சிறிதும் மனிதத்தன்மையற்ற, கொடூரமான வழிவகைகள் மூலம் இஸ்லாம் உலகில் பரவிக் கொண்டிருந்த காலகட்டத்தில், அதற்கு நேர் எதிர் குணங்களுடைய – அமைதியையும், வன்முறையற்ற வாழ்க்கையையும் போதிக்கின்ற -பௌத்த மதமானது, மத்திய ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலும், இந்தியாவின் சிந்து, வங்காளம் போன்ற பகுதிகளிலும் மிகுந்த செல்வாக்குடன் இருந்து வந்தது.
ஜிகாதிற்கு பலியான பௌத்தம் (நாளந்தா)
தங்களுக்கு எதிரான அத்தனை மத நம்பிக்கைகளையும் வன்முறை மூலம் அழித்தொழிக்கும் செயலை தங்களின் அடிப்படை மதக் கடமையாகக் கொண்ட இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களின் முன்னால் பௌத்தம் பேரழிவைச் சந்தித்தது. ஆம்; இஸ்லாம் பரவிய வழிகளில் இருந்த பௌத்தம் இருந்த இடம் தெரியாமல் அழித்தொழிக்கப்பட்டது.
இஸ்லாமிய வரலாற்றிசிரியரான அல்-புரூனி இதனைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். 1203-ஆம் வருடம் இந்தியாவின் பிகார் பகுதியிலிருந்த பௌத்தர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான கொலைவெறித் தாக்குதலை மேற்கொண்ட பக்தியார் கில்ஜியைப் பற்றிக் குறிப்பிடும் மற்றொரு இஸ்லாமிய வரலாற்றிசிரியரான இப்ன்-அசிர், “எதிரிகள் அறியாதவண்ணம் திடீர்த் தாக்குதலை மேற்கொண்ட முகமது பக்தியார், மிகுந்த வேகத்துடனும், துணிவுடனும் கோட்டை வாயிலை அடைந்து, பின்னர் எதிரிகளின் கோட்டையைக் கைப்பற்றினான்.
அதனைத் தொடர்ந்து அளவற்ற செல்வத்தை வெற்றி கொண்ட இஸ்லாமியப் படை கைப்பற்றியது. அந்தக் கோட்டையில் வசித்தவர்களில் பெரும்பாலோர் மொட்டைத்தலைகளை உடைய பிராமணர்கள் (உண்மையில் அவர்கள் பௌத்த பிட்சுகள்). அவர்கள் அத்தனை பேரும் வாளுக்கு உடனடியாக இரையாக்கப்பட்டார்கள்.”
அதனைத் தொடர்ந்து, புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகத்தினை அடைந்த பக்தியார் கில்ஜி “ஏராளமான புத்தகங்களைக் கண்டான்” எனக் குறிப்பிடுகிறார் இப்ன்-அசிர்.
பக்தியார் கில்ஜி பௌத்த பிட்சுகளின் மீது செலுத்திய ஈவு, இரக்கமற்ற படுகொலைகள் காரணமாக அங்கிருந்த புத்தகங்கள் என்ன மாதிரியானவை என்று சொல்வதற்குக் கூட ஒருவரும் கிட்டவில்லை எனப் பூரிக்கும் இப்ன்-அசிர், “அங்கிருந்த அத்தனை பிராமணர்களும் (பௌத்த பிட்சுகள்) கொல்லப்பட்டிருந்தார்கள்” என எழுதுகிறார்.
இஸ்லாமிய மதவெறியால் அழிக்கப்பட்ட அறிவுக் கருவூலம் (நாளந்தா பல்கலைக்கழகம்)
உலகப் புகழ் பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம் ஒன்பது அடுக்குகளைக் கொண்ட மிகப் பெரும் நூலகம் என்பதனைக் கூட இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் அறிந்திருக்கவில்லை என்பது மிகப் பெரும் அவலம்தான்.
அங்கிருந்த புத்தகங்களில் எதுவும் குரான் இல்லை என்பதனை அறிந்துகொண்ட பக்தியார் கில்ஜி, பின்னர் அத்தனை புத்தகங்களையும் தீக்கிரையாக்கினான். கௌதம புத்தரின் காலம்தொட்டு பல நூற்றாண்டுகளாக பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த அபூர்வமான புத்தகங்கள் மூடர்களின் கண்மூடித்தனமான மதவெறியால் எரிந்து சாம்பலாகின.
இந்தியாவில் பௌத்த மதம் அழிந்தது குறித்து எழுதும் டாக்டர் அம்பேத்கர் அவர்கள், “இந்தியாவில் பௌத்தம் அழித்தொழிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் இஸ்லாமியப் படையெடுப்புகளே” என்று குறிப்பிடுகிறார்.
