Site icon ilakkiyainfo

ஈரானில் சவுக்கடி வாங்க துணிந்த பெண்: ரெயிலில் ஆடிப்பாடிய ஈரானிய பெண் (வீடியோ)

தெஹ்ரான்: ஈரானில் பெண்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடு சட்டங்கள் உள்ளன.ஈரானிய அரசாங்கம் மற்றும் இளைஞர்கள் இடையே ஒரு பண்பாட்டுப் போர் நடந்து வருகிறது.

சமீபத்தில் ஆண்கள் வாலிபால் போட்டியை ரசித்த ஈரான் பெண் ஒருவருக்கு ஒருவருட சிறைதண்டனை கொடுக்கப்பட்டது.இந்த நிலையில் ஈரானின் பெண்களுக்கு எதி கட்டுப்பாடு   சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து  ஈரானிய பெண்மணி ஒருவர் தனது தனது முகத்தில் இருந்த பர்தா துணியை அகற்றிவிட்டு சுரங்க ரெயிலில் ஆடிப்பாடினார். அதை தக்கு தானே வீடியோவாகவும் எடுத்து உள்ளார்.

அடையாளம் தெரியாத அந்த பெண் ஊக்கத்துடன் ஆடியபோது மற்ற பயணிகள் அவரை படம் எடுத்து உள்ளனர்.அவரது நடனம் தீங்கற்றதாக தோன்றலாம் ஆனால் அவர் ஈரானின் இரண்டு சட்டங்களை மீறி உள்ளார்.

அங்கு பொதுஇடங்களில் நடனம் ஆடுவது தடை செய்யபட்டு உள்ளது. அவர் ஆடத்தொடங்கும் போது அவரது பர்தா தலையை மூடி இருந்தது.ஆர்வ மிகுதியால் அவர் ஆட ஆட அவரது பர்தா தலையில் இருந்து சரிந்து அவரது கழுத்தில் இறங்கி விட்டது.

உடன் செல்லும் பெண் பயணிகள் அவர் ஆடும் போது தங்களை யாரும் பார்த்து விடக் கூடாது என நினைத்து அந்த கேரேஜில் இருந்து இறங்குகிறார்கள்.இந்த வீடியோ ஈரான் பெண்கள் பேஸ் புக்கில் பதிவு செய்யபட்டு இந்த வீடியோவை 7 லட்சம் பேர் பார்த்து உள்ளனர்.

தெஹ்ரானில் மகிழ்ச்சி என்ற வீடியோவில் ஆண்- பெண் ஆடிப்பாடிய வீடியோ எடுக்கப்பட்டு யுடியூபில் வெளியானது. இதில் நடித்த 7 பேருக்கும் சிறை தண்டனையும் 91 சவுக்கடிகளும் வழங்கபட்டது.குறிப்பிட தக்கது.இது பல்வேறு உதாரணங்களை சொல்லலாம்.

Exit mobile version