Site icon ilakkiyainfo

நவம்பர் 27! சர்ச்சையைக் கிளப்பிய கனடிய எம்.பி.இன் பாராளுமன்ற உரை! (வீடியோ)

தமிழ் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் தமிழ் ஈழ மக்களுக்காக தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட மாவீரர்களை நினைவுகூரும் நாளான நவம்பர் 27ம் நாள் தொடர்பில் கனடிய பாராளுமன்றத்தில் கடந்த 26ம் திகதி உரையாற்றியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு ராதிகா தமிழீழ மாவீரர்களுக்கு ஆதரவாக பேசியது அதிர்ச்சியளிப்பதாக, கனடா பொது பாதுகாப்பு அமைச்சர் ஸ்டீபன் ப்ளானே கூறியுள்ளார்.

மேலும், இது ஒரு முக்கியமான நாள் மற்றும் நினைவு கூற வேண்டிய நாள் எனக் கூறியதற்காக அனைத்து கனடிய மக்களிடமும், முக்கிய பிரமுகர்களிடமும் ராதிகா சிற்சபைஈசன் மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த மாவீரர் தினம், தீவிரவாத அமைப்பான தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் மறைந்த தினம் என்றும் கூறியுள்ளார், மேலும் கனடிய வீரர்கள் இறந்த நாளை, தீவிரவாதிகள் இறந்த நாளுடன் ஒப்பிட்டு கூறியது அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்,

இதனையடுத்து நேற்று, ராதிகா அனுப்பிய மின்னஞ்சலில், தான் எந்தவித தீவிரவாத அமைப்பிற்கும், கலவரத்திற்கும் ஆதரவளிப்பதில்லை என தெரிவித்துள்ளார்.

கனடிய பாராளுமன்றத்தின் முதல் தமிழ் உறுப்பினரான நான், உலக முழுவதும் வசிக்கும் தமிழ் மக்களுக்கும், கனடிய தமிழ் மக்களுடனும் சேர்ந்து போரில் மரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதாகவும் ராதிகா மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் சிறிலங்காவில் ஒடுக்கபடுகிறார்கள் என்பது உண்மைதான் ஆனால் மாவீரர் தினத்தை கனடிய நினைவு நாளுடன் ஒப்பிடுவதை ஏற்றுகொள்ள முடியாது என வெளிநாட்டுஅலுவல்கள் மற்றும் அனைத்துலக மனித உரிமைகளுகளுக்கான பாராளமன்ற செயலாளரும் கொன்சவேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தீபக் ஓப்ராய்யும் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகளை ஒப்பிடும் ராதிகாவின் செயல் இறந்த கனடிய வீரர்களை அவமதிப்பதாகும்: டீபக் ஒபராய்

ஒரு பயங்கரவாத அமைப்பின் இறந்த உறுப்பினர்களோடு கனடிய கொள்கைளிற்காகவும் கனடாவின் நலனிற்காகவும் மடிந்த போர் வீரர்களோடு ஒப்பிடுவது தவறு என்பதை ராதிகா உணர வேண்டுமென டீபக் ஒபராய் குறிப்பிட்டுள்ளார்.

ராதிகா மாவீரர் தினம் குறித்து கனடியப் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையைக் கண்டித்த கனடிய வெளிவிவகார அமைச்சு, மனிதவுரிமை விவகாரங்களிற்கான அமைச்சின் செயலாளரான டீபக் ஒபராய் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழர்களிற்கு இலங்கையில் பிரச்சினையுண்டு ஆனால் அதற்காக கனடியப் போர் வீரர்களின் நினைவு தினத்தை தமிழ் வீரர்களின் நினைவு தினத்தோடு ஒப்பிடுவது தவறானது என்றும் இது போர் வீரர்களை அவமதிக்கும் ஒரு ஒப்பீடு என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version