அதுருகிரிய பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற விமான விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் தலைமை விமானி வசந்த அபேவர்த்தனவும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வசந்த அபேவர்தன கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி நியோமி என்ற பெண்ணுடன் திருமண வழ்வில் இணைந்தார். நிறைய எதிர்ப்பார்ப்புகளுடன் திருமண பந்தத்தில் இணைந்த இவர்களது வாழ்கையில் இன்று துரதிஷ்டமான சம்பவம் இடம்பெற்றமையானது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இன்று அதிகாலை அதுருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் வசந்த அபேவர்தன உயிரிழந்தமையே அந்த அதிர்ச்சியான சம்பவமாகும்.
வசந்த அபேவர்தன குருநாகல் பகுதியை சேர்ந்தவரும்,கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவருமாவார்.
அதிக பனி மூட்மே இந்த விமான விபத்திற்கு காரணம் என விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.