ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Monday, December 11
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»செய்திகள்»தேனிலவுக் கொலை – கணவர் விடுதலை (வீடியோ)
    செய்திகள்

    தேனிலவுக் கொலை – கணவர் விடுதலை (வீடியோ)

    AdminBy AdminDecember 8, 2014No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    பிரிட்டனைச் சேர்ந்த ஷிரீன் திவானி எனும் தொழிலதிபரை கொலைக் குற்றச்சாட்டிலிருந்து தென் ஆப்பிரிக்க நீதிமன்றம் விடுவித்துள்ளது. ஷிரீன் திவானி தனது மனைவி ஆன்னியை, அவர்கள் தென் ஆப்ரிக்காவுக்கு தேன்நிலவு சென்றிருந்தபோது, கேப்டவுன் நகரில் ஆட்களை வேலைக்கு அமர்த்தி கொலை செய்தார் என்று சுமத்தப்பட்ட குற்றஞ்சாட்டப்பட்டருந்தது.

    dewani_anni_3130864dமணக்கோலத்தில் ஷிரீன் மற்றும் அனி திவானி

    அவர் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்து தண்டனை பெற்றுத்தரும் வகையில் அரச வழக்கறிஞர்கள் போதிய ஆதாரங்களை முன்வைக்கவில்லை என்று கூறி நீதிபதி ஜேனட் ட்ரெவெர்ஸொ திவானியை விடுதலை செய்துவிட்டார்.

    அரச தரப்பின் வாதங்கள் தண்டனை வழங்கத் தேவையான அளவைவிட மிகவும் கீழான நிலையிலேயே இருந்தன என்றும் நீதிபதி கூறினார். முக்கியமாக இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு இப்போது சிறை தண்டனை அனுபவித்துவரும் வாகன ஓட்டி மற்றும் அவரது கூட்டாளிகளின் சாட்சியங்களையே அரச தரப்பு முக்கியச் சாட்சியாக முன்வைத்தது. ஆனால் அதை நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார்.

    தண்டச்செலவு

    இந்த வழக்கில் நீதிபதி வழங்கிய தீர்ப்பு குறித்து கொல்லப்பட்ட ஆன்னி திவானியின் குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளனர். முழு விபரங்களும் இன்னமும் வெளிவரவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

    தான் ஆண், பெண் என இருபாலர்களிடமும் உறவு கொண்டதாக ஷிரின் திவானி ஒத்துக் கொண்டதை குறிக்கும் விதமாக அவர் இரட்டை வாழ்வு வாழ்ந்ததாக சுட்டிக் காட்டினர். அதே நேரம் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் ஷெரின் திவானியை தென் ஆப்பிரிக்காவுக்கு கொண்டு வந்த முடிவை அரசு தரப்பு நியாயப்படுத்தியுள்ளது.

    நீதிபதியின் தீர்ப்பு தமக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை என்றாலும் இந்தக் கொலை தொடர்பாக மூன்று பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர் எனவே இந்த வழக்கு விசாரணையை தண்டச் செலவு என்று சொல்லிவிட முடியாது என்று தேசிய குற்ற நடவடிக்கை ஆணையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

    ஷிரீன் மற்றும் அனி திவானி கொலை  எப்படி? ஏன் நடந்தது? (முன்கதை)

    லண்டனில் பெரும் பணக்காரர் வரிசையில் இடம்பிடித்த இந்தியர் திவானி ஆவார். முதியோர் இல்லாங்களை ஆரம்பித்து, அதனூடாக பெரும் பணத்தை சம்பாதித்த திவானி பின்னர் அதனை நடாத்தும் பொறுப்பை தனது மகன் ஷிவான் திவானியிடம் கொடுத்தார்.

    இதனிடையே அனி என்னும் பெண்ணை ஷிவான் திவானி மணந்தார். இவர்கள் இருவரும் தென்னாபிரிக்காவுக்கு தேன் நிலவுக்காகச் சென்றுள்ளார்கள். அங்கே திடீரென நடந்த ஒரு கொள்ளைச் சம்பவத்தில் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்டார்.

