ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Thursday, November 30
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»சிறப்பு செய்திகள்»பரு­வக்­காதல் பாதியில் முறிய பறிபோனது உயிர்!!
    சிறப்பு செய்திகள்

    பரு­வக்­காதல் பாதியில் முறிய பறிபோனது உயிர்!!

    AdminBy AdminNovember 25, 2014Updated:November 30, 2014No Comments5 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    பருவக் காதல் பருவ மழையைப் போன்­றது. வண்ண வண்ண ஆடை அணிந்து நெளிவு சுழி­வு­களைப் பார்த்து கண்­ணாடி முன் தான் அழ­காக இருக்கின்றேனா? எனப் பல முறை ரசிக்கும் இளம் பெண்­க­ளுக்கு தன்­னையும் ஒருவன் ரசிக்­கின்றான் என்­றதும் அவளை அறி­யா­மலே அவன் மீது ஈர்ப்பும் விருப்பமும் ஏற்­ப­டு­வது இயல்பே.

    ஆனால், அது இந்த பரு­வத்தில் ஏற்­படும் எதிர்ப்­பா­லி­னக்­ க­வர்ச்­சியே. இதை விட சிறந்த வாழ்வு உண்டு என்­பதை உணரும் முன்­னரே நிரந்­த­ர­மற்ற பிரச்சினை­க­ளுக்கு நிரந்­த­ர­மான, பார­தூ­ர­மான முடி­வினை நோக்கி செல்­கின்­றனர் இன்­றைய இளம் பெண்கள்.

    ஹங்­வெல்ல பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட வெலி­கந்த,எல்­ல­கந்த பிர­தே­சத்தில் கடந்த பௌர்­ணமி தினத்­தன்று இரேஷா லக்­மாலி என்ற பதி­னெட்டு வயது இளம் பெண் தன் காதலன் ஷமி­லவின் வீட்­டி­லேயே இரவு பத்து மணி­ய­ளவில் தூக்கில் தொங்கி உயி­ரி­ழந்­துள்ளார்.

    இந்தச் சம்­பவம் ஹங்­வெல்ல பிர­தே­சத்தில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

    இரேஷா, ஷமில இரு­வரும் காத­லர்கள். இரண்டு வரு­டங்­க­ளாக இரு­வரும் ஒரே வீட்டில் ஒன்­றா­கத்தான் வாழ்ந்­தி­ருக்­கின்­றார்கள். எனினும் இரு­வரும் திரு­மணம் முடித்­தி­ருக்­க­வில்லை. தனது பதி­ னா­றா­வது வய­தி­லேயே “வாழ்ந்தால் ஷமி­ல­வுடன் தான்” என்ற முடி­வுடன் தனது வீட்டை விட்டு வந்து விட்டாள் இரேஷா.

    kathal-5அப்­போது ஷமி­ல­வுக்கு 21 வய­தாக இருந்த போதும் இரே­ஷா­வுக்கு பதி­னாறு வயது தான். எனவே அவ­ளு­டைய வயது திரு­மணம் முடிக்கும் வய­தில்லை என்ற கார­ணத்­தினால் இரு­வ­ருக்கும் சட்­ட­ரீ­தி­யாக திரு­மணம் செய்­து­கொள்ள முடி­ய­வில்லை. பதி­னெட்டு வயது வந்த பின் திரு­மணம் செய்து கொள்வோம் என்ற முடி­வுடன் ஷமி­லவின் வீட்­டி­லேயே தங்­கினாள் இரேஷா.

    இரேஷா உயி­ரி­ழந்த போது அவ­ளுக்கு பதி­னெட்டு வயதும் இரண்டு மாதங்­க­ளுமே இருக்கும். அடுத்த மாத­ம­ளவில் இரே­ஷா-­, ஷ­மில ஆகிய இரு­வரும் திரு­மணம் செய்­து­கொள்ள திட்­ட­மிட்­டி­ருந்த நிலை­யி­லேயே இரேஷா தன் வாழ்வின் இறு­திப்­ப­ய­ணத்தை நோக்கி விடை பெற்றுச் சென்று விட்டாள்.

