80 கிலோ கிராம் நிறையுடைய செங்கற்களை கொண்ட பெட்டி ஒன்றை தனது பிறப்புறுப்புடன் கட்டப்பட்ட கயிற்றால் தூக்கி சுமார் 10 நிமிடங்கள் அங்குமிங்கும் அந்த பெட்டியை அசைத்து சீன குங்பூ சண்டைக்கலை நிபுணர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
ஹெனான் மாகாணத்தின் ஸெங்கஸொயு நகரைச்சேர்ந்த 48 வயதுடைய ஸவோ ஸென்{ஹவா என்ற மேற்படி குங்பூ நிபுணர், அந்த 80 கிலோ கிராம் நிறையுடைய பெட்டியை 320 தடவைகள் அங்கும் இங்கும் அசைத்துள்ளார். அவர் தனது பயிற்சி நிலையத்திலேயே மேற்படி சாதனையை நிறைவேற்றியுள்ளார்.