சிலை வழிபாடு செய்யும் காஃபிர்களை அழிக்கப் புறப்பட்ட இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களைப் பற்றி அவர் கூறுகையில், “இஸ்லாம் ‘பட்’ (But)களுக்கு எதிரான ஒரு சமயமாகப் பிறந்த ஒன்று.
அராபிய வார்த்தையான ‘பட்’ என்பதற்கு ‘சிலைகள்’ என்று அர்த்தம். எனவே புத்தரை வழிபடும் பௌத்தர்களும் இஸ்லாமியர்களின் கண்களுக்கு சிலை வழிபாடு செய்பவர்களாகவே தென்பட்டார்கள்.
எனவே சிலைகளை உடைக்கும் அவர்களின் மதக் கடமையானது பௌத்தத்தையும் ஒழிக்கும் ஒரு செயலாக மாறியது. இஸ்லாம் இந்தியாவில் மட்டும் பௌத்த மதத்தை அழிக்கவில்லை.
அது சென்ற இடங்களில் எல்லாம் அதனை அழித்து ஒழித்தது. இஸ்லாம் உலகில் பரவுவதற்கு முன்னர் பாக்டீரியா, பார்த்தீயா, ஆஃப்கானிஸ்தான், காந்தாரம், சீன துருக்கிஸ்தான் பகுதிகளில் மட்டுமின்றி ஆசிய நாடுகள் அத்தனையிலும் பரவி இருந்தது” என்கிறார் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்.
இஸ்லாம் பௌத்த மதத்தை மட்டும் அழிக்கவில்லை; அதையும் தாண்டி கல்வியையும், அறிவையும் அழித்தது என்று தொடரும் பாபா சாகேப், “வெறி கொண்ட இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் கல்வி, கேள்விகளில் மிகச் சிறந்த பௌத்த பல்கலைக்கழகங்களான நாளந்தா, விக்ரம்ஷீலா, ஜகதாலா, ஓடாந்தபூரி போன்றவற்றை அழித்தார்கள்.
பௌத்த பிட்சுக்கள் எவ்வாறு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதனைக் குறித்து இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களின் வரலாற்றாசிரியர்களே விளக்கமாக எழுதி வைத்திருக்கிறார்கள்” என்கிறார்.
“இந்த அர்த்தமற்ற படுகொலைகளின் காரணமாக பௌத்தத்தின் ஆணிவேர் இந்தியாவில் வெட்டியெறியப்பட்டது. பௌத்த பிட்சுகளைக் கொன்றதன் மூலம், இஸ்லாம் பௌத்தத்தை இந்தியாவில் கொன்றழித்துவிட்டது. இந்திய பௌத்தத்தின் மீது விழுந்த மரண அடி அது” என மேலும் சொல்கிறார் டாக்டர் அம்பேத்கர்.
இதையெல்லாம் விடவும், இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் இந்திய உயர்சாதி இந்துக்களைக் போல சாதி வெறியர்களாகவும் இருந்தார்கள். இந்திய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதிகாரம் வழங்க அவர்கள் ஒருபோதும் முன்வரவில்லை என்பதே வரலாறு.
முகலாய ஆட்சியாளர்களின் காலத்தில் உயர்சாதி இந்துக்களான ராஜபுத்திரர்களும், பிராமணர்களும் மட்டுமே அவர்களின் படைகளிலும், பிற அரசு உத்தியோகங்களிலும் சேர்க்கப்பட்டார்கள். தாழ்த்தப்பட இந்துக்களும், சீக்கியர்களும் முகலாயர்களால் உதாசீனப்படுத்தப் பட்டார்கள்.
முன்பே சொன்னபடி, 1690-ஆம் வருடம் சின்சானியில் கலவரம் செய்த தாழ்த்தப்பட்ட ஜாட்களை அடக்க உயர்சாதி இந்துக்களான ராஜபுத்திரர்களை ஔரங்கசீப் அனுப்பி வைத்தான்.
இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களின் கண்மூடித்தனமான கொலைவெறித் தாக்குதல்கள் காரணமாக எண்ணற்ற கல்வியாளர்களும், சிற்பிகளும், தொழில் வினைஞர்களும் கொல்லப்பட்டார்கள்.
காலம்காலமாக அறிவையே தங்களது செல்வமாகச் சேர்த்து வந்த இந்தியாவில், கல்வியும், கலாச்சாரமும், கட்டடக்கலையும், சிற்பக்கலையும், நெசவும், அறிவியலும் அழிந்தன.
