சென்னை: நடிகை த்ரிஷா அஜீத்துடன் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்துவருகிறார். இவர் நடித்துள்ள ‘பூலோகம்‘ படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்நிலையில் த்ரிஷாவுக்கும் திரைப்படத் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக செய்தி வெளியானது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இவர்கள் திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இதை த்ரிஷா மறுத்தார். வருண் மணியன் எதுவும் சொல்லவில்லை. இந்நிலையில் வருண் மணியன் மற்றும் சில தோழிகளுடன் நடிகை த்ரிஷா, தனி விமானத்தில் டெல்லி சென்றார். அங்கிருந்து தாஜ்மகாலுக்கு சென்று சுற்றிப் பார்த்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை த்ரிஷா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
இதையும் பார்த்துவிட்டு போங்க…
Tevar- Making of Radha Nachegi song