லக்னோ: உத்தர பிரதேசத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் குடிபோதையில் கலை நிகழ்சசி நடந்த மேடையில் ஏறி பெண் டான்ஸரை துப்பாக்கி முனையில் ஆட வைத்ததுடன் அவர் மீது பணத்தை வீசியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாஜஹான்பூரில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெண் டான்ஸர் ஒருவர் மேடையில் ஆடிக் கொண்டிருந்தார்.
அப்போது போலீஸ் கான்ஸ்டபிள் சைலேந்திர சுக்லா குடிபோதையில் மேடையில் ஏறி துப்பாக்கி முனையில் அந்த பெண்ணை நடனமாடுமாறு மிரட்டினார். அந்த பெண் ஆடி, ஆடி சோர்வடைந்தும் சுக்லாவின் மிரட்டலுக்கு பயந்து ஆடிக் கொண்டே இருந்தார்.
பின்னர் சுக்லா தான் வைத்திருந்த ரூ.30 ஆயிரம் பணத்தை அந்த டான்ஸரின் மீது மழையாக பொழிந்தார். இந்த சம்பவம் பற்றி காவல் துறை உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சுக்லா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.