Site icon ilakkiyainfo

கோத்­தா­பயவின் புல­னாய்வுப் பிரி­வுக்கு மண்ணை தூவி, அர­சாங்­கத்­துக்கு சந்­தி­ரிகா வைத்த ஆப்பு – சத்­ரியன் (கட்டுரை)

கடந்த பல மாதங்­க­ளா­கவே வரப்­போ­கி­றது, வரப்­போ­கி­றது என்று கூறப்­பட்டு வந்த ஜனா­தி­பதித் தேர்தல், இப்­போது வந்தே விட்­டது. தேர்­த­லுக்­கான அறிவிப்பை ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ வெளி­யிட, ஜன­வரி 8ஆம் திகதி தேர்தல் இடம்­பெறும் என்று தேர்­தல்கள் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய அறி­வித்து விட்டார்.

அர­சாங்கம் தனது தரப்பில் தேர்­தலை எதிர்­கொள்­வ­தற்­கு­ரிய எல்லா ஏற்­பா­டு­க­ளையும் செய்து முடித்து விட்டே தேர்தல் அறி­விப்பை வெளி­யிட்­டது.

எதிர்க்­கட்­சிகள் தேர்­த­லுக்குத் தயா­ரா­வ­தற்குள் தாம் சில அடி­க­ளா­வது முன்­நோக்கிப் பாய்ந்து விட வேண்டும் என்ற அவ­சரம் அர­சாங்­கத்­திடம் இருந்­தது.

அண்­மைக்­ கா­லங்­களில் ஆளும்­கட்­சியின் செல்­வாக்கு வீழ்ச்சி கண்­டி­ருந்­தாலும், ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷவை எதிர்த்து நிற்கும் வலு­வான வேட்பாளர் ஒரு­வரை எதி­ர­ணி­யினால் நிறுத்த முடி­யாது என்றே அரசாங்கம் கரு­தி­யி­ருந்­தது.

பொது­வேட்­பா­ள­ராக பெண் ஒரு­வரே போட்­டி­யிடப் போவ­தாக முதலில் வதந்­திகள் பர­வின.

சந்­தி­ரிகா குமா­ர­துங்­க­வி­னதும், முன்னாள் பிர­தம நீதி­ய­ரசர் ஷிராணி பண்­டா­ர­நா­யக்­க­வி­னதும் பெயர்கள் அப்­போதே அடி­படத் தொடங்கி விட்­டன.

அதை­ய­டுத்து, நிறை­வேற்று அதி­கார ஆட்­சி ­மு­றையை ஒழிக்கும் திட்டம் வலுப்­பெற்ற போது, மாது­ளு­வாவே சோபித தேரர், ரணில் விக்­கி­ர­ம­சிங்க, கரு ஜெய­சூ­ரிய ஆகி­யோரின் பெயர்கள் மட்­டு­மன்றி, அர்­ஜுன ரணதுங்க போன்­ற­வர்­களின் பெயர்­களும் கூட அடி­பட்­டன.

இவ்­வாறு பல­பே­ரு­டைய பெயர்கள் எதி­ர­ணியின் பொது­வேட்­பாளர் தெரி­வுக்கு அடி­பட்டுக் கொண்­டி­ருந்த போது, எதி­ர­ணி­யினர் வேட்­பாளர் ஒரு­வரைத் தெரிவு செய்ய முடி­யாமல் திண்­டா­டு­கின்­றனர் என்றே அர­சாங்கம் நினைத்­தது.

ஆனால் எதி­ர­ணியும், அர­சாங்­கத்தின் வேகத்­துக்கு ஈடான ஏற்­பா­டு­களை மேற்­கொண்டு வந்­ததை அதனால் புரிந்து கொள்ள முடி­யா­மற்­போ­னது தான் ஆச்ச­ரியம்.

அதுவும், மிகப்­பெ­ரிய புல­னாய்வுக் கட்­ட­மைப்பு ஒன்றைக் கொண்­டி­ருந்த அர­சாங்­கத்­தினால், இது­பற்றித் துப்­ப­றிய முடி­யாமற் போனது அதன் துர­திர்ஷ்டம் என்றே கருத வேண்டும்.

விடு­தலைப் புலி­களை அழிக்கும் அள­வுக்கு- அவர்­களின் கட்­ட­மைப்­பு­களைச் சிதைக்கும் அள­வுக்கு- புல­னாய்வு அமைப்­பு­களைத் திற­மை­யாகப் பயன்படுத்திய அர­சாங்­கத்­தினால், எதி­ர­ணியின் பொது­வேட்­பாளர் யாரெனக் கண்­ட­றிய முடி­யாது போனதைப் பெருந்­தோல்வி என்றே குறிப்பிட வேண்டும்.

