ilakkiyainfo

வன்முறையே வரலாறாய்… பாகம் – 10 : (தொடர் கட்டுரை)

முந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம்.

இந்தியாவில் இஸ்லாம் வாள் முனையில் பரவிதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற விழையும் இஸ்லாமிய “கல்வியாளர்கள்” அதனை வெகு தீவிரமாக மறுப்பதுடன், இஸ்லாம் சூஃபிக்களின் பிரசங்கங்களின் மூலம் “அமைதியான” முறையில் இந்தியாவில் பரவியதாக புளுகு மூட்டையை அவிழ்த்துவிடுவார்கள்.

இதற்கு அடிப்படையாக அவர்கள் காட்டுவது பிரிட்டிஷ் வரலாற்றாசிரியரான தாமஸ் ஆர்னால்டின் (1864-1930) குறிப்புகளையே.

sufism
இந்தத் தாமஸ் ஆர்னால்ட், பல நூற்றாண்டுகளாக மேற்கத்திய உலகில் இஸ்லாமைக் குறித்து அறியப்பட்ட எதிர்மறைக் கருத்துக்களை திசை திருப்பும் எண்ணத்துடன் எழுதிய அடிப்படை ஆதாரமற்ற குறிப்புக்ளையே மேற்கூறிய இஸ்லாமியர்கள் எடுத்தாண்டு வருகிறார்கள்.

காலம் காலமாக மேற்கத்திய உலகம் இஸ்லாம் ஒரு வன்முறை மதம் என்றே நம்பி வந்திருக்கிறது. ஆர்னால்ட் தனது போலிப் பிரச்சாரங்கள் மூலம் அதனை மாற்ற முயன்றார்.

துரதிருஷ்ட வசமாக, இஸ்லாமின் வரலாற்றைப் பற்றி அதிகம் அறிந்திராத பல மேற்கத்திய வரலாற்றாசிரியர்களில் பலர் அதனை உண்மை எனவே நம்பினர்.

சென்ற நூற்றாண்டில் தாமஸ் ஆர்னால்ட்டின் புத்தகத்தை ஆராயப் புகும் இன்னொரு வரலாற்றிசிரியரான பீட்டர் ஹார்டி, அவரது இஸ்லாமிய உயர்வுவாதம் வலிமையற்ற ஆதாரங்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட, அடிப்படையற்ற தகவல்களின் மேல் கட்டப்பட்ட புளுகு மூட்டை என்பதனைக் கண்டறிந்தார்.

இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் எனும் தாமஸ் ஆர்னால்டின் புத்தகத்தின் வாதங்களுக்கான அடிப்படையாக அவர் தருவது கீழ்க்கண்ட தகவல்களை மட்டுமே,

“…1878-ஆம் வருடம் பஞ்சாபின் மாண்ட்கோமரி ஜில்லாவைச் சேர்ந்த லெப்டினண்ட் எல்பின்ஸ்டைன் இப்படிக் கூறுகிறார் : பாக்பட்டான் நகரத்தில் மிகப் புகழ் வாய்ந்த சூஃபியான பாபா ஃபரீத் என்பவரின் சமாதி அமைந்திருக்கிறது.

இந்த பாபா ஃபரீத் கிழக்கு பஞ்சாபைச் சேர்ந்த ஏராளமானவர்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றியதுடன், அவர் நடத்திக் காட்டிய அற்புதங்கள் காரணமாக அவர் சூஃபிக்களின் மத்தியில் மிக உயர்ந்த இடத்தினை அடைந்தவராக இருக்கிறார்…..

பஞ்சாபின் மற்றொரு ஜில்லாவான ஜங்கிலிருந்தும் மேற்கூறிய சூஃபி ஷேக் ஃபரீத் அல்-தின் குறித்து இதே போலத் தகவல் ஒன்று கிடைக்கிறது. 1881-ஆம் வருடம் பஞ்சாபின் மக்கள்தொகைக் கணக்கெடுத்த இப்பன்ஸ்டோன் என்னும் ஆங்கிலேயர், மூல்தானைச் சேர்ந்த பனா அல்-ஹக் என்ற சூஃபியும் மேற்கண்ட சூஃபி ஃபரீத்தினைப் போலவே பலரை இஸ்லாமிற்கு தங்களின் பிரச்சாரம் மூலம் மதம் மாற்றினார்கள் என்ற தகவலை அளிக்கிறார்.

கட்ச் பகுதியினைச் சேர்ந்த  மேமன்கள் சையத் யூசுஃப் அல்-தின் என்ற சூஃபி நடத்திக் காட்டிய அற்புதங்களைக் கண்டபிறகு இஸ்லாமிற்கு மதம் மாறியதாக கட்ச் பகுதியில் வெளியான பாம்பே கெஸட்டீர் பத்திரிகைச் செய்தி கூறுகிறது. மேற்கூறிய யூசுஃப் அல்-தின், சையத் அப்தல் காதிர் ஜிலானி என்கிற மற்றொரு சூஃபியின் வழி வந்தவராகவும் அது மேலும் கூறுகிறது.

