ilakkiyainfo

சாமியார் ராம்பால் கைது, ஆயிரக்கணக்கானோர் தப்பியோட்டம் – காணொளி

புதுடெல்லி: அரியானா மாநிலம் ஹிசார் ஆசிரமத்தில் பதுங்கியிருந்த ராம்பாலை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர்.நீதிமன்ற அவமதிப்பில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள அவரை, கைது செய்யவிடாமல் அவரது ஆதரவாளர்கள் தடுத்து வந்தனர்.

இரண்டாவது நாளான நேற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்த நிலையில், சாமியாரை கைது செய்தால் வன்முறை வெடிக்கும் என உளவுத்துறை எச்சரிக்கை செய்திருந்ததால், பதற்றம் ஏற்பட்டது. சாமியார் கைதாவதற்கு முன்பே ஒரு குழந்தை உட்பட 5 பெண்கள் உயிரிழந்தனர்.

79117945_79117943இதனால், அவரது கைது நடவடிக்கையை தொடர்ந்து, பெரும் அளவில் சட்டம் ஒழுங்கு சீர்குலையலாம் என்ற அச்சமும் நிலவியது.எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, துணை ராணுவப் படையை குவிக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்து, 500 வீரர்கள் அரியானாவுக்கு அனுப்பி வைத்தது.

அவர்கள் அனைவரும், ஹிசாரா ஆசிரமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் சென்று, வன்முறை வெடிக்காத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேவைப்பட்டால் கூடுதல் படைகளை அரியானாவுக்கு அனுப்பவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அரசின் இந்த அதிரடி நடவடிக்கைகளால், அரியானாவில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.

சாமியார் ராம்பால் கைது செய்யப்படும் வரை, நடவடிக்கைகள் தொடரும் என அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் உறுதி அளித்தார்.

இது குறித்து, நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : சட்டத்தின் முன் அனைவரும் சமம். அரசுக்கு பாரபட்சமின்றி செயல்பட்டு வருகிறது. சாமியார் ராம்பாலை கைது செய்வதில் அரசு மிகுந்த கவனத்துடன் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில், அப்பாவி மக்கள், குழந்தைகளின் உயிருக்குத் தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

ஆசிரமத்தில் உள்ள பெண்கள், குழந்தைகள், முதியோர் உள்ளிட்டவர்கள் அவர்களுடைய வீட்டுக்கு பத்திரமாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாமியார் ராம்பால் வெகு விரைவில் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன்பாக ஆஜர்படுத்தப் படுவார்.

வன்முறை சம்பவத்தின்போது காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆசிரமத்தில் இருந்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டு விட்டனர். இப்போது நெருக்கடியான சூழல் ஹிசாரில் ஏற்பட்டு¢ள்ளது.

எனவே, ராம்பாலை கைது செய்யும் நடவடிக்கையில் ஏற்படும் இடைஞ்சல்களை பொறுத்துக் கொண்டு, உள்ளூர் மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். இவ்வாறு கட்டார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சாமியார், மகன், தலைமை உதவியாளர் கைது:

சாமியார் ராம்பாலை கைது செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஆசிரமத்தில் இருந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அனைவரும், தங்களுடைய சொந்த ஊருக்கு செல்லத் தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டது.

அதேசமயம், ராம்பாலுக்கு பக்க பலமாகவும், போலீசாரை கற்கள், ஆசிட் பாக்கெட், உருட்டுக் கட்டை உள்ளிட்டவைகளால் தாக்கிய, ராம்பாலின் பாதுகாப்பு வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.

rampal
ராம்பாலின் மகன், தலைமை உதவியாளர்  புருஷோத்தம் தாஸ் மற்றும் ராம்பாலின் கமாண்டோ பாதுகாவலர்கள் உட்பட 70 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும், நீதிமன்றத்தில் உடனடியாக ஆஜர்படுத்தப்பட்டனர்.

வரும் டிசம்பர் 3ம் தேதிவரை அவர்களை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சாமியார் ராம்பாலையும் போலீசார் அதிரடியாக ¬¬து செய்தனர். இது குறித்து மூத்த காவல்துறை அதிகாரி கூறுகையில், “ நாங்கள் படிப்படியாக முன்னேறி கவனமாக நடவடிக்கை எடுத்து, யாருக்கும் அதிக பாதிப்பு இல்லாமல் ராம்பாலை கைது செய்தோம்’’  என்றார்.

வழக்குகள் பாய்ந்தன:

இந்த சம்பவங்களை தொடர்ந்து சாமியார் ராம்பாலின் மீதான போலீசாரின் பிடி இறுகி உள்ளது. சாமியார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 121 (இந்திய அரசுக்கு எதிராக போர் நடத்த முயற்சி,) 121ஏ (மாநில அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டி, நிறைவேற்ற முயற்சித்தல்), 122 (இந்திய அரசுக்கு எதிராக போர் நடத்தும் நோக்கத்துடன் ஆயுதங்களை சேகரித்தது), 123 (வன்முறையை பரவச் செய்யும் நோக்கத்துடன், தலைமறைவாகி இருத்தல்), கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராம்பால் மீது ஏற்கனவே கொலை வழக்கும் பதிவாகி உள்ளது.

டிஜிபி பேட்டி:

இந்த விவகாரம் குறித்து, அரியானா டிஜிபி எஸ்.என். வசிஷ்ட், நேற்று அளித்த பேட்டி:  ராம்பாலின் ஆதரவாளர்களுடன் பேரம் பேச முடியாது. கடுமையான குற்றங்கள் புரிந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சட்டத்தின் முன்பாக அவர் சரணடைய வேண்டும். உயிரிழந்த 5 பெண்கள், 1 குழந்தை ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதன் அறிக்கையில்தான், அவர்கள் எப்படி உயிரிழந்தார்கள் என்பது தெரியவரும். எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, ராம்பால் ஆசிரமத்துக்கு உள்ளேதான் பதுங்கி உள்ளார்.

250 சிலிண்டர்கள்:

ஆசிரமத்துக்கு உள்ளே, 250 எல்பிஜி சிலிண்டர்கள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். அவை வெடித்தால், நிலைமை மிக மோசமாகும். பல்வேறு வகையில், ராம்பாலை கைது செய்யும் ஆபரேஷன் நடந்து வருகிறது. எங்களுக்கு இப்போது 2 கடமைகள் உள்ளன. ஒன்று, அப்பாவிகளின் உயிர்களை காப்பது. இன்னொன்று ராம்பாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவது. இவ்வாறு டிஜிபி தெரிவித்தார்.

சட்டம்  ஒழுங்கு பிரச்னை மாநில வரம்புக்கு உட்பட்டது:

சாமியார் ராம்பாலை கைது செய்ய அரியானா மாநில போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கவுடாவிடம் கேட்டபோது, சட்டம்ஒழுங்கு பிரச்னை மாநில அரசின் வரம்புக்கு உட்பட்டது.

இந்த விவகாரத்தில் பஞ்சாப்  அரியானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை. இந்த தருணத்தில், இது தொடர்பாக கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது என்று கவுடா கூறினார்.

Exit mobile version