அர­சாங்­கத்தின் கவனம் முழு­வதும் சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவின் மீதே இருந்­தது.

அவர் மஹிந்த ராஜ­பக் ஷவுக்கு எதி­ராக கள­மி­றங்­கினால், கடு­மை­யான நெருக்­க­டியை எதிர்­கொள்ள வேண்­டிய நிலை ஏற்­படும் என்று ஆளும்­கட்­சிக்கு அச்சம் இருந்­தது.

சந்­தி­ரிகா மீண்டும் அர­சி­ய­லுக்கு வந்தால், ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் பிளவு ஏற்­படும் என்றும், ஆளும்­கட்­சி­யுடன் கூட்­டணி வைத்­துள்ள இட­து­சா­ரிக்­கட்­சிகள் கூட அவ­ரது பக்கம் சாயலாம் என்றும் கணக்குப் போட்­டது அர­சாங்கம்.

18ஆவது திருத்­தச்­சட்­டத்தின் மூலம், மூன்­றா­வது தட­வையும் போட்­டி­யி­டலாம் என்­பதால், சந்­தி­ரி­காவே மீளவும் அர­சி­ய­லுக்கு வந்து விடக் கூடாது என்பதே அர­சாங்­கத்தின் கவ­ன­மாக இருந்­தது.

முன்னாள் பிர­தம நீதி­ய­ரசர் சரத் என் சில்வா, கிளப்­பிய பிரச்­சினை அர­சாங்­கத்­துக்கு இன்னும் வச­தி­யாகிப் போனது.

17ஆவது திருத்­தச்­சட்­டத்தின் கீழ் இரண்டு முறை பதவிப் பிர­மாணம் செய்த ஒருவர், 18ஆவது திருத்­தச்­சட்­டத்தின் கீழ் மூன்­றா­வது முறை ஜனாதிபதியாகப் போட்­டி­யிட முடி­யுமா என்ற கேள்­வியை அது எழுப்­பி­யி­ருந்­தது.

சரத் என் சில்­வாவின் இந்தக் கேள்வி, சந்­தி­ரிகா விட­யத்தில் அச்சம் கொண்­டி­ருந்த அர­சாங்­கத்­துக்கு தெம்பைக் கொடுத்­தது.

சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவை போட்­டியில் இருந்து ஒதுங்க வைக்கும் அள­வுக்கு, உயர்­நீ­தி­மன்­றத்தின் சட்­ட­வி­யாக்­கி­யா­னத்தைப் பெற முயன்­றது அர­சாங்கம்.

அதனால் தான் உயர்­நீ­தி­மன்­றத்­திடம் இதனை ஒரு மனு­வாக விசா­ரித்து தீர்ப்­ப­ளிக்­கு­மாறு ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ கோர­வில்லை.

18ஆவது திருத்­தச்­சட்­டத்­துக்கு அமைய, மூன்­றா­வது முறையும் தேர்­தலில் தான் போட்­டி­யிட முடி­யுமா என்றும், நான்கு ஆண்­டு­க­ளுக்குப் பின்னர், தன்னால்  தேர்­த­லுக்கு அழைப்பு விடுக்க முடி­யுமா என்றும் தான் அவர் கேள்வி எழுப்­பி­யி­ருந்தார்.

இதன் மூலம், மூன்­றா­வது முறை போட்­டி­யி­டு­வ­தற்கு எதி­ராக எவரும் நீதி­மன்­றத்தை நாட முடி­யாமல் தடுக்­கலாம்.

* உயர்­நீ­தி­மன்­றத்தின் சட்­ட­வி­யாக்­கி­யா­னத்தை ஜனா­தி­ப­திக்­கான ஆலோ­சனை என்­பதால், அதனைப் பகி­ரங்­கப்­ப­டுத்­தாமல் இர­க­சி­ய­மாக வைத்திருக்கலாம்.

ஒரு­வேளை சந்­தி­ரிகா குமா­ர­துங்க போட்­டியில் இறங்­கினால் கூட, அதற்­கெ­தி­ராக வழக்குத் தொடுத்து அவரைத் தகுதி நீக்கம் செய்­யலாம் என்று அர­சாங்கம் பல சட்டத் திட்­டங்­களைப் போட்­டது.

ஒட்­டு­மொத்த நீதித்­து­றை­யையும், நிர்­வா­கத்­து­றை­யையும் தனது கட்­டுக்குள் வைத்­தி­ருக்­கின்ற ஒரு அர­சாங்­கத்­தினால், இதைச் செய்­வது ஒன்றும் கடி­ன­மா­ன­தல்ல.