பம்பாய் மாகாணத்தைச் சேர்ந்த சையத் மொகமது ஜெசு டராஸ் என்பவர் அங்கிருந்த பல நெசவாளர்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றியதாகத் தெரிகிறது.

வடமேற்குப் பிராந்தியத்திலிருந்த ஆஸம்கர் பகுதியில் 1886-ஆம் வருடம் தொகுக்கப்பட்ட ஒரு செய்தியின்படி, அங்கிருந்த ஜமீன்தார்கள் பலர் இஸ்லாமிய சூஃபி ஒருவரின் வழிகாட்டுதலின் பேரில் அவர்களின் முன்னோர்கள் மதம் மாறியதாகச் சொன்னார்கள்.

பதாவுன் ஷெய்க் ஜலால்தின் தப்ரிஸி என்னும் சூஃபி ஒரு ஹிந்து பால்காரனை மதம் மாற்றியதாகத் தெரிகிறது. இதே தப்ரிஸி பிற்காலத்தில் வங்காளத்திற்கு சென்று அங்கு தனது மதக் கடமையைச் செய்தார்.”

மேற்கண்ட செய்திகளின் அடிப்படையிலேயே “வரலாற்றிஞர்” தாமஸ் ஆர்னால்ட் இஸ்லாம் ஒரு “அமைதி மார்க்கம்” என்னும் முடிவுக்கு வந்திருப்பதைக் கண்டு வெளிப்படுத்துகிறார் பீட்டர் ஹார்டி.

அவரின் புத்தகத்தில் கூறப்பட்ட ஆதாரமற்ற செய்திகளையும் வெளிப்படுத்துகிறார் ஹார்டி.   உதாரணமாக, தாமஸ் ஆர்னால்ட், 1884-ஆம் வருடம் பாம்பே கெஸட்டில் சூஃபி ஞானியான மாபாரி கண்டாயத் (பிர் மாபாரி), 1305-ஆம் வருடம் தக்காணத்திற்குச் சென்று தனது பிரச்சாரங்கள் மூலம் அங்கிருந்த பல ஜைனர்களை இஸ்லாமிற்கு மதம் மாற்றியதாக வந்த செய்தியை மேற்கோள் காட்டுகிறார்.

ஆனால் மேற்கண்ட செய்தி பிர் மாபாரி எந்த விதமான முறைகளைக் கையாண்டு மதமாற்றங்களைச் செய்தார் என்பது குறித்தான ஆதாரங்கள் எதனையும் அவர் அளிக்கவில்லை. “அமைதியான” முறையில் அவர் மதம் மாற்றினார் எனபது வெறு வாய்மொழிச் சொல்லே, அதற்கு அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லை என்பதனையும் வசதியாக மறந்து விடுகிறார் தாமஸ் ஆர்னால்ட்.

ஆனால், பிர் மாபாரி குறித்து அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் எழுதிய குறிப்புகள், பிர் மாபாரியின் முகத்திரையைக் கிழிக்கின்றன. இதனை ஆராயும் இன்னொரு மேற்கத்திய வரலாற்றாசிரியரான ரிச்சர்ட் ஈட்டன், பிர் மாபாரி காஃபிர்களை மதம் மாறச் செய்ய அவர் உபயோகித்த வழிமுறைகளை நமக்கு எடுத்துரைக்கிறார்.

ரவுசத்-அல்-அவுலியா என்னும் வரலாற்றுப் புத்தகத்தை எழுதிய முகமது ஜுபாரி (1825-26), பிர் மாபாரி கண்டாயத் தக்காணத்திற்கு ஒரு “ஜிகாதி”யாக மட்டுமே வந்தார் என்று விளக்குகிறார்.

“டெல்லியை ஆண்ட அலாவுதீன் கில்ஜியின் (1316) காலத்தில், பிர் மாபாரி முஸ்லிம் படையினருடன் இணைந்து பணியாற்றினார் (1310-11). மேலும் பிர் மாபாரி தக்காணத்தில் வாழும் காஃபிர் அரசர்களுக்கு (பிஜப்பூர்) எதிராக “புனிதப் போர் (ஜிகாத்)” செய்வதற்காக மட்டுமே வந்தார்.