    இச்சோக சம்பவத்தை அடுத்து அவர் மீண்டும் லண்டன்  திரும்பிவிட்டார். ஆனால் சில விடையங்கள் அப்படியே மறைந்துபோவது இல்லை. அனி என்னும் அப்பெண்ணைச் சுட்ட நபர்களை தென்னாபிரிக்க பொலிசார் கைதுசெய்துவிட்டார்கள்.

    கொலையாளி கொடுத்த தகவலுக்கு அமைய, கொலை நடந்த சமயம் பாவிக்கப்பட்ட டாக்ஸ்சி ஓட்டுனரையும் பொலிசார் கைதுசெய்து விசாரித்தார்கள். அவர்கள் கூறிய விடையம் பெரும் அதிர்சியை தான் தந்தது. தென்னாபிரிக்காவுக்கு தேன் நிலவுக்கு சென்ற ஷிவான் திவானி ஒரு நபரைச் சந்தித்து 1,500 பவுன்களை கொடுத்து தனது மானைவியைச் சுடச் சொல்லியுள்ளார். இக்கொலை நடைபெற ஒரு வாடகை டாக்ஸியையும் அவர்கள் எடுத்துள்ளார்கள்.

    இருவரும் செல்லும் வேளை ஒரு வழிப்பறிக்கொள்ளை நடப்பது போலவும் அதில் குறித்த நபர், தனது மனைவியை காரில் வைத்தே சுட்டுக்கொல்லவேண்டும் என்பது இவர்கள் போட்ட பிளான். இவை அனைத்தையும் சுட்டவரும் மற்றும் டாக்ஸி ஓட்டுனரும் ஒத்துக்கொண்டுள்ளார்கள்.

    இதனை அடுத்து ஆபிரிக்க பொலிசார் லண்டன் பொலிசாரை தொடர்புகொண்டு, திவானியை ஆபிரிக்காவுக்கு நாடு கடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். கடந்த 3 ஆண்டுகளாக தனது பணபலத்தை பாவித்தும், தனக்கு மன நிலை சரியில்லை என்று கூறியும் திவானி லண்டனில் தங்கிவிட்டார்.

    6649fc70c464f8733df51230a37b9fdd

    இறுதியாக உள்துறை அமைச்சர் தலையிடும் அளவுக்கு பிரச்சனை பூதாகரமாகிவிட்டது. இதனால் உள்துறை அமைச்சர் அவரை நாடு கடத்த உத்தரவிட்டார். அதனைக் கூட எதிர்த்து உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தார் திவானி. ஆனால் இறுதியாக 2014ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 7ம் திகதி லண்டனில் இருந்து அவர் தென்னாபிரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

    பின்னர் தற்போது அக்டோபர் மாதம் 6ம் திகதி இந்த வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் திவானி தொடர்ந்தும் தான் குற்றமற்றவர் என்று கூறிவருகிறார். அட இவ்வளவு அழகான மனைவியை ஒருவர் கொலைசெய்வாரா என்று மக்கள் கேள்வி கேட்க்கும் அளவு நிலைமை உள்ளது.

    ஆனால் திவானிக்கு ஆண்கள் சகவாசம் அதிகம் என்ற உண்மை இதனூடாக தெரியவந்துள்ளது. பல ஆண்களோடு இவர் உடலுறவில் ஈடுபட்டும் உள்ளார். இவர் பிரித்தானிய பாராளுமன்றில் வேலைபார்க்கும் மற்றும் அரச மட்ட உயர் அதிகாரிகள் பலரை தன் கைக்குள் வைத்திருக்கும் ஒரு நபரிடமும் உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.

    இத்தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள பல முதியோர் இல்லங்களுக்கு அரசாங்கமே பெரும் பணத்தை கொடுத்து வருகிறது. இன் நிலையில் இவர் அரசாங்கத்தில் எந்த அளவு செல்வாக்கோடு இருந்தார் என்பது தொடர்பான சர்சையும் கூடவே கிளம்பியுள்ளது.

    Post Views: 67

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்

    December 10, 2023

    உக்ரேன் இராணுவத்தில் கடமையாற்றிய இலங்கையர்கள் மூவர் உயிரிழப்பு

    December 7, 2023

    தென்கொரியாவில் இலங்கையர் இலங்கையரால் குத்திக் கொலை!