அதனால் தான், உயர்­நீ­தி­மன்­றத்தின் சட்­ட ­வி­யாக்­கி­யா­னத்தைக் கூட, அர­சாங்கம் வெளி­யி­ட­வில்லை.

எதிர்க்­கட்­சிகள் நாடா­ளு­மன்­றத்தில் கோரிய போதிலும், அது ஜனா­தி­ப­திக்கு வழங்­கப்­பட்ட ஆலோ­ச­னையே என்றும், அதனை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்­டிய அவ­சியம் இல்லை என்றும் அமைச்சர் நிமால் சிறி­பால டி சில்வா பதி­ல­ளித்­தி­ருந்தார்.

ஒரு வர­லாற்று முக்­கி­யத்­துவம் மிக்க நீதி­மன்­றத்தின் கருத்து, அதுவும் நாட்டின் சட்­டத்­து­றையில், காலம்­கா­ல­மாக முன­்னோ­டி­யாக நிலைக்­கத்­தக்க ஒரு கருத்தை, பொது­மக்­க­ளுக்குத் தேவை­யற்­றது என்று மிகச்­ சு­ல­ப­மாக கூறி­யது அர­சாங்கம்.

அர­சாங்கம் அவ்­வாறு கூறி­ய­தற்குக் காரணம், அந்த சட்­ட­வி­ளக்­கத்தைத் தெரிந்து கொண்டால், ஒரு வேளை சந்­தி­ரிகா போட்­டியில் இறங்­கவோ அல்­லது மாற்று பொது­வேட்­பா­ளரைக் கள­மி­றக்­கவோ தயா­ராகி விடுவார் என்­ப­தற்­கே­யாகும்.

எதி­ரணி பொது வேட்­பா­ளரைத் தெரிவு செய்ய முடி­யாமல் திணற வேண்டும் என்­பதே அர­சாங்­கத்தின் நோக்கம்.

ஆனால், அர­சாங்­கத்தின் திட்­டத்தை, அதன் வழியில் சென்றே உடைத்­தெ­றிந்து விட்டார் சந்­தி­ரிகா.

எதி­ர­ணியின் பல­வீ­னத்தை உணர்ந்து, அதற்குள் இருந்து ஒரு வேட்­பா­ளரைத் தெரிவு செய்­வ­தற்குப் பதி­லாக, அர­சாங்­கத்­துக்குள் இருந்தே மஹிந்த ராஜ­பக் ஷ­வுக்கு எதி­ரான புதி­ய­தொரு எதி­ரியை உரு­வாக்கத் திட்­ட­மிட்டார்.

அதற்­காகத் தெரிவு செய்­யப்­பட்­டவர் தான் மைத்­தி­ரி­பால சிறி­சேன.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் நீண்­ட­கால உறுப்­பினர், பொதுச்­செ­ய­லா­ள­ராக பதவி வகிப்­பவர், பண்­டா­ர­நா­யக்க குடும்­பத்தின் விசு­வாசி, மக்கள் மத்­தி­யிலும் செல்­வாக்குப் பெற்ற ஒருவர்.

எனவே தான் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை பொது­வேட்­பா­ள­ராக்க சந்­தி­ரிகா முன்­னின்றார்.

ஏற்­க­னவே சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்­கவின் மர­ணத்­துக்குப் பின்னர், மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையே பிர­த­ம­ராக நிய­மிக்கத் திட்­ட­மிட்­டி­ருந்தார் சந்­தி­ரிகா.

ஆனால், அப­்போது மஹிந்த ராஜ­பக் ஷ ஜே.வி.பி. போன்ற கட்­சி­க­ளுடன் சேர்ந்து, கொண்டு சந்­தி­ரி­காவின் திட்­டத்தை மாற்­றி­ய­மைக்க அழுத்தம் கொடுத்தார்.

அதுவே பின்னர், அவரை ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடும் நிலைக்கு உயர்த்­தி­யது.

மீண்டும் சந்­தி­ரிகா குமா­ர­துங்க தனக்கு ஒரு வாய்ப்பை வழங்க முனைந்த போது மைத்­தி­ரி­பால சிறி­சேன அதனை மறுக்­க­வில்லை.

காரணம், அவ­ருக்கு மஹிந்த ராஜ­பக்­ ஷவின் ஆட்­சியின் மீது உச்­சக்­கட்ட வெறுப்பு ஏற்­பட்­டி­ருந்­தது.

அர­சாங்­க­த்தில் நிலவும் குடும்ப ஆதிக்­கமும், அமைச்­ச­ராக இருந்தும் தன்னால் எதையும் செய்ய முடி­யா­துள்ள கையறு நிலை யும் அவரை கடு­மை­யாக வெறுப்­ப­டையச் செய்­தி­ருந்­தது.

