Site icon ilakkiyainfo

வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியில் பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் : மாமனாருக்கு விளக்கமறியல்

கொள்­ளுப்­பிட்டி பகு­தியில் பிர­பல பெண்கள் பாட­சாலை ஒன்றில் கல்வி பயிலும் 14 வயது மாணவி ஒருவர் அவ­ரது மாம­னாரால் வெள்­ள­வத்தை கடற்கரை பகு­தியில் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­போது வெள்­ள­வத்தை பொலி­ஸா­ரினால் குறித்த மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார்.

38 வய­து­டைய நபர் ஒரு­வரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் பாட­சா­லைக்கு முச்­சக்­கர வண்­டியில் அழைத்து வரும் போதும் இன்னும் பல சந்­தர்ப்­பங்­க­ளிலும் குறித்த மாணவி பல தட­வைகள் சந்­தேக நபரால் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் வெள்­ள­வத்தை பொலிஸார் குறிப்­பிட்­டனர்.

நேற்று முன் தினம் காலை பாட­சாலை மாணவி ஒருவர் சீரு­டை­யுடன் வெள்­ள­வத்தை கடற்­கரை பகு­திக்கு அழைத்துச் செல்­லப்­ப­டு­வ­தையும் பின்னர் அவர் சீரு­டையை மாற்றி வேறு ஆடை­யுடன் ஆட்டோ சார­தி­யுடன் கடற்­க­ரைக்கு செல்­வ­தையும் அவ­தா­னித்த வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்தின் கான்ஸ்­டபிள் ஒருவர் அது தொடர்பில் வெள்­ள­வத்தை பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரி­வுக்கு அறி­வித்­ததை தொடர்ந்தே சந்­தேக நபர் கைது செய்­யப்­பட்டு மாணவி மீட்­கப்­பட்­டுள்ளார்.

வெள்­ள­வத்தை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி உத­ய­கு­மார வுட்­லரின் நேரடி பணிப்பின் பேரில் அந்த பொலிஸ் நிலை­யத்தின் குற்­ற­வியல் பிரி­வுக்­கான பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நாக­ஹ­வத்­தவின் ஆலோ­ச­னையின் கீழ் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் பொறுப்­ப­தி­காரி இஷாரி மற்றும் கான்ஸ்ட­பி­ளான நிலந்த ஆகி­யோரின் நட­வ­டிக்­கையின் மூலமே சந்­தேக நபர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இந்த சம்­பவம் குறித்து வெள்­ள­வத்தை பொலிஸார் மேலும் தகவல் தரு­கையில்,

மட்­டக்­குளி பிர­தே­சத்தைச் சேர்ந்த குறித்த மாணவி தந்­தையின் தொழில் கார­ண­மாக கிரு­லப்­பனை பகு­தியில் வீடொன்றில் தங்­கி­யி­ருந்து கல்­வியை தொடர்ந்­துள்ளார்.

இந்த நிலையில் அந்த மாண­வியின் மாம­னாரே அவரை பாட­சா­லைக்கு அழைத்துச் செல்­வதும் பின்னர் வீட்­டுக்கு கொண்­டு­வந்து சேர்ப்­ப­து­மான வேலையை செய்­துள்ளார்.

சந்­தேக நப­ரான மாமா­வுக்கும் மூன்று பிள்­ளைகள் உள்ள நிலையில் அவ­ரது பிள்­ளைக­ளையும் குறித்த மாண­வி­யி­னையும் சந்­தேக நபர் ஒரே நேரத்­தி­லேயே அழைத்துச் சென்­றுள்ளார்.

எனினும் அவ­ரது பிள்­ளைகள் வேறு பாட­சா­லையில் படிப்­பதால் அவர்­களை முதலில் இறக்­கி­விடும் சந்­தேக நபர் பின்னர் குறித்த சிறு­மியை இறக்கி விடுவ­தாக அழைத்து வந்­துள்­ள­தா­கவும் பின்னர் பாட­சா­லைக்கு தாம­தமாகி விட்­ட­தாக கூறி வேறு உடை­யினை அணி­வித்து வெள்­ள­வத்தை கடற்­க­ரைக்கு அழைத்துச் சென்று உல்­லாசம் அனு­ப­வித்­துள்­ள­மையும் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

பாதிக்­கப்­பட்ட மாண­வியின் தாயார் நோயால் அவ­தி­யு­று­பவர் என தெரி­விக்கும் பொலிஸார் அவ­ருக்கு மருந்து எடுப்­ப­தற்கு சென்ற பல சந்­தர்ப்­பங்­க­ளிலும் சிறுமி மாம­னாரால் ஏமாற்­றப்­பட்டு துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பிட்­டனர்.

சந்­தேக நபரை புதுக்­கடை மூன்றாம் இலக்க நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­திய பொலிஸார் இம்­மாதம் 18 ஆம் திகதி வரை அவரை விளக்­க­ம­றி­யலில் இட்­டுள்­ளனர்.

இது தொடர்பில் கேச­ரி­யிடம் கருத்துத் தெரி­வித்த வெள்­ள­வத்தை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி தலைமை பொலிஸ் பரி­சோ­தகர் உத­ய­கு­மார வுட்லர்இ தமது பிள்­ளைகள் விட­யத்தில் பெற்றோர் கூடுதல் அக்­கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என குறிப்­பிட்டார்.

கல்­விக்­காக பாட­சா­லைக்கு அனுப்பும் போதும்,  பிரத்­தி­யேக வகுப்­புக்­க­ளுக்கு அனுப்பும் போதும் யாருடன் செல்­கின்றார், வரு­கின்றார் என்பது தொடர்பிலும் பிள்ளைகளின் மாற்றங்கள் தொடர்பிலும் பெற்றோருக்கு அவதானம் தேவை என சுட்டிக்காட்டினார்.

அத்துடன் பாடசாைலகளும் மாணவர்கள் சமுகம் தராத போது அது தொடர்பில் பெற்றோரை தொடர்புகொண்டு விசாரிக்கும் ஒரு திட்டம் ஒன்றினை வகுக்க வேண்டும் எனவும் அதனூடாக இவ்வாறான பல சம்பவங்களை முறியடிக்க முடியும் என குறிப்பிட்டார்.

Exit mobile version