அவர் கையிலிருந்த பெரிய இரும்புத் தடியால் அடித்து பல காஃபிர் ராஜாக்களின் கழுத்துக்களையும், தலைகளையும் உடைத்து அவர்களைத் தோல்வியுறச் செய்து மண்ணைக் கவ்வ வைத்தார். இதனைக் கண்டு அஞ்சிய பல காஃபிர்கள், பிர் மாபாரி மூலம் உண்மையான மதமான இஸ்லாமிற்கு மதம் மாறினர்”

இன்னொரு தகவல், பிர் மாபாரி பிஜப்பூரின் ஏதோவொரு கிராமத்தில் வாழ்ந்த பிராமணர்களை விரட்டியடித்ததாகச் சொல்கிறது. அன்றைக்கு எழுதப்பட்ட பல இஸ்லாமிய வரலாற்றுக் குறிப்புகள் பிர் மாபாரியை கையில் இரும்புத் தடி ஏந்திய ஒரு பெரும் ஜிகாதியாகவும், காஃபிர்களுக்கு அச்சமூட்டும்படி வாழ்ந்ததாகவும் மட்டுமே சொல்கின்றன. அதனாலேயே அவர் பிர் மாபாரி கண்டாயத் என்று அழைக்கப்பட்டார். கண்டாயத் என்ற சொல்லுக்கு “இரும்புத் தடி” என்று அர்த்தம்.

தாமஸ் ஆர்னால்டைப் போலவே, ரிச்சர்ட் ஈட்டனும் இஸ்லாம் அமைதியான முறையில் பரவியதான செய்தியை நமக்கு அளிக்க முனைந்து. அதற்கான காரணங்களையும் அவர் சொல்கிறார்.

கிராமப் பகுதிகளுக்குச் சென்ற சூஃபிக்கள் அங்கு அற்புதங்களைக் காட்டியதுடன், நோயாளிகளை குணப்படுத்தி தங்களின் சக்தியை வெளிப்படுத்தியதால் பல கிராமவாசிகள் இஸ்லாமிற்கு  இணைந்ததாகவும் அவரது     Sufis of Bijapur 1370-1700 என்னும்    புத்தகத்தில் விளக்கப் புகும் ரிச்சர்ட் ஈட்டன், மேற்கூறிய பல சூஃபிகள் படுபயங்கரமான “ஜிகாதி”கள் என்னும் உண்மையை கண்டடைகிறார்.

இந்துக்களுக்கு எதிராக அவர்கள் செய்த படுகொலைகளைப் பற்றி விளக்கமாக ஆராயும் ரிச்சர்ட் ஈட்டனின் புத்தகம் இந்திய முஸ்லிம்களுக்கு கோபமூட்டியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

எனவே 1970-களில் அந்தப் புத்தகத்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று அவர்கள் போராடினார்கள். அதற்கு அஞ்சாத ரிச்சர்ட் ஈட்டன் சூஃபிகளின் போலித்தனத்தைத் தொடர்ந்து தோலுறித்துக் கொண்டிருந்தார்.

எந்தவொரு பகுத்தறிவுள்ள, சிந்திக்கும் திறனுள்ள மனிதனும் சூஃபிக்களின் அற்புத சக்திகளைப் பற்றிய கட்டுக்கதைகளை நம்பவே மாட்டான். அது நம்பிக்கையாளர்களின் கற்பனையில் உதித்த வெறும் புனைகதைகளேயன்றி வேறோன்றுமில்லை என்பதால்.

இந்த சூஃபிகளின் “அற்புத சக்தி” பற்றி ஆராய்ந்த பேராசிரியர் மொஹ்மத் ஹபீப் அவர்கள் இவையத்தனையும் பின்னாட்களில் இட்டுத் திரிக்கப்பட்ட புனைவுகளே என்னும் முடிவினை நம் முன் வைக்கிறார்.

இன்றைக்குக் கிடைக்கும் ஆதாரங்களின்படியும், இஸ்லாமிய ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த சூழ்நிலைகளையும் அறிந்த் எவரும் சூஃபிக்கள் இந்துக்களை அமைதியான வழிமுறைகள் மூலம் மதம் மாற்றினார்கள் என்பது வெறும் புளுகுகள் என்பதினைத் தெளிவாக்குகின்றன.

சூஃபிகளில் புகழ் வாய்ந்தவரான அமீர்-குஸ்ரு (பதினான்காம் நூற்றாண்டு) அவரது குறிப்புகளில் எவ்வாறு காஃபிர் இந்துக்கள் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களால் அடிமைப்படுத்தப்பட்டு வாள் முனையில் பெருவாரியாக மதமாற்றம் செய்யப்படார்கள் என்பதனை எழுதி வைத்துச் சென்றிருக்கிறார்.

ஆனால் எந்தவொரு இடத்திலும் காஃபிர் இந்துக்கள் அமைதியான முறையில் மதமாற்றம் செய்யப்பட்டதாக ஒரு சிறு குறிப்பு கூட இல்லை என்பதினை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

(தொடரும்)

மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
தமிழில் : அ. ரூபன்

முந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம்

Exit mobile version