லண்டன்: இங்கிலாந்தை சேர்ந்த பாப் பாடகர் மிக் ஹக்னால் தான் புகழின் உச்சத்தில் இருந்தபோது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுடன் உறவு கொண்டதாக தெரிவித்துள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த பாப் பாடகர் மிக் ஹக்னால்(54). அவர் 1980களில் மிகவும் பிரபலமானார்.
30 ஆண்டுகளாக பாடி வரும் அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். அவர் புகழின் உச்சத்தில் இருந்த காலத்தில் தினமும் 3 பெண்களுடன் உறவு கொள்வாராம்.
தான் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுடன் உறவு கொண்டதாக மிக் தெரிவித்துள்ளார். இத்தனை பெண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதை நினைத்து அவர் பெருமைப்படவில்லையாம்.
நான் 3 பெண்களுடன் மட்டும் தான் சீரியஸான உறவில் இருந்தேன். அதில் ஒன்று மிகவும் உண்மையான உறவு. மக்கள் பொறாமை மற்றும் காமத்தை காதல் என்று தவறாக நினைக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார் மிக்.
மிக் ஹாலிவுட் நடிகை கேத்ரீன் ஜெட்டா ஜோன்ஸ், சூப்பர் மாடல் ஹெலனா கிறிஸ்டென்சன் உள்ளிட்ட ஏாளமானோரை டேட் செய்துள்ளார். பின்னர் அவர் கேப்ரியலா வெஸ்பெர்ரி என்பவரை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
முன்னதாக 2007ம் ஆண்டு கேப்ரியலா ரோமி என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.