Site icon ilakkiyainfo

பிரித்தானியாவில் பு­லிகள் அமைப்புக்கு தொடர்ந்தும் தடை!!

ஐரோப்­பிய நீதி­மன்றம் குறித்த தடை­நீக்க தீர்ப்பை வழங்­கி­னாலும் தடைப்பட்­டி­ய­லுக்குள் இருந்து விடு­த­லைப்­பு­லி­களின் பெயர் நீக்­கப்­ப­ட­வேண்டும் என்ற வாதத்தை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை.

எனவே ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் சட்­ட­மு­றை­க­ளுக்கு ஏற்ப பிரித்­தா­னி­யாவில் விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பு இன்னும் தடை­செய்­யப்­பட்­ட­தா­கவே கருதப்ப­டு­கி­றது என்றும் அவர் குறிப்­பி்ட்டார்.

இலங்­கையின் தேர்தல் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்­கான தடை­நீக்கம் தொடர்பில் நேற்று முன­தினம் பிரித்­தா­னிய பிர­புக்கள் சபையில் கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற்­றன.

இதன்­போது எழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு பிர­புக்­களின் சபையின் அமைச்­ச­ரவை பேச்­சாளர் வலெஸ் ஒப் சல்­டைரி மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

நேஸ்பி பிரபு

2006ஆம் ஆண்டில் இருந்து ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தாலும் 2000ஆம் ஆண்டில் இருந்து பிரித்­தா­னி­யா­விலும் தடை­செய்­யப்­பட்­டுள்ள விடு­த­லைப்­பு­லி­களின் தடை கடந்த ஒக்­டோபர் 16 ஆம் திக­தி­யன்று   ஐரோப்­பிய ஒன்­றிய  நீதி­மன்­றத்­தினால்  நீக்­கப்­பட்­டமை தொடர்பில் என்ன நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது என்று நேஸ்பி பிரபு பிர­புக்கள் சபையில் கேள்வி எழுப்­பினார்.

இதற்கு பதி­ல­ளித்த அமைச்­ச­ரவை பேச்­சாளர் வலெஸ் ஒப் சல்­டைரி ஐரோப்­பிய நீதி­மன்றம் குறித்த தடை­நீக்க தீர்ப்பை வழங்­கி­னாலும் தடைப் பட்­டி­ய­லுக்குள் இருந்து விடு­த­லைப்­பு­லி­களின் பெயர் நீக்­கப்­ப­ட­வேண்டும் என்ற வாதத்தை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை.

எனவே ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் சட்­ட­மு­றை­க­ளுக்கு ஏற்ப பிரித்­தா­னி­யாவில் விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பு இன்னும் தடை­செய்­யப்­பட்­ட­தா­கவே கரு­தப்­ப­டு­கி­றது என்று குறிப்­பிட்டார்.

இந்த பதிலை அடுத்து தமது கருத்தை முன்­வைத்த நேஸ்பி பிரபு விடு­த­லைப்­பு­லி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரனின் பிறந்­தநாள் நிகழ்வு ஈழத்துக்­கான  நிதிச்­சே­க­ரிப்பு என்­பன எதிர்­வரும் வியா­ழக்­கி­ழ­மை­யன்று பிரித்­தா­னி­யாவில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன.

இந்­த­நி­லையில் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­யாக இருந்தால் எந்­த­நி­கழ்வும் நிறுத்­தப்­ப­ட­வேண்டும் அல்­லவா? இது தொடர்பில் மெட்­ரோ­பொ­லிட்டன் பொலிஸா­ருக்கு தகவல் அனுப்­பப்­பட்­டுள்­ளதா? என்றும் கேள்­வி­யெ­ழுப்­பினார்.

இதற்கு பதி­ல­ளித்த  வலெஸ் ஒப் சல்­டைரி இந்த நிகழ்வு தொடர்பில் மேட்­ரோ­பொ­லிட்டன் பொலி­ஸா­ருக்கு இது­வரை தெரி­யா­தி­ருக்­கு­மானால் அது ஆச்சரி­யத்­தக்க செயல் என்று குறிப்­பிட்டார்.

