வட இந்தியாவில் ஒடும் பேருந்தில் தம்மிடம் தவறாக நடந்து கொள்ள முற்பட்டதாக தாங்கள் கூறும் ஆண்களை இரு பெண்கள் தாக்கும் வீடியோ காட்சி நாட்டின் முக்கிய செய்தித் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
தம்மிடம் சில இளைஞர்கள் பாலியல் சீண்டல்களை செய்ததாகவும், அதன் பிறகு அவர்கள் தம்மை தாக்கியதாகவும் பாதிப்புக்குள்ளான அந்த இரு சகோதரிகளும் தெரிவித்துள்ளனர்.
தொல்லை கொடுத்தவர்களை திரும்பத் தாக்கிய இந்தப் பெண்களின் தீரத்தை பலர் சமூக வலைதளங்கள் வழியாக பாராட்டியுள்ளனர்.
அதே =நேரம் பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் ஏன் இந்தப் பெண்களுக்கு உதவ முன்வரவில்லை என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
டெல்லியில் சுமார் இரு ஆண்டுகளுக்கு முன்பு மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு பொது இடங்களில் இளம்பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தொடர்பிலான விடயங்களுக்கு இந்தியாவில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
தனது தங்கச்சங்கலியை பறித்த இளைஞரை துரத்தி பிடித்து போலீசில் ஒப்படைத்து ரூ.10,000 பரிசு பெற்ற இளம்பெண்!
01-12-2014
இந்தூர்: இந்தூரில் தைரியமும், துணிவும் மிக்க நிர்மலா பண்டிட் என்ற இளம்பெண், தனது தங்கச்சங்கலியை பறித்துச்சென்ற இளைஞரை துரத்திச் சென்று பிடித்து போலீசிடமும் ஒப்படைத்துள்ளார். கடந்த சனிக்கிழமை ஹரித்துவாரில், அவரது தோழிகள் வகுப்புக்களை முடித்து கொண்டு வீடு திரும்பினர். நிர்மலா இந்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.
அங்குள்ள சோமானி நகரிலுள்ள மார்கெட் பகுதி வழியாக செல்லும் போது இளைஞர் ஒருவன் அவளது தங்கச்சங்கலியை பறித்துச் சென்றான். எனினும் தைரியமிக்க இளம்பெண் திடீரென ஓட்டமெடுத்து, ஒருசில கிலோமீட்டரில் அவனை பிடித்து உதைத்து அவனிடமிருந்து தனது தங்கச்சங்கிலியை திரும்பப் பறித்தார்.
இதையடுத்து அவனை போலீசாரிடம் ஒப்படைத்த நிர்மலா அங்கு அவனை துரத்தி சென்ற போது அங்கு எனக்கு உதவிக்கு யாரும் வராத நிலையில், ஒருவர் மட்டும் அங்கிருந்து கல்லை எடுத்து அவன் மீது வீசினார். அப்போது அவன் நிலைதடுமாறி கீழே விழ அவனை பிடித்ததாக நிர்மலா கூறினார். அந்த தங்கசங்கிலியின் மதிப்பு ரூ.40,000 என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து நிர்மலாவின் துணிச்சலையும், தைரியத்தையும் பாராட்டும் விதமாக அவருக்கு ரூ.10,000 பரிசுத்தொகை வழங்கப்பட்டது.