எதிரணியின் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஜனாதிபதி தேர்தலுக்கான முதலாவது பிரச்சார கூட்டம் பொலன்னறுவை நகரில் சற்று நேரத்திற்கு முன்னர் ஆரம்பமானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பொலன்னறுவை நகரில் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் நடைப்பெறும் இடத்திற்கு வருகை தந்த மைத்திரிபால சிறிசேன தனது சின்னமான வெள்ளை புறாவை பறக்கவிட்டமை குறிப்பிடத்தக்கது.
நான்கு நிற பலூன்கள் பறக்கவிடப்பட்டன
நீளம் , பச்சை ,சிகப்பு மற்றும் மஞ்சள் ஆகிய நான்கு நிறங்களில் வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் கூட்டம் ஆரம்பமாகியதும் பறக்கவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டிற்கு எதிராக ஆட்சி செய்யும் கொள்ளையர்களை நாம் வீட்டிற்கு அனுப்பும் காலம் வந்து விட்டது. தற்போது நாட்டில் மஹிந்தவிற்கெதிரான யுத்தம் ஆரம்பமாகியுள்ளது.இந்த ஜனாதிபதி தேர்தலில் நாம் முழுமையான வாக்குகளை பெற்று அமோக வெற்றியடைவோம்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் தற்போது அனைத்து கட்சிகளும் இணைந்துள்ளமை மகிழ்ச்சியாகவுள்ளது.
ஆட்சி செய்யும் இந்த அரசாங்கம் வீட்டிற்கு செல்லவேண்டிய காலம் வந்து விட்டது.
காலிமுகத்திடலில் உள்ள 108 ஏக்கர் நிலத்தை மஹிந்த ராஜபக்ஷ சீனாவிற்கு விற்கவுள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையம் ஆகியவற்றை சீனாவிற்கு வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.ஏன் என்றால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமையே இதற்கான காரணமாகும்.
இது தமிழா அல்லது மலையாளமா? தமிழா..தமிழா உன் தலையொழுத்து எப்படி இவர்களால் மாற்றப்படபோகின்றது என்பதை இதிலிருந்தாவது தெரிந்து கொள்.