Site icon ilakkiyainfo

சவதியில் 17 வயது மகளுக்கு 90 வயது முதியவரை கட்டிக்கொடுக்க தந்தை முயற்சி

இளைஞர் ஒருவரை காட்டி தனது 90 வயதுகளில் இருக்கும் முதியவர் ஒருவருக்கு திருமணம் முடித்து வைக்க முயற்சித்த தந்தைக்கு எதிராக சவூதி அரேபியாவில் 17 வயது பெண் ஒருவர் பொலிஸில் முறையிட்டுள்ளார்.

பின்னர் அவருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டதாக சவூதியின் சபுக் செய்தித் தளம் குறிப்பிட்டுள்ளது.

மதீனா நகரைச் சேர்ந்த குறித்த பெண் தனது தந்தை அறிமுகம் செய்தவரை திருமணம் முடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அந்த பெண் சந்தித்த இளைஞன் தனது 20 வயதுகளில் இருந்துள்ளார்.

ஆனால் தனது திருமண ஒப்பந்த ஆவணத்தில் பதிவுசெய்திருக்கும் மணமகன் 90 வயதுகளில் இருப்பதை கண்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்;.

இதனை அடுத்து திருமணம் முடிக்க மறுத்த அந்த பெண் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார். இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றபோது குறித்த பெண் மீதான திருமணம் செல்லுபடி யற்றது என்று தீர்ப்பு அளிக்கப் பட்டுள்ளது.

முன்னதாக 90 வயதுகளில் இருக்கும் முதியவருக்கு திருமணம் முடித்துக் கொடுக்கப்பட்ட 15 வயது சிறுமி முதலிரவில் தனது அறையை பு+ட்டிக்கொண்டிருந்து பின்னர் தனது தாய் வீட்டுக்கு தப்பிச் சென்ற செய்தி சவூயில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Exit mobile version