யாழ். புங்குடுதீவு 3ஆம் வட்டாரப் பகுதியில் அப்பகுதியைச் சிவசுப்பிரமணியம் தனுஷன் (வயது 09) என்ற சிறுவன் கிணற்றினுள் தவறி விழுந்து மரணமடைந்ததாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
தனது நண்பர்களுடன் சனிக்கிழமை (15) மாலை விளையாடிக்கொண்டிருந்த இந்தச் சிறுவன், நீர் அருந்துவதற்காக கிணற்றடிக்குச் சென்றபோதே தவறி வீழ்ந்துள்ளான்.
சிறுவனை நீண்டநேரமாக மீட்காத நிலையில் சிறுவன் நீரில் மூழ்கி மரணமடைந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
புங்குடுதீவில் வீடு பிரித்து தங்கநகைகள் கொள்ளை
16-11-2014
யாழ்.புங்குடுதீவு 7ஆம் வட்டாரப்பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கூரையை பிாித்து 14 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (14) முறைப்பாடு செய்துள்ளதாக ஊர்காவற்றுறை குற்றத்தடுப்பு பொலிஸார் சனிக்கிழமை (15) தெரிவித்தனர்.
வீட்டில் உள்ள அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த போது கூரை வழியாக உள் நுழைந்த திருடர்கள் 14 பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளதாக அவ் வீட்டின் உரிமையாளா் முறைபபாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஊர்காவற்றுறை குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.