5 மில்லியன் பவுண்கள் பெறுமதியான வரி செலுத்தப்படாத சுருட்டிப் புகைப்பத்தற்கான புகையிலையை வீட்டில் வைத்திருந்தமை மற்றும் பொதுமக்களின் வரிப்பணத்தை மோசடி செய்தமை ஆகிய குற்றங்களுக்காக வி ராம்ராஜ் உட்பட 7 பேருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. வி ராம்ராஜ் ரிபிசி வானொலியின் பணிப்பாளர் மற்றும் ஈஎன்டிஎல்எப் அமைப்பின் லண்டன் பிரதிநிதி என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் இயங்கும் கம்பியா நாட்டு து}தரகத்தின் முக்கியஸ்தர்களால் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த சட்டவிரோத நடவடிக்கையில் கடந்த ஆண்டு அங்கு சாரதியாக பணியில் இணைந்த வி ராம்ராஜ் உம் இணைந்த கொண்டுள்ளார்.
துாதரகங்களில் பணியாற்றுவோரின் தேவைகளுக்காக வழங்கப்பட்ட வரி விலக்குச் சலுகையைப் பயன்படுத்தி கம்பிய நாட்டு து}தரகப் பிரதிநிதிகள் 32 மெற்றிக்ரொன் சுருட்டிப் புகைப்பதற்கான புகையிலையை மூன்று ஆண்டுகளில் தருவித்துள்ளனர்.
தங்கள் மீதான குற்றங்களை மறுத்த கம்பிய நாட்டு து}தரகப் பிரதிநிதிகள் தாம் பிரித்தானியாவில் வாழும் கம்பிய நாட்டு மக்களின் தேவையைப் பூர்த்திசெய்வதற்காகவே இதனைச் செய்ததாகத் தெரிவித்திருந்தனர்.
சதேக் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் கம்பிய து}தரக பிரதிநிதிகள் நாட்டின் ஜனாதிபதிக்கும் மக்களுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்து இருந்தார்.
Old Holborn & Gloden Virginia ஆகிய சுருட்டும் புகையிலையின் 50கிராம் பக்கற்களைப் கொள்வனவு செய்வதற்காக லண்டனில் உள்ள கம்பிய து}தரகத்தில் வரிசையில் ஆட்கள் காத்திருப்பதாகவும் அங்கு தெரிவிக்கப்பட்டது.
இன்று டிசம்பர் 10 இல் குற்றவாளிகளுக்கு தண்டனைக் காலம் அறிவிக்கப்பட்டது. டீசம்பர் 08 இல் வி ராம்ராஜ் உட்பட அனைவரும் குற்றவாளிகளாகக் காணப்பட்டனர்.
கம்பிய துாதரக முக்கியஸ்தர்கள் நால்வருக்கு முறையே ஏழு, ஆறு, ஆறு, ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. வி ராம்ராஜ்க்கும் ஏனைய து}தரக பணியாளர்கள் இருவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டணை வழங்கப்பட்டது.