நல்­லி­ணக்­கத்தில் உறு­தி­யாக இருக்­கின்றோம்

பிரித்­தா­னிய அர­சாங்கம் எப்­போதும் இலங்­கையின் அனைத்து    சமூ­கங்கள் மத்­தி­யிலும் நல்­லி­ணக்கம் ஏற்­ப­ட­வேண்டும் என்­பதில் கரி­சனை கொண்டிருப்ப­தா­கவும் நல்­லி­ணக்­கத்­தையும் மீள்­கட்­டு­மா­னத்­தையும் பிரித்­தா­னிய அர­சாங்கம் ஊக்­கு­வித்­து­வ­ரு­வ­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார்.

தேர்தல் நியா­ய­மாக நடக்­குமா?பாஷ் பிரபு(தொழில்­கட்சி) பிர­புக்கள் சபை நேரத்தில் கேள்வி எழுப்­பு­கையில்,

இலங்­கையில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச முன்­கூட்­டிய தேர்தல் ஒன்றை அழைத்­துள்ளார். இந்­த­நி­லையில் எதிர்­கட்சி வேட்­பாளர் சிறி­சேன பங்­கேற்ற தொலைக்­காட்சி அர­சியல் நிகழ்ச்சி ஒன்று அர­சாங்­கத்­தினால் குழப்­பப்­பட்­டுள்­ளது.

இந்­த­நி­லையில் குறித்த தேர்தல் நியா­ய­மா­ன­தாக நடக்கும் என்று எவ்­வாறு நம்­பலாம் என்று கேட்டார்.

இதற்கு பதி­ல­ளித்த பிர­புக்­களின் சபையின் அமைச்­ச­ரவை பேச்­சாளர் இந்த விடயம் தொடர்பில் பிரித்­தா­னியா இலங்­கை­யிடம் கேள்வி எழுப்பும். இலங்கையில் நியா­ய­மான முறை­யி­லான ஜனா­தி­பதி தேர்தல் ஒன்று நடத்­தப்­ப­டு­வதை பிரித்­தா­னிய அர­சாங்கம் உறுதி செய்யும் என்று குறிப்­பிட்டார்.

ஒத்­து­ழைப்பு கிடைக்­க­வில்லை

ஹன்னாய் பிரபு கேள்வி எழுப்­பு­கையில் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்கும் போர்க்­குற்ற விசா­ர­ணை­க­ளுக்கு இலங்கை அர­சாங்கம் ஒத்­து­ழைப்பு வழங்­கக்­கூடிய சாத்­தி­யங்கள் உள்­ள­னவா? என்று கேட்டார்.

இதற்கு பதி­ல­ளித்த வலஸ் ஒப் சல்­டைரி, ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் ஆணை­யாளர் இலங்­கை­யிடம் இருந்து ஒத்­து­ழைப்பு கிடைக்­க­வில்லை என்று குறிப்­பிட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டினார்.

ஏவெ­பெரி பிரபு எழுப்­பிய கேள்­வியில் ஐ.நா. விசா­ர­ணை­யைா­ளர்­க­ளுக்கு இல்ங்கை விசா வழங்­கா­மையை இந்த அர­சா்­ஙகம் கண்­டிக்­கின்­றதா? மேலும் மார்ட்டின் அதி­சாரி தலை­மை­யி­லான விசா­ரணைக் குழு ஆணையின் பிர­காரம் அறிக்­கையை முன்­வைக்­குமா? என்று வின­வினார்.

பிரித்­தா­னியா கவனம் செலுத்­தி­யது

இந்தக் கேள்­விக்கு பதி­ல­ளித்த அமைச்­ச­ரவை பேச்­சாளர் வலஸ் ஒப் சல்­டைரி,இலங்கை அர­சாங்­கத்தின் ஒத்­து­ழை­யாமை போக்கு குறித்து பிரித்­தா­னியா கவ­னம்  ­செ­லுத்­தி­யுள்­ளது.

இலங்­கையின் உள்­நாட்டு விசா­ர­ணையின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாமை காரணமாகவே சர்வதேச விசாரணை மீது பிரித்தானியா கவனம் செலுத்தியது என்றும கூறினார்.

இதன்போது கேள்வி எழுப்பிய கென்னடி பிரபு சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்காமை தொடர்பில் பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கை என்ன என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த வலெஸ் ஒப் சல்டைரி பிரித்தானியா தமது நிலைப்பாட்டை உறுதியாக தெரிவித்துள்ளதாவும் அந்தக் கொள்கையில் உறுதியாக உள்ளதாகவும் குறிப்பிட்டதுடன் அதனை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லும் என்றும் தெரிவித்தார்.

Exit mobile version