தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சி எந்த வேட்பாளரை ஆதரிப்ப தாக அறிக்கை விடுகிறதோ அது அந்த வேட்பாளரை தோற்கடிப்பதற்கான ஆதரவாகவே மாறிவிடும் என்பதை உணர்ந்து இந்தத் தேர்தலில் தமிழ் தலைவர்கள் மிகவும் அவதானமாகவே செயற்பட வேண்டும்.
இவற்றைக் கடைப்பிடிக்காமல் நடந்தால் தமிழ் மக்களின் எதிர்கால அரசியலின் நிலைமை கேள்விக்குறியாகலாம்.
மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதித் தேர்தலை அறிவித்த கையோடு இலங்கையின் அரசியல் சூதாட் டம் பல கோணங்களில் விரிவடைந்து செல்ல ஆரம்பித்துவிட்டது.
திடீர் திடீரென நிலைமைகள் மாற்றமடைந்து வரும் போக்கை அவதானித்துக் கொண்டிருப்ப தைத் தவிர முக்கிய தமிழ் அரசியல்வாதிகள் வேறு எதையும் செய்யாமல் இரு ப்பதே சிறந்த உபாயமாகும். இதையே மன்னார் ஆயரும் வலியுறுத்தி அறிக்கை விட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மிகவும் அவதானமாக பிடிகொடாமல் சொற்களை உதிர்க்கின்றார். தமிழரசுத் தலைவர் மாவை சேனாதிராஜாவும் தென்னிலங்கை முற்போக்குச் சக்திகளோடு இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்தாரே தவிர தேசியக்கட்சிகள் பற்றி தனது உரையில் எதையும் கூறாமல் தவிர்த்துக்கொண்டார்.
ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையின வட-கிழக்குத் தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் பற்றி ஏதாவது தெரிவிப்பதற்கு ஒரு தகுந்த தகுதிவாய்ந்த தலைவராக இருப்பவர் ஒருவரை நியமிக்க வேண்டுமேயொழிய கட்சிப் பிரமுகர்கள் அறிக்கைகளை குறிப்பாக ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக தமிழர்களின் நிலைப்பாடு பற்றிய அறிக்கைகளை விடுவதைத் தவிர்க்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றார்கள்.
2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முக்கிய இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்களுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி னர் பேசியதும் முடிவாக சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாக அறிக்கை விட்டதும் அவரை இன்னும் கூடிய வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிப்பதற்கு உதவியது.
தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய் யும் கட்சி எந்த வேட்பாளரை ஆதரிப்ப தாக அறிக்கை விடுகிறதோ அது அந்த வேட்பாளரை தோற்கடிப்பதற்கான ஆதரவாகவே மாறிவிடும் என்பதை உணர்ந்து இந்தத் தேர்தலில் தமிழ் தலைவர்கள் மிக வும் அவதானமாகவே செயற்பட வேண்டும். இவற்றைக் கடைப்பிடிக்காமல் நடந்தால் தமிழ் மக்களின் எதிர்கால அரசியலின் நிலைமை கேள்விக்குறியாகலாம்.
ஏற்கெனவே, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எதுவித பேச்சுவார்த்தையையும் வைத்துக் கொள்ளாது எனப் பகிரங்கமாகவே அறிவித்துவிட்டது.
எதிரணி வேட்பா ளர் மைத்திரிபால சிறிசேனவும் அண்மை யில் ஒரு கூட்டத்தில் எவருடனும் எந்த இரகசிய பேச்சுவார்த்தைகளும் வைத்துக் கொள்ள மாட்டேன் என உறுதிபடத் தெரி வித்துள்ளார்.
இரண்டு பிரதான வேட்பாளர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு டன் பேசி ஒரு தீர்வை எடுக்க முன்வர அச்சம் கொள்ளும் நிலைமையே காணப்படுகின்றது. அவர்கள் தமிழ்த் தலைவர்களு டன் நடத்தும் பேச்சுவார்த்தை தங்களது சிங்களப் பேரினவாதிகளின் வாக்குகளை குறைத்துவிடும் என்பதில் தெளிவாகவுள்ளனர். .
