லண்டன்: வியாழக்கிழமை அன்று லண்டனில் நடைபெற்ற 10வது ஆண்டு கின்னஸ் உலக சாதனைகள் தின விழாவில் உலகிலேயே மிக உயரமான மற்றும் குள்ளமான மனிதர்கள் நேருக்கு நேர் சந்தித்து கை குலுக்கிக் கொண்டனர்.
துருக்கியைச் சேர்ந்த 2.51 மீட்டர் (எட்டு அடி, ஒன்பது இன்ச்), உயரமான சுல்தான் கோசனும், நேபாலைச் சேர்ந்த 55 சென்டிமீட்டர் (21 மற்றும் ஒரு அரை இன்ச்) குள்ளமான சந்திரா பகதூர் டங்கியும் சந்தித்தனர்.
லண்டனில் நாடாளுமன்ற கட்டடத்திற்கு எதிரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 74 வயதான சந்திராவுடன் கைகுலுக்க 31 வயது விவசாயியான கோசன் மிகவும் கீழே குனிந்தார்.
உலகின் மிக குள்ளமான மனிதரை சந்திப்பதற்கு முன்பு, அவர் எவ்வளவு சிறியவறாக இருப்பார் என்றும் என் கால்களுக்கு ஒப்பிட்டு பார்க்கும்போது அவர் எவ்வளவு தூரம் இருப்பார் என்று அறிவதில் மிகவும் ஆர்வமாக இருந்தேன். நான் அவரை பார்த்ததும், எவ்வளவு சிறியதாக இருக்கிறார் என்பதை உணர்ந்தேன், என்று கோசன் கூறியுள்ளார்.
நான் சந்திராவை சந்தித்தது ‘ஆச்சரியமாக’ இருந்தது, மேலும் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுப்பதற்காக மிகவும் கீழே குனிந்தது எனக்கு கஷ்டமாக இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
என்னுடைய முட்டியில் பிரச்சனைகள் உள்ளது, நான் அதிகமான நேரம் நின்றால், எனக்கு மிகவும் சோர்வு ஏற்படும் என்றும் கோசன் தெரிவித்துள்ளார்.
நான் மிகவும் உயர்ந்த மனிதர் மற்றும் சந்திரா மிகக் குறுகிய மனிதர், நாங்கள் எங்கள் வாழ்க்கையில் ஒரேமாதிரியான போராட்டங்களை தான் சந்தித்து வருகிறோம். சந்திராவின் கண்களை நான் பார்க்கும்போதெல்லாம் அவர் மிகவும் நல்ல மனிதர் என்று எனக்கு தோன்றுகிறது என்றும் கோசன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உலகின் மிக உயரமான மனிதரான கோசனின் கைகள் உலகிலேயே மிகப் பெரியது. அவரது மணிக்கட்டில் இருந்து நடுவிரல் நுனி வரை 28.5 சென்டிமீட்டர் (11.22 இன்ச்கள்) இருக்கும்.
‘நான் உலகின் மிக உயரமான மனிதரை பார்க்க ஆவலாக இருந்தேன்’ என்று சந்திரா கூறியுள்ளார். மேலும் அவர், ‘நான் ஒரு கின்னஸ் சாதனையாளராக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.’ என்று சந்திரா கூறியுள்ளார்.
‘குடிகாரர்களுக்கு இடையில் ஏற்படும் தகராறுகளை தீர்ப்பதற்காக Brewing நிறுவனம் 1995ம் ஆண்டில் ஒரு பிரபலமான கின்னஸ் புத்தகத்தை வெளியிட்டது. அந்த புத்தகங்கள் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 132 மில்லியனுக்கும் அதிகமான காப்பிகள் விற்பனையாகின.’