கள்ளக்காதலால் வீட்டை விட்டு ஓடிய மனைவியை அசிங்கப்படுத்த கணவன் குடும்பத்தார் கையில் எடுத்துள்ள ஆயுதம்தான் இந்த போஸ்டர். கிருஷ்ணகிரி அருகே ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர், கள்ளக் காதலர்களுக்கு சவுக்கடி கொடுப்பதாக உள்ளது.
குறிப்பிட்ட அந்த போஸ்டரில், ஓடிப்போன பெண்ணின் படம், பெயர், அவரின் அப்பா பெயரை போட்டு தெருத்தெருவாக ஒட்டியுள்ளனர்.
திருமணமான 5 வருட காலமாக பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்த அந்த பெண், இப்போது 3 பவுன் நகையுடனும், 40 ஆயிரம் ரொக்கப் பணத்துடனும், சந்தூரை சேர்ந்த ஒரு வாலிபருடன் ஓடிச் சென்றுவிட்டதாக விளக்கம் தருகிறது அந்த போஸ்டர்.
அந்த வாலிபரின் பெயரும் போஸ்டரில் உள்ளது. அதுமட்டுமல்ல, இந்த பெண்மணியை பார்ப்பவர்கள் உடனடியாக அவரது தந்தையின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் என்று அவரது போன் எண்ணையும் போட்டு விட்டுள்ளனர்.
இதனால் தெருவில் போவோர் வருவோர் எல்லாம் அந்த பெண்ணின் தந்தைக்கு போன் செய்ய ஆரம்பித்து அந்த குடும்பம் நிம்மதி இழந்து போக வேண்டும் என்பது மாஸ்டர் பிளான்.