ஹெல உறுமயக் கட்சி : ஹெல உறுமயக் கட்சிக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்படுவதில்லை. இவ்வளவு காலமும் ராஜபக் ஷவுடன் ஒன்றரைக் கலந்து அரசியல் செய்த ஹெல உறுமய எல்லோரையும் முந்திக்கொண்டு முதன்முதலாக அரசை விட்டு வெளியேறியதும் தற்போது எதிரணி வேட்பாளரை ஆதரிப்பதாக அறிக்கை விட்டதும் சோழியன் குடுமி சும்மா ஆடாது.
என்பதற்கிணங்க பெரிய தாற்பரியமான விடயம் இதன் பின்னால் இருப்பது அவதானிக்கப்பட வேண்டியது.
ராஜபக் ஷ ஆட்சி வீழ்ச்சி காணலாம் என்ற நோக்கில் தான் ஹெல உறுமயக் கட்சி யின் இந்த காய் நகர்த்தல் நாடகம் ஆரம்பமாகியுள்ளது. எதிரணியின் கூட்டணியில் ஊடுருவ வேண்டிய தேவைப்பாடு அக்கட்சிக்கு ஏற்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்தி ரக் கட்சி ராஜபக் ஷ அணி ஆட்சியிலிருந்து விலகி பண்டாரநாயக்க பரம்பரைச் செல்வாக்குடன் ஆட்சியை அமைக்க முன் வந் துள்ள மைத்திரிபால சிறிசேன பண்டாரநாயக்கவினதும் சந்திரிகாவினதும் கொள்கைகளைப் பின்பற்றுவதைத் தடுக்கவேண்டுமென்பதற்காக இந்தக் காய் நகர்தலை ஆரம்பித்துள்ளார்கள்.
அதிகாரப் பகிர்வு
1958இல் எஸ். டபிள்யூ. ஆர்.டீ.பண்டாரநாயக்க பிராந்திய சபைகளை அமைக்க முயன்று ஐக்கிய தேசியக் கட்சியினதும் பௌத்த அமைப்புக்களினதும் எதிர்ப்பால் அதைக் கைவிட்டார்.
சந்திரிக்கா 1995இல் பிராந்தியங்களின் இணைப்பு என்ற யோசனையை முன்வைத்ததும் அது அப்போதைய எதிர்க் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் அந்த யோசனையின் மகத் துவம் குறைக்கப்பட்டு பின்னர் பாராளுமன்றத்தில் வைத்து ரணிலினால் கிழித்தெறியப்பட்டதும் வரலாற்று உண்மைகள்.
பின்னர் 2002இல் சந்திரிகா ஜனாதிபதியாகவும் ரணில் பிரதமராகவும் இருந்த சமய த்தில் விடுதலைப் புலிகளுடன் அமைதி உடன்படிக்கை செய்ததும் சொல் ஹெய் மின் உதவியுடன் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதும் (ஒஸ்லோ) நோர்வே ஜப்பான் நாடுகளில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது “ உள்ளக சுயநிர்ணய உரிமை கொண்ட அதிகாரப் பகிர்வு க்கு” பச்சைக் கொடி காட்டியதும் ஹெல உறுமய மறந்திருக்கவில்லை.
1958இல் பண்டாரநாயக்கவின் இனப்பிரச்சினை தீர்வு முன்னெடுப்பும் 1995 ஆம் ஆண்டு சந்திரிகாவின் இனப்பிரச் சினை தீர்வு முன்னெடுப்பும் 2002ஆம் ஆண்டு ரணிலின் இனப்பிரச்சினை தீர்வு முன்னெடுப்பும் இந்த எதிரணி ஆட்சி (சந்திரிகா – ரணில்) அமையும்போது முக்கியத்துவம் பெற்று அந்தச் சாயலான தீர்வுக்கு வித்திட்டுவிடுமோ என்ற ஒரு பெளத்த சிங்கள மேலாதிக்கத்திற்கு ஏற் படக்கூடிய பயம் ஹெல உறுமயக் கட்சி க்கு ஏற்பட்டுவிட்டது என்பதாலேயே எதிர ணிக்குள் ஊடுருவி அவ்வாறு எதுவும் நடக் கவிடக் கூடாதென காய் நகர்த்தல்களை கச்சிதமாக செய்துவருகின்றார்கள் என்ற கருத்தை எவரும் தட்டிக்கழிக்கமுடியாது.
– சட்டத்தரணி கனக நமநாதன்