விடுவார்கள். யாராக இருந்தாலும் கவலைப்பட மாட்டார்கள்.

இந்தக் கும்பலின் தலைவராக இருந்தவர் ஜோஸ் ரோட்ரிகோ அரிசிகா காம்போவா. இவரை போலீஸார் மிகுந்த சிரமப்பட்டுக் கைது செய்து விட்டனர். இதைத் தொடர்ந்து அவரது காதலியாக இருந்து வந்த கிளாடியா இப்போது தலைவியாகி விட்டார்.

தனது காதலர் கைதாவது வரை சுதந்திரமாக ஜாலியாக கவர்ச்சிகரமாக உலா வந்து கொண்டிருந்தார் கிளாடியா. துப்பாக்கியை தனது உடலில் உரச விட்டு போஸ் கொடுப்பது, பிகினி உடையில் கையில் துப்பாக்கியைத் தூக்கிப் பிடித்தபடி போஸ் தருவது என்று வலம் வந்து கொண்டிருந்தார்.

ஆனால் இப்போது அப்படி சுதந்திரமாக நடமாட முடியவில்லை. அவருக்கென்று பாடிகார்டுகள், கமாண்டோக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் புடை சூழத்தான் நடமாடி வருகிறார் இந்த மெக்ஸிகோ கிம் கர்தஷியான்.

3 குழந்தைகளுக்குத் தாய் பார்க்க படு பயங்கரமான கவர்ச்சியுடன் இவர் இருந்தாலும் இவருக்கு 3 குழந்தைகளும் உள்ளனர்.
முன்பு இவரை எதிர்க் கோஷ்டி கொடூரமாக சித்திரவதை செய்து கொன்று விட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் உண்மையில் அது கிளாடியா இல்லை. மாறாக கிளாடியா காதலரின் முன்னாள் காதலியான யூரினா காஸ்டில்லா என்பவர் ஆவார். இவர் கிட்டத்தட்ட கிளாடியா போலவே இருப்பார். இந்த பரபரப்பான பிரபலத்தை வைத்து அப்படியே லைம்லைட்டுக்கு வந்து விட்டார் கிளாடியா.