    இரே­ஷா­வுக்கு பதி­னைந்து வய­தாக இருக்கும் போதே கல்­வியில் நாட்டம் இல்­லாமல் தனது பாட­சாலைக் கல்­வியை இடை­நி­றுத்தி விட்டாள். இக்­கா­லப்­ப­கு­தி­யி­லேயே ஷமி­ல­வு­ட­னான காதல் மலர்ந்­தது. இரு­வரும் ஒரு வரு­ட­மாக இர­க­சி­ய­மான முறை­யி­லேயே தங்­க­ளது காதலை வளர்த்து வந்­தனர்.

    இரே­ஷாவின் வீட்­டுக்கு இவர்­களின் காதல் தெரி­ய­வர, தாய் உட்­பட குடும்­பத்தில் இருந்த பெரி­ய­வர்கள் அனை­வரும் இவர்­க­ளது காதலை எதிர்த்­தனர். அதற்கு அவளின் வயதும் ஒரு கார­ண­மாக அமைந்­தது.

    எனவே தான் தனது பதி­னா­றா­வது வய­தி­லேயே ஷமி­ல­வுடன் ஒன்­றாக வாழ முடி­வெ­டுத்து தன் குடும்­பத்தை பகைத்­துக்­கொண்டு ஷமி­லவே கதி­யென வந்­து­விட்டாள்.

    இரே­ஷாவின் குடும்­பத்­தி­னரின் கோபம் நீண்ட நாள் நீடிக்­க­வில்லை. இந்த வரு­டத்தில் இரே­ஷாவின் குடும்­பத்­தி­னரும் இவர்­களின் திரு­ம­ணத்­துக்கு சம்­ம­தித்­தி­ருந்­தனர்.

    எனினும் திரு­மணம் முடிக்­காமல் ஒன்­றாக வாழ்ந்த இரு­வரின் வாழ்­விலும் நிம்­மதி இருக்­க­வில்லை. இரு­வ­ருக்­கு­மி­டையே இருந்த காதல் நாட்கள் செல்லச் செல்ல கசந்­தது. அடிக்­கடி சண்டை, சச்­ச­ர­வுகள் எனப் பிரச்­சி­னைகள் இருந்­து­கொண்டே தான் இருந்­தன.

    அதுவும் கடந்த சில மாதங்­க­ளாக இரு­வ­ருக்கும் இடையில் சண்டை அதி­க­ரித்­ததால், மீண் டும் தனது வீட்­டுக்கே இரேஷா செல்­லு­வ­தும் பின் ஷமில சென்று சமா­தா­னப்­ப­டுத்தி இரே­ஷாவை அழைத்து வரு­வ­துமாய் இருந்­தது.

    இத­னி­டையே, இரேஷா ஆடைத் தொழிற்­சா­லை­யொன்­றுக்கு வேலைக்­காகச் செல்ல அங்கு தினேஷ் என்ற புதுக்­கா­த­லனின் அறி­முகம் கிடைத்­தது.

    ஒரு நாள் அவள் அவ­னுடன் மோட்டார் சைக்­கிளில் வரும்­போது ஷமி­லவின் சிற்­றன்னை கண்டு தன் அக்­காவின் மகன் இவளால் ஏமாற்­றப்­ப­டக்­கூ­டாது அவனைக் காப்­பாற்ற வேண்டும்    என எண்ணி ஷமி­ல­விடம் தான் கண்ட உண்­மை­களைக் கூற இரு­வ­ருக்கும் இடை­யே­யுள்ள பிரச்­சினை மேலும் வலுவா­னது.

    showImageInStory

    இரே­ஷாவும் தினே­ஷுட­னான தன் காதல் உண்மை என்று ஒப்­புக்­கொண்டாள். இத­னை­ய­றிந்த தினேஷ் நேரில் வந்து “இந்த தொடர்­பினை நாங்கள் முடித்துக்­கொள்­கின்றோம் இனி நான் இவ­ளுடன் வர மாட்டேன், நீங்கள் இரு­வரும் திரு­மணம் முடித்து சந்­தோ­ஷ­மாக இருங்கள்” என்று இரு­வ­ரையும் சமா­தா­னப்­ப­டுத்தி விட்­டுச்­சென்று விட்டான்.