இந்த நிலைமையே எகிப்தியர்களுக்கும், சிரியர்களுக்கும், பாரசீகர்களுக்கும் ஏற்பட்டது. உலகின் பல பழமையான கலாச்சாரங்கள் இருந்த இடம் தெரியாமல் அழித்தொழிக்கப்பட்டன.
இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களைத் தூக்கிப் பிடிப்பதையே தனது கடமையாச் செய்து வந்த ஜவஹர்லால் நேருவே கூட இதனை ஆமோதிக்கிறார்.
“வெளிநாடுகளிலிருந்து இந்தியாவை நோக்கிப் படையெடுத்து வந்த முஸ்லிம்கள் இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கோ அல்லது அறிவியல் வளர்ச்சிக்கோ எதுவும் செய்யவில்லை. எந்த விதமான புதிய அரசிய கோட்பாடுகளோ அல்லது பொருளாதாரக் கோட்பாடுகளோ அவர்களிடம் இல்லை.
அவர்களின் மத நம்பிக்கை காரணமாக உண்டாகியதாகக் கூறப்படும் சகோதரத்துவத்திற்கும் மேலாக ஒருவகையான ஆண்டான்-அடிமைக் கோட்பாடே அவர்களிடம் நிலவியது.
தொழில்நுட்பத்திலும், உற்பத்தித் திறனிலும் அதன் அடிப்படைக் கட்டமைப்பிற்கான அறிதலிலும் அவர்கள் ஒருபோதும் இந்தியர்களுக்கு நிகரானவர்களாக இருந்ததில்லை.
மொத்தத்தில் இஸ்லாமிய ஆக்கிரமிப்புகள் இந்தியாவின் கலாச்சாரத்திற்கும், பொருளாதார வாழ்க்கைக்கும் அளித்த பங்களிப்பு மிக, மிகக் குறைவானதே. அன்றைய இந்தியா இஸ்லாமிய நாடுகளை விடவும் எல்லா விதத்திலும் முன்னேறிய ஒன்றாகவே இருந்தது.”
இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் கூட்டம் கூட்டமாக அப்பாவி இந்துக்களைக் கொன்றழித்த கொலைபாதகச் செயல்கள் இங்கொன்றும், அங்கொன்றுமாய் நிகழ்ந்தவை அல்ல என்பதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்துக்களை கட்டாயமாக மதமாற்றம் செய்வது, அவர்கள் வழிபடும் கோவில்களை இடித்து அதன் மீது மசூதிகளைக் கட்டுவது, அவர்களின் செல்வங்களைக் கொள்ளையடித்து அடிமைகளாகப் பிடித்துச் செல்வது போன்றவை – இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களின் கொள்கைகளாகவே இருந்து வந்தன. அந்தக் கொள்கையே இந்தியா முழுமையாகவும் அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டது.
சுல்தான் அலாவுதீன் கில்ஜியும் (1296-1316), முகமது-ஷா-துக்ளக்கும் (1325-1351) காஃபிர்களைக் கொல்லுவதிலும் அவர்களின் செல்வங்களைக் கொள்ளையடிப்பதிலும் மிகுந்த உற்சாகம் கொண்டவரக்ள்.
சுல்தான் ஃபிரோஸ்-ஷா-துக்ளக் (1351-88) வங்காளத்தின் மீது எடுத்த ஒரு படையெடுப்பைப் பற்றிக் குறிப்பிடும் வரலாற்றாசிரியர் சிராஜ்-அஃபிஃப், “கொல்லப் பட்ட வங்காளிகளின் தலைகள் கணக்கிடப்பட்டதில் 1,80,000 (ஒரு லட்சத்து எண்பதாயிரம்) பேர்களுக்கும் மேலாக இருந்ததாக”க் குறிப்பிடுகிறார்.
ஃபிரோஸ்-ஷா-துக்ளக், சிலை வழிபாட்டாளர்கள் மீது மிகக் கடுமையாக நடந்து கொண்டதுடன், அவர்களின் கோவில்களை இடிப்பதை வழக்கமாக கொண்டவன்.
இந்துக்கள் ரகசியமாக எங்கேனும் வீடுகளில் சிலை வழிபாடு செய்கிறார்களா என்று கண்காணிக்க தனி உளவுப்படையையே அமைத்த பெருமை ஃபிரோஸ்-ஷா-துக்ளக்கிற்கு உண்டு. பல இந்துக் கோவில்களை தரைமட்டமாக்கி, அங்கிருந்த பூசாரிகளையும், பிராமணர்களையும் கொன்றதாக அவனது வரலாற்றுக் குறிப்புகள் எழுதப்பட்டிருக்கின்றன.