    December 6, 2023

    Leave A Reply Cancel Reply

    December 2014
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031  
    « Nov   Jan »
    Advertisement
    Latest News

    தமிழீழ புலிகளின் சின்னத்தை ஒட்டிய சாரதி கைது

    December 10, 2023

    கிண்ணியா அருனலு குளத்தில் 8 வயது பெண் யானையின் சடலம் மீட்பு

    December 10, 2023

    யாழில் வீடு புகுந்து பெண்ணை அச்சுறுத்தி ATM அட்டையை பறித்துச் சென்ற இளைஞன் கைது

    December 10, 2023

    மீன் பிடிக்கச் சென்ற 2 மீனவர்கள் கல்மடு கடலில் இயந்திரப் படகுடன் மாயம்!

    December 10, 2023

    இஸ்ரேல் ராணுவம் பாலத்தீனர்களை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்ததா?

    December 10, 2023
    • இஸ்ரேல் ராணுவம் பாலத்தீனர்களை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்ததா?
    • நித்தியால் பதவியை பறிகொடுத்த பரகுவே நாட்டு அமைச்சர்
    • வீடியோவில் தோன்றியது துவாரகா தானா? முக அசைவு, மொழிநடையில் நிபுணர்கள் சந்தேகம்
    • சரக்குக் கப்பலைக் கடத்தி மேற்கு நாடுகளை மிரட்டும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள்
    • இயேசுவின் போதனைகள், சனாதன யூதர்களின் ஆயிரமாண்டுகால நம்பிக்கைகளின் வேர்களை அசைத்துப் பார்ப்பதாக இருந்தது. ஆகவே அவர்களால் இயேசுவை ஏற்க இயலவில்லை; கொல்ல முடிவு செய்தார்கள் – நிலமெல்லாம் ரத்தம் 4

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • தமிழீழ புலிகளின் சின்னத்தை ஒட்டிய சாரதி கைது
    • கிண்ணியா அருனலு குளத்தில் 8 வயது பெண் யானையின் சடலம் மீட்பு
    • யாழில் வீடு புகுந்து பெண்ணை அச்சுறுத்தி ATM அட்டையை பறித்துச் சென்ற இளைஞன் கைது
    • மீன் பிடிக்கச் சென்ற 2 மீனவர்கள் கல்மடு கடலில் இயந்திரப் படகுடன் மாயம்!
    Recent Comments
      Quick Links
      • முகப்பு
      • இந்தியா
      • உலகம்
      • வெளிநாட்டு
      • சினிமா
      • விளையாட்டு
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • வினோதம்
      • அரசியல்
      Quick Links
      • கட்டுரைகள்
      • தொடர் கட்டுரைகள்
      • கவிதைகள்
      • கலைகள்
      • வீடியோ
      • புகைப்பட தொகுப்பு
      • தொழில்நுட்பம்
      • வேலைவாய்ப்பு
      • கல்வி
      Quick Links
      • ஆரோக்கியம்
      • அந்தரங்கம்
      • ஆன்மீகம்
      • சுற்றுலா
      • சிறப்பு செய்திகள்
      • வினோதம்
      BRAKING NEWS
      • இஸ்ரேல் ராணுவம் பாலத்தீனர்களை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்ததா?
      • நித்தியால் பதவியை பறிகொடுத்த பரகுவே நாட்டு அமைச்சர்
      • வீடியோவில் தோன்றியது துவாரகா தானா? முக அசைவு, மொழிநடையில் நிபுணர்கள் சந்தேகம்
      • சரக்குக் கப்பலைக் கடத்தி மேற்கு நாடுகளை மிரட்டும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள்
      • இயேசுவின் போதனைகள், சனாதன யூதர்களின் ஆயிரமாண்டுகால நம்பிக்கைகளின் வேர்களை அசைத்துப் பார்ப்பதாக இருந்தது. ஆகவே அவர்களால் இயேசுவை ஏற்க இயலவில்லை; கொல்ல முடிவு செய்தார்கள் – நிலமெல்லாம் ரத்தம் 4
      2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

      swissreplicas.to

      bestwatchreplica.co
      replica watches

      swiss replica website

      fake rolex for sale
      relogios replicas
      Go to mobile version