    அதன் பின்னர் வெளிப்­ப­டை­யாக இரு­வரும் சேர்ந்­தி­ருப்­பது போல் இருந்­தாலும் ஷமி­ல­வுக்குள் இரேஷா மீது ஒரு சந்­தேகம் இருந்­து­கொண்டே இருந்­தது.

    சிறு சிறு விட­யங்­க­ளுக்கு அவள் மீது கோபப்­ப­டு­வதும் சண்­டை­யி­டு­வதும், பின் சமா­தானம் ஆவ­துமாய் இருந்தான். பௌர்­ணமி தின­மான அன்றும் மாலை நேரத்தில் இருந்தே இரு­வ­ருக்­குள்ளும் சண்­டை­யா­கவே இருந்­தி­ருக்­கின்­றது.

    அவள் விகா­ரைக்கு அழைத்து செல்­லு­மாறு கேட்க அவன் மறுத்­தது மட்­டு­மன்றி, அவன் அவளை இரும்புக் குழா­யினால் தாக்­கி­யி­ருக்­கின்றான். ஷமில பக்­கத்­தி­லி­ருந்த அண்ணன் வீட்­டுக்குச் செல்ல அவளும் அவனை விடாமல் பின் தொடர்ந்த வண்ணம் சென்­றி­ருக்­கிறாள்.

    பின் அண்­ணனின் வீட்டு முற்­றத்தில் இருந்த விளக்­கு­மா­றையும் எடுத்து பல தட­வைகள் அவளை அடித்துத் தாக்­கி­யி­ருக்­கின்றான். இறு­தியில் சண்­டை­யைப்­பார்த்து சலித்­துப்­போன நண்பன் புபுது ஷமி­லவை வெளியே அழைத்துச் செல்­கிறான்.

    பத்து நிமிடம் கழித்து அவன் வீட்­டுக்கு திரும்பி வரும் போதே இரேஷா தூக்கில் தொங்­கி­ய­வாறு இருந்­தி­ருக்­கின்றாள்.

    ஷமில பொலிஸ் விசா­ர­ணையில் இவ்­வாறு தெரி­வித்தார் “அண்ணன் வீட்­டுக்கு சென்று நான் பத்து நிமிடம் கழித்து மறு­ப­டியும் வீட்­டுக்கு வந்தேன். நான் வரும் போது வீட்டின் முன் கதவு அரை­வா­சிக்கு திறக்­கப்­பட்ட நிலையில் மின் குமிழ்கள் எரிந்­த­வாறு காணப்­பட்­டன.

    வீட்­டுக்குள் நுழையும் போதே தொங்­கிக்­கொண்­டி­ருந்த சேலை என் மேலே பட்­டது. பார்க்கும் போது இரேஷா தூக்கில் தொங்­கி­ய­வாறு இருந்தாள். உட­ன­டி­யாக நான் அவளை கீழே இறக்கி அவளின் நாடி­யைப்­ பி­டித்துப் பார்த்தேன்.

    அவள் இறந்­தி­ருந்தாள். நான் சத்­த­மிட்டு அழ ஆரம்­பிக்க பக்­கத்து வீட்­டாரும் வந்து சேர்ந்­தார்கள். அவர்­களும் நாடி­யைப்­ பி­டித்துப் பார்த்து அவள் இறந்து விட்­ட­தாக தெரி­வித்­தனர்.

