யாழ் சிறுப்பிட்டிப் பகுதியில் 13 வயதுச் சிறுவனை அவனது பெற்றோா் கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். திட்டமிட்டு அவனைக் கொலை செய்வதற்கு உத்தேசித்திருக்கும் குறித்த பெற்றோரை பொலிசாா் கைது செய்வது அவசியம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா்.
தவறான பக்கத்தால் மோட்டாா் சைக்கிள் ஓடும் இந்தச் சிறுவனை இவ்வாறு தெருவில் விட்ட இவனது பெற்றோா் இவனை எதற்காகப் பெற்றாா்கள் என்பது யோசிக்க வேண்டிய ஒன்றே!! கடந்த வாரமுமு் 16 வயதுச் சிறுவன் வட்டுக்கோட்டையில் பலியானதையும் பாா்த்து திருந்தாதவா்கள் உண்மையில் திட்டமிட்ட கொலைகாரா்களே!
வட்டுக்கோட்டையில் மோட்டாா் சைக்கிள் விபத்தில் இரு இளைஞா்கள் படுகாயம்
2014-10-04
வட்டுக்கோட்டை சங்கரத்தைச் சந்தியில் சற்றுமுன்னர் நடந்த வாகன விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையிலுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.
சித்தன்கேணியிலிருந்து வட்டுக்கோட்டைச்சந்தியை நோக்கி பள்சர் ரக உந்துருளியில் அதிவேகமாக சென்றவரும் நவாலியிலிருந்து இவ்வீதியைச் சந்திக்கும் பிரதான வீதியூடாக சந்தியைக் கடக்க முற்பட்டவருமே மிக மோசமான முறையில் மோதுண்டு விபத்துக்குள்ளாயினர்.
இவர்களில் பள்சர் ரக உந்துருளியில் அதிவேகமாக வந்து மோதியவரின் நிலையே மிகவும் கவலைக்கிடமாயுள்ளது. அவ்வழியால் வாகனங்களில் உயரதிகாரிகளோடு வந்த படையினரே உடனடியாகச் செயற்பட்டு இருவரையும் வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர்.