குழந்தை பிறந்து 13 நாள் ஆன நிலையில், கடும் மது போதையில் வீட்டுக்கு வெளியே வந்து, மழை பெய்து கொண்டிருந்த போது நடுவீதியில் குழந்தையையும் வைத்துக் கொண்டு நின்ற குடும்பப் பெண்ணால் மட்டுவில் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குறித்த பெண் மட்டுவில் வடக்குப் பகுதியில் வசித்துவருகின்றாா். குழந்தைப் பேற்றின் பின் குறித்த பெண்ணுக்கு வயிற்றுப் புண் ஆறுவதற்காக மது வாங்கிக் கொடுத்துள்ளார் கணவா்.
தனது தாய் வீட்டில் இருந்த பெண் குறித்த மதுவை அளவுக்கு அதிகமாக அருத்தியதால் போதை தலைக்கேறிய நிலையில் தாயார் வீட்டில் இல்லாத சமயம் குழந்தையையும் துாக்கிக் கொண்டு வீட்டிற்கு வெளியே வந்து நீண்ட தூரம் நடந்து வந்து பிரதான வீதியின் நடுவே கடும் மழைக்கு மத்தியில் நின்று தடுமாறிக் கொண்டு இருந்ததாகவும் போவோர் வருவோரை ஏசிக் கொண்டு நின்றதாகவும் தெரியவருகின்றது.
குறித்த பெண்ணுக்கு அறிமுகமானவா்கள் பெண்ணின் நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவா்கள் வீட்டில் சொன்ன போது பெண்ணின் தாயார், தந்தை ஆகியோர் பெண்ணையும் குழந்தையையும் ஆட்டோவில் ஏற்றி வீட்டுக்குச் சென்றுள்ளனா்.
பின்னா் குழந்தை மழைக்குள் நனைந்ததாலும் மது போதையில் தாயார் இருந்ததாலும் இருவரையும் குடும்பத்தவா்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனா்.
குறித்த பெண்ணின் குடும்பம் மற்றும் கணவா் ஆகியோர் கௌரவமான நடத்தையுடையவா்கள் என அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் தெரிவித்துள்ளனா்.
பெண் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாலேயே தன்னை மறந்த நிலையில் இருந்ததாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.
15 வயதுச் சிறுமியைக் கற்பழித்த சித்தப்பா கைது!
மாங்குளம் பகுதியில் 15 வயதுச் சிறுமியைக் கற்பழித்த சிறுமியின் சிறிய தந்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டாா். குறித்த சிறுமி சிறிய தந்தையின் வீட்டில் தங்கியிருந்த போதே சித்தப்பா இவ்வாறு தொடா்ச்சியாகக் கற்பழித்தாகத் தெரியவருகின்றது.
இது தொடா்பாக சிறுமியின் தாய் மாங்குளம் பொலிசாருக்கு முறைப்பாடு செய்ததையடுத்து சிறியதந்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றில் ஆயா் செய்யப்பட்டாா்.
இவ் வழக்கை விசாரித்த முல்லைத்தீவு மாவட்ட நீதவான் மா.கணேசராஜா குறித்த நபரை எதிா்வரும் 18ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டாா்.
கிணற்றடியில் வழுக்கி வீழ்ந்து விளையாட்டு உத்தியோகத்தா் மரணம்
10-12-2014
யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகஸ்தர் சுரேந்திரன் சதீஸ்கண்ணா (வயது 33), இன்று புதன்கிழமை (10) கிணற்றடியில் வழுக்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
கிணற்றடியில் குளித்துக்கொண்டிருந்த இவர் வழுக்கி வீழ்ந்து, மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இவர் யாழ்.அளவெட்டி, மாசியப்பிட்டியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இவரது சடலம் தற்போது தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.