    அதன் பின்னர் தான் நாங்கள் பொலிஸ் நிலை­யத்­துக்கு வந்தோம்” எனத் தெரி­வித்தான். ஷமி­லவின் வாக்­கு­மூலம் கிடைக்­கப்­பெற்ற அன்­றி­ரவே பொலிஸார் விசா­ர­ணை­களை நடத்­தினர்.

    இரேஷா தூக்கில் தொங்­கிய இடத்தை பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்­தி­ய­துடன், இரே­ஷாவின் உட­லையும் பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்­திய பொலி­ஸா­ருக்கு அவளின் உடலில் காணப்­பட்ட இரத்தக் கறைகள் சந்­தே­கத்தை உண்­டு­பண்­ணி­ன.

    அவளின் முகத்­தி­லி­ருந்து நெஞ்சு பகுதி வரை இரத்தம் வழிந்­தோ­டிய நிலையில் காணப்­பட்­டது. தலையில் காணப்­பட்ட பெரிய காய­மா­னது ஷமி­ல­வினால் இரேஷா தாக்­கப்­பட்­டி­ருக்­கலாம் என பொலி­ஸாரை சந்­தே­கிக்­கப்­பட வைத்­தது. ஷமி­லவை உட­ன­டி­யாக கைது செய்த பொலிஸார் மேல­திக விசா­ர­ணை­களை நடத்­தினர்.

    சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்ட ஷமில காத­லியைத் தாக்கி மர­ண­ம­டையச் செய்த குற்­றத்­துக்­காக அவி­சா­வளை மாவட்ட நீதி­மன்­றத்தில் ஆஜர்படுத்­தப்­பட்டான்.

    எனினும் இரே­ஷாவை பல முறை தாக்­கி­யதை ஒப்­புக்­கொண்ட அவன், அவ­ளது மர­ணத்­துக்கு தான் கார­ண­மில்லை எனவும் அவள் தனக்குத் தானே தூக்­கிட்டுத் தற்­கொலை செய்­துள்­ள­தா­கவும் கூறி­ய­துடன் அடுத்த மாத­ம­ளவில் தாங்கள் திரு­மணம் செய்ய இருந்­த­தா­கவும் தெரி­வித்­துள்ளான்

    இரே­ஷாவின் மரண சம்­ப­வத்தில் இரே­ஷாவின் அக்­காவின் சாட்­சி­யமும் ஷமில மீதான சந்­தே­கத்­துக்கு கார­ண­மாக அமைந்­தது. இரேஷா பெளர்­ணமி தினத்­தன்று தன் அக்­கா­விடம் தொலை­பேசி ஊடாக தொடர்­பு­கொண்டு தான் விகா­ரைக்கு செல்ல வேண்டும் எனவும் தனக்கு 300 ரூபா தரும்­படி கேட்டிருக்கிறாள்.

    அக்கா தரு­கின்றேன் எனக்­கூற அக்­கா­வுடன் தொலை­பேசி அழைப்பில் இருந்­த­வாறே ஷமி­ல­விடம் ‘பாரு அக்கா விகா­ரைக்குச் செல்ல 300 ரூபா தாறேன் என்று சொல்­லு­கின்றாள், நீ அவ­ச­ரப்­பட்டு தானே என்னை அடித்தாய்” என்று சொல்­லிக்­கொண்டு இருக்கும் போதே அழைப்பு துண்­டிக்­கப்­பட்­ட­தா­கவும், தான் மறு­ப­டியும் அழைப்பை ஏற்­ப­டுத்­திய போது தொலை­பேசி நிறுத்­தப்­பட்டு இருந்­தது எனவும் தெரி­வித்­துள்ளாள். இதுவும் ஷமில மீதான சந்­தே­கத்தை மேலும் வலுப்­ப­டுத்­தி­யது.

