ஒடிசா மாநிலத்தில் உள்ள கேந்திரபாரா மாவட்டத்தில் அரசு தலைமை பொது மருத்துவமனை உள்ளது.
இந்த மருத்துவமனையில் சேரும் குப்பைகள், மருந்துக் கழிவுகள் மற்றும் அசுத்தங்கள் அனைத்தும் இந்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு இடத்தில் குவியலாக கொட்டப்படுகிறது. வாரம் ஒருமுறையோ, இரு முறையோ நகராட்சி வாகனம் இவற்றை வந்து அள்ளிச் செல்வதுண்டு.
அந்த குப்பை குவியல் வழியாக ஆஸ்பத்திரிக்கு வந்த சில நோயாளிகள், பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தையின் சடலம் குப்பையோடு குப்பையாக கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரையடுத்து விரைந்து வந்த போலீசார் அந்த பிரேதத்தை கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அந்த மருத்துவமனையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பெண் குழந்தையை பிரசவித்தவர்களின் பட்டியலை ஆராயும் போலீசார், இந்த படுபாதகத்தை செய்த அந்தத் தாயை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
எமனாக வந்த எருமை மாடுகள்: சுவர் இடிந்து 3 குழந்தைகள் பலி
24-11-2014
இரண்டு எருமை மாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையில் மதில் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் 3 குழந்தைகள் பரிதாபமாக பலியாகினர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் நகரில் உள்ள ஜாகிர் காலனியில் உள்ள ஒரு வீட்டில் ஏராளமான எருமை மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றில் இரண்டு மாடுகளுக்கிடையில் நேற்று முரட்டுத்தனமான மோதல் நடந்தது.
இதைப் பார்த்து மிரண்டுப் போன பல மாடுகள் தலைதெறிக்க மதிலுக்கு வெளியே ஓடத்தொடங்கின. இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கிய சில மாடுகள் மதில் சுவற்றின் மீது விழுந்தன.
இதனால் மதில் சுவர் வெளிப்பக்கமாக சரிந்து விழுந்தது. வெளியே விளையாடிக் கொண்டிருந்த 4 குழந்தைகள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டன. இதைப் பார்த்து, பதறிப்போன அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடிவந்து குழந்தைகளை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி அரியா(5), ஃபரா(4), ஜிஷான்(5) ஆகியோர் பரிதாபமாக பலியாகினர். அல்ட்டமாஸ் என்ற 6 வயது சிறுவன் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.