எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மீது நம்பிக்கை வைக்க முடியாது. இரவு 12 மணிவரை என்னுடன் இருந்து அப்பம் உண்டவர் என்னிடம் கூறாமலேயே மறுநாள் காலையில் சென்றார். இவரை நம்பி எவ்வாறு நாட்டை பொறுப்புக்கொடுப்பது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷகேள்வியெழுப்பினார்.
யுத்தத்தை முடித்து நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தியமைக்காகவும் இடம்பெயர்ந்த மக்களுக்கு காணிகளை வழங்கியமைக்காகவும் யாழ்தேவியை கொண்டுவந்தமைக்காகவும் என்னை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனது சகோதரர்களை சிறிமா அம்மையாரே அரசியலுக்கு கொண்டு வந்தார். நான் கோத்தபாய ராஜபக் ஷவை மட்டுமே கொண்டு வந்தேன். யுத்தம் செய்ததால் அவரை கொண்டு வந்தேன். எனக்கு யுத்தத்துக்கு நம்பிக்கையான ஒருவர் தேவைப்பட்டார். அவர் முன்னாள்
இராணுவ அதிகாரி. எனவே பயப்படாமல் கொண்டுவந்தேன். பாதுகாப்பு தொடர்பில் புரிந்துணர்வு இருந்தமையினால் நான் அவரைக் கொண்டு வந்தேன் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
உங்களை நாங்கள் நம்பியுள்ளோம். நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கையை நாங்கள் சிதறடிக்கவில்லை. எதிர்காலத்தில் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை அவ்வாறே பாதுகாப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாவலப்பிட்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றுகையில்
கடந்த 2005 ஆம் ஆண்டும் நாவலப்பிட்டிக்கு வந்து நான் உரையாற்றினேன். 2010 ஆம் ஆண்டு இங்கு வந்தேன். ஆனால் 2005 ஆம் ஆண்டு இருந்த நாவலப்பிட்டி இன்று இல்லை. இன்று புதிய நகரம் உருவாகியுள்ளது.
இதற்கான கௌரவம் எனக்கு வரக்கூடாது. மாறாக இதற்கான கௌரவரம் அ மைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு வரவேண்டும். நான் அவருக்கு பணம் மட்டுமே கொடுத்தேன்.
அமைச்சர்களுககு சுதந்திரம்
நாங்கள் எமது அரசாங்கத்தில் அமைச்சர்கள் சுதந்திரமாக வேலை செய்யும் நிலைமையை உருவாக்கியுள்ளோம். நிதியை வழங்குவோம்.
வழங்கி இதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு கூறுவோம். அவர்களுக்கு உதவவே அமைச்சரவை உள்ளது. ஏதாவது ஒரு விடயத்தை செய்ய முடியாதுவிடின் அது தொடர்பில் விளக்கமளிப்போம்.
ஆனால் இங்கு ஆச்சரியம் என்னவெனில் நாட்டின் சுகாதாரம் வீழ்ச்சிகண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கூறுகின்றார்.
உதாரணமாக நாட்டின் விளையாட்டுத்துறை வீழ்ச்சிகண்டிருந்தால் மஹிந்தானந்த அளுத்கமகே பொறுப்புக்கூறவேண்டும்.
அதேபோன்று தற்போது சுகாதாரத்துறை வீழ்ச்சிகண்டுவிட்டதாம். உண்மையில் அவர் கேட்ட எல்லாவற்றையும் வழ்ஙகினோம். ஒவ்வொரு வருடமும் நிதி ஒதுக்கீட்டை பில்லியன் கணக்காக அதிகரித்தோம்.
சுகாதார அமைச்சுக்கு அதிக நிதி
சுகாதார அமைச்சுக்கு முதற் தடவையாக நூற்றுக்காண பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. சில காலங்களில் பணம் மீண்டும் வந்துவிடும். அதற்