    இரே­ஷாவின் மரணம் தற்­கொ­லையா? அல்­லது ஷமி­லவின் தாக்­கு­தலால் தான் உயி­ரி­ழந்­தாளா? என்ற விசா­ர­ணைகள் தொடர்ந்த நிலையில் ……… சந்­தே­கத்தின் பேரில் ஷமில தொடர்ந்து விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளான்.

    இத்­த­கைய சம்­ப­வங்கள் பருவ வயதில் உள்ள இளம் பெண்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­க­ளையும், அதற்­கான சரி­யான வழி­காட்டல் இன்­மை­யி­னையும் புலப்­ப­டுத்­து­கின்­றன.

    பதின்­மூன்று வயது தொடக்கம் பதி­னெட்டு வயது வரை­யான கட்­டி­ள­மைப்­ப­ருவம் உடல், உள, சமூக ரீதி­யான மாற்­றங்­களை சந்­திக்கும் ஒரு காலம். அதுவும் அந்தக் காலப்­ப­கு­தியில் எதிர்ப்­பா­லினர் மீது ஏற்­படும் கவர்ச்சி வெறும் இயல்பானதே. சில சினிமா,விளையாட்டு துறை சார்ந்த பிரபலங்களின் நடை, உடை, பாவனைகள் பல சமயங்களில் நம்மை வெகுவாகக் கவர்ந்திழுக்கும்.

    அதுபோல் தான் இந்த வயதில் வரும் எதிர்ப்பாலினர் கவர்ச்சியும். பதினைந்து வயதில் எடுக்கும் முடிவுகள் இருபது வயதில் முட்டாள்தனமாகவே தோன்றும். 15,16 வயதில் திருமணம் முடிக்கும் பெண்களுக்கு 20வயது ஆகும் போது “இவ்வளவு தான் வாழ்க்கையா?” என்று சலிப்புத்தன்மையை ஏற்படுத்தி விடும்.

    அந்த சமயத்தில் புதிய உறவின் தெரிவுக்கு இடம் கொடுக்க மனம் ஏங்கும். சில சமயங்களில் அந்த ஏக்கமே இரேஷாவுக்கு ஏற்பட்ட நிரந்தமான முடிவினைப் போல அமைந்துவிடுகின்றது.

    அ.வசந்தா

    Post Views: 65

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    சுரங்கத் தொழிலாளர்கள் மீட்பில் கைகொடுத்த `எலித்துளை’ நிபுணர்கள்! – யார் இவர்கள்?

    November 29, 2023

    திருமணத்திற்கு 1000 பேருக்கு அழைப்பு: ஒரு நபர் கூட வரவில்லை வெறிச்சோடிய மண்டபம்… வீணான உணவு வகைகள்… கதறிய மணமகன்…

    November 9, 2023

    கடவுள்களை போல் வாழ்ந்த ‘மன்னர்களை’ அதிரடியாக ஒழித்த இந்திரா காந்தி – எப்படி செய்தார்?

    November 2, 2023

    Leave A Reply Cancel Reply

    November 2014
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    « Oct   Dec »
    Advertisement
    Latest News

    Bigg Boss 7 Day 58: `இந்துஜா என்னைக் கண்டுக்கல’- வருத்தப்பட்ட பூர்ணிமா; பஞ்சாயத்தைத் தொடங்கிய விஷ்ணு-  (வீடியோ)

    November 30, 2023

    மாவீரர் தின நினைவேந்தலுக்கு 15 லட்சம் கப்பம் கோரியவர் கைது

    November 30, 2023

    உலகின் 8வது அதிசயமாக அங்கோர் வாட் கோயில் அறிவிப்பு!

    November 30, 2023

    சென்னையில் கொட்டித்தீர்க்கும் கனமழை; டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் புயல் உருவாக வாய்ப்பு!

