பாதுக்கை, வட்டரெக்க சந்தியிலுள்ள இரும்புப்பொருட்கள் விற்பனை நிலையத்தில் நேற்று இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் குறித்த சி.சி. டி.வி. காணொளியை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
குறித்த கொள்ளைச் சம்பவத்தில் 4 இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டதுடன் முகத்தை மூடி ஹெல்மட் அணிந்திருந்த இரு இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் இதனை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இரு கொள்ளையர்களை அடையாளம் காணுவதற்காக பாதுக்கை பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடி குறித்த காணொளியை வெளியிட்டுள்ளனர்.
கொள்ளையர்கள் தொடர்பான தகவல்களை 0777554184 அல்லது 011 2859110 ஆகிய தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கி உதவுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளதுடன் தகுந்த தகவல் தருவோருக்கு சன்மானம் வழங்கப்படுமெனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.