ஆபாச வீடியோ அடங்கிய காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்த ஆர்.பீ.ரணில் என்ற இளைஞன் தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலவாக்கலை ரயில் நிலையத்தில் வைத்து கையடக்கத் தொலைபேசியில் ஆபாச வீடியோ பார்த்துக் கொண்டிருந்த போதே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நுவரெலியா நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு 50 ஆயிரம் ரூபா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ரணில் என்ற குறித்த இளைஞனின் தந்தையான மைத்திரி குணரத்னவே அவரை பிணையில் விடுவித்து அழைத்துச் சென்றுள்ளார்.
புங்குடுதீவில் இரண்டு வயதுக் குழந்தை கிணற்றிற்குப் பலி
02-12-2014
புங்குடுதீவில் இரண்டு வயதுக் குழந்தை ஒன்று கிணற்றினுள் தவறி வீழ்ந்து மரணமானது. புங்குடு தீவு நான்காம் வட்டாரத்தைச் சோ்ந்த தவீந்திரன் தனுசன் என்ற குழந்தையே இவ்வாறு பரிதாபகரமான முறையில பலியாகியுள்ளது.
வீட்டின் முன் முற்றத்தில் நின்ற வெள்ளத்தில் இறங்கி விளையாடிச் சென்று கிணற்றில் வீழ்ந்துள்ளதாகத் தெரியவருகின்றது, இச் சம்பவம் தொடா்பாக பொலிசாா் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா்.