    November 30, 2023

    ஒல்லாந்தர் எடுத்துச் சென்ற தொல்பொருட்கள் மீண்டும் நாட்டிற்கு…

    November 29, 2023
    • வீடியோவில் தோன்றியது துவாரகா தானா? முக அசைவு, மொழிநடையில் நிபுணர்கள் சந்தேகம்
    • சரக்குக் கப்பலைக் கடத்தி மேற்கு நாடுகளை மிரட்டும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள்
    • இயேசுவின் போதனைகள், சனாதன யூதர்களின் ஆயிரமாண்டுகால நம்பிக்கைகளின் வேர்களை அசைத்துப் பார்ப்பதாக இருந்தது. ஆகவே அவர்களால் இயேசுவை ஏற்க இயலவில்லை; கொல்ல முடிவு செய்தார்கள் – நிலமெல்லாம் ரத்தம் 4
    • தீபாவளி இந்து பண்டிகையா? பௌத்தம், சமணத்தில் இருந்து வந்ததா?
    • ‘நாம் சர்வாதிகாரிகள்’ : வன்முறை, நயவஞ்சகம் – இவை தான் நமது அடையாளம்!! (யூதர்களின் இரகசிய அறிக்கை!! : ஒரு நூற்றாண்டுக்கு முன் அம்பலமான சதி!! – (பகுதி-2)

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • Bigg Boss 7 Day 58: `இந்துஜா என்னைக் கண்டுக்கல’- வருத்தப்பட்ட பூர்ணிமா; பஞ்சாயத்தைத் தொடங்கிய விஷ்ணு-  (வீடியோ)
    • மாவீரர் தின நினைவேந்தலுக்கு 15 லட்சம் கப்பம் கோரியவர் கைது
    • உலகின் 8வது அதிசயமாக அங்கோர் வாட் கோயில் அறிவிப்பு!
    • சென்னையில் கொட்டித்தீர்க்கும் கனமழை; டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் புயல் உருவாக வாய்ப்பு!
    Recent Comments
      Quick Links
      • முகப்பு
      • இந்தியா
      • உலகம்
      • வெளிநாட்டு
      • சினிமா
      • விளையாட்டு
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • வினோதம்
      • அரசியல்
      Quick Links
      • கட்டுரைகள்
      • தொடர் கட்டுரைகள்
      • கவிதைகள்
      • கலைகள்
      • வீடியோ
      • புகைப்பட தொகுப்பு
      • தொழில்நுட்பம்
      • வேலைவாய்ப்பு
      • கல்வி
      Quick Links
      • ஆரோக்கியம்
      • அந்தரங்கம்
      • ஆன்மீகம்
      • சுற்றுலா
      • சிறப்பு செய்திகள்
      • வினோதம்
      BRAKING NEWS
      • வீடியோவில் தோன்றியது துவாரகா தானா? முக அசைவு, மொழிநடையில் நிபுணர்கள் சந்தேகம்
      • சரக்குக் கப்பலைக் கடத்தி மேற்கு நாடுகளை மிரட்டும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள்
      • இயேசுவின் போதனைகள், சனாதன யூதர்களின் ஆயிரமாண்டுகால நம்பிக்கைகளின் வேர்களை அசைத்துப் பார்ப்பதாக இருந்தது. ஆகவே அவர்களால் இயேசுவை ஏற்க இயலவில்லை; கொல்ல முடிவு செய்தார்கள் – நிலமெல்லாம் ரத்தம் 4
      • தீபாவளி இந்து பண்டிகையா? பௌத்தம், சமணத்தில் இருந்து வந்ததா?
      • ‘நாம் சர்வாதிகாரிகள்’ : வன்முறை, நயவஞ்சகம் – இவை தான் நமது அடையாளம்!! (யூதர்களின் இரகசிய அறிக்கை!! : ஒரு நூற்றாண்டுக்கு முன் அம்பலமான சதி!! – (பகுதி-2)
      2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

      swissreplicas.to

      bestwatchreplica.co
      replica watches

      swiss replica website

      fake rolex for sale
      relogios replicas
      Go to mobile version