அதனால் தான், சந்­தி­ரிகா குமா­ர­துங்க இந்த வாய்ப்பை வழங்க முன்­வந்த போது தட்­டிக்­க­ழிக்­காமல் ஏற்றுக் கொண்­டி­ருந்தார்.

ஆனால் எந்த இர­க­சி­யமும் வெளியே கசி­ய­வில்லை. காரணம், இது­பற்றி வெளியே தெரி­ய­வந்தால் அர­சாங்கம் உசா­ராகி விடும், திட்­டத்தைக் குழப்ப முனையும் என்­பதை சந்­தி­ரிகா உணர்ந்­தி­ருந்தார்.

கோத்­தா­பய ராஜ­பக் ஷவின் கீழ் உள்ள அரச புல­னாய்வுப் பிரி­வுகள் எல்­லா­வற்­றையும் மோப்பம் பிடித்து விடும் என்­பதால், எல்­லோ­ரு­டைய கண்­ணிலும் மண்ணைத் தூவித் தான் காரியம் சாதிக்க வேண்டும் என்­பதை சந்­தி­ரிகா நன்­றா­கவே உணர்ந்­தி­ருந்தார்.

பத்து ஆண்­டுகள் ஜனா­தி­ப­தி­யாக இருந்­தவர், அந்தக் கால­கட்­டத்தில், போருக்குத் தலை­மை­யேற்­றவர், – பாது­காப்பு அமைச்­ச­ராக இருந்­தவர், பாது­காப்புச் சபைக் கூட்­டங்­க­ளுக்குத் தலைமை தாங்­கி­யவர் என்ற வகையில், சந்­தி­ரி­கா­வுக்கும் பாது­காப்புத் தொடர்­பான உத்­திகள் கைவந்த கலை­யா­கி­யி­ருக்­கி­றது.

அதனால் தான், மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­ட­னான சந்­திப்­புகள், பேச்­சுக்கள் எல்­லா­வற்­றையும் செய்­மதி, தொலை­பே­சிகள், இலக்­கத்­த­கடு மாற்­றப்­பட்ட வாக­னங்கள் என்று கச்­சி­த­மாக திட்­டங்­களை அரங்­கேற்­றி­யி­ருக்­கிறார்.

சந்­தி­ரிகா குமா­ர­துங்­க­வின் இந்த திட்­டங்கள் அர­சாங்­கத்தை மிரள வைத்து விட்­டது என்­பதில் சந்­தே­க­மில்லை.

முத­லா­வது, மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையே உடைத்துக் கொண்டு போய் விட்டார் என்பது.

இரண்­டா­வது, இதே­ பா­ணியில் ஆட்­சியைக் கவிழ்க்­கவும் இர­க­சி­ய­மாகத் திட்­ட­மி­டு­வாரோ என்ற அச்­சத்­தையும், அர­சாங்­கத்­துக்கு கொடுத்திருக்கிறது.

இப்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை எதிர்த்து மைத்திரிபால சிறிசேன போட்டியிடப் போகிறார்.

இதனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யின் வாக்குகள் உடையும் என்றும் கணிக்கப்படுகிறது. அதேவேளை, ராஜபக்ஷ குடும்பத்தின் ஆட்சியை 2022ஆம் ஆண்டு வரை அசைக்க முடியாது என்ற கனவுகளோடு இருந்தவர்களுக்கு இது பேரிடியாகவும் அமைந்திருக்கிறது.

அரசாங்கத்துக்கு உச்சந்தலையில் ஒரு அடியைப் போட்டியிருக்கிறது சந்திரிகா குமாரதுங்கவின் தலைமையிலான எதிரணி.

இதுவரைக்கும் சந்திரிகா தனது திட் டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி யிருக்கிறார்.

இதுமட்டும் போதாது, தேர்தலிலும் வெற்றியும் காண வேண்டும்.

அது சாத்தியமானால் தான் சந்திரிகாவின் திட்டம் முழுமையாக வெற்றிபெறும்.

இல்­லா­விட்டால், பொது­வேட்­பாளர் சிறைக்குச் செல்­லவும் தயா­ராக இருக்க வேண்டும் என்று சரத் பொன்­சேகா குறிப்­பிட்­டது போல, நிகழும் வாய்ப்பும் உள்ளது. அந்தநிலை, மைத்திரிபால சிறிசேனவுக்கு மட்டுமன்றி, சந்திரிகா குமாரதுங்கவுக்கும் கூட ஏற்படலாம்.

சத்­ரியன்-

Exit mobile version