நடிகை ஐஸ்வர்யா ராய் பிளவு உதடுகள் உள்ள 100 குழந்தைகளின் சிகிச்சைக்கு நிதியுதவி செய்துள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் உலக அழகி பட்டம் வென்று நேற்றுடன் 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. மேலும் அவரது தந்தை கிருஷ்ணராஜ் ராயின் 76வது பிறந்தநாளும் வந்தது.
இந்த இரண்டையும் கொண்டாடும் விதமாக மும்மையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தனது ஐஸ்வர்யா ராய் பவுன்டேஷன் மூலம், உதட்டு பிளவு கொண்ட 100 குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி செய்துள்ளார்.
இவர் நிதியுதவி செய்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் ஒன்று முதல் 14 வயது வரை உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.