அவனது வாழ்க்கைக் குறிப்பான ஃபுதுகாத்-இ-ஃப்ரோஸ்-ஷாஹியில், “காஃபிர் இந்துக்கள் இந்த நகரைச் சுற்றிலும் சிலைவழிபாட்டுக் கோவில்களை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இது இறைதூதருக்கு அல்லா அளித்த கட்டளைகளுக்கு எதிரானது. அல்லா அளித்த கட்டளையானது இந்தக் சிலைவழிபாட்டை முழுமையாகத் தடைசெய்கிறது. எனவே நான் அந்தக் கோவில்களை முழுமையாக இடித்து அழித்துவிட்டதுடன் அதுபோன்ற செயல்கள் இனிவரும் காலங்களில் நடக்காமலிருக்கவும் உத்தரவிட்டிருக்கிறேன்.”
* * *
தென்னிந்தியாவில் குல்பர்கா மற்றும் மத்திய இந்தியாவின் பிதாரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பாமினி சுல்தான்கள் இதற்கு சிறிதும் சளைத்தவர்களல்ல. “ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சம் இந்து காஃபிர் ஆண், பெண் மற்றும் குழந்தைகளைக் கொல்வது மதக் கடமை” என்ற எண்ணமுடையவர்களாக பாமினி சுல்தான்கள் இருந்தார்கள் எனக் குறிப்பிடுகிறார் அப்துல் காதிர் பாதோனி.
பாமினி சுல்தான்களின் மதவெறிக்கு பலியான ஹம்பி நகரம்
அதனையும் விட, பாமினி சுல்தான்கள் “ஒவ்வொரு முஸல்மானின் மரணத்திற்கும் பதிலாக ஒரு லட்சம் காஃபிர் இந்துக்களை கொல்ல வேண்டும்” எனச் சட்டமே இயற்றி இருந்ததாகக் குறிப்பிடுகிறார் ஃபரிஸ்டா. இரக்கமற்ற, மதவெறியர்களான பாமினி சுல்தான்களால் கொல்லப்பட்ட அப்பாவி இந்துக்களைக் குறித்து பிறகு பார்க்கலாம்.
இந்து அரசரான இரண்டாம் தேவராயர் போரில் இரண்டு முஸ்லிம்களைக் கைப்பற்றியதற்குப் பதிலாக, சுல்தான் அலாவுதீன் அஹமத்-ஷா-பாமானி (1436-58), “ராஜா தேவராயா கைப்பற்றிய இரண்டு முஸல்மான்களைக் கொன்றால் அதற்கு பதிலாக நான் ஒரு லட்சம் இந்துக்களைக் கொல்வேன்” எனச் சூளுரைத்ததாகத் தெரிகிறது.
இதனைக் கேட்டு அச்சமடைந்த இரண்டாம் தேவராயர் உடனடியாக அந்த இரண்டு முஸ்லிம்களை விடுதலை செய்ததுடன், சுல்தானுக்கு கப்பம் கட்டுவதற்கும் சம்மதித்ததாகத் தெரிகிறது.
அமிர் தைமூர் அவனது வாழ்க்கைக் குறிப்பான மல்ஃபுஸாத்-இ-தைமூரியில், தான் இந்துஸ்தானத்திற்குப் படையெடுத்தது இஸ்லாமிய மதக் கடமையான ஜிகாதினை நிறைவேற்றி, காஃபிர்களை அழித்தொழிப்பதற்காகவே எனக் குறிப்பிடுகிறான்.
முக்கியமாக “காஜியாகுவதற்காக (காஃபிரைக் கொல்பவன்)”. 1398-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டில்லியைக் கைப்பற்றிய தைமூரின் உத்தரவின்படி ஒரே நாளில் ‘ஒரு லட்சம் காஃபிர்களும், சிலை வழிபாட்டாளர்களும்’ கொல்லப்பட்டார்கள்.
(தொடரும்)
மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
தமிழில் : அ. ரூபன்
‘அமைதி மார்க்கமென’ அறியப்படுகிற இஸ்லாம் பரவியது அமைதிவழியிலா அல்லது வாள் முனையிலா என்பது என்றும் நிலவும் ஒரு விவாதக் கருப்பொருள்.
M.A.Khan அவர்கள் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிப்பதுடன், கலாச்சாரத்திலும், கல்வியிலும், செல்வத்திலும் மிக, மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப்படுத்தப்பட்டன, படுத்தப்பட்டுக் கொண்டிருகின்றன என்பதனைவும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்.
அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன….
முந்தைய பகுதிகள்: பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4, பகுதி 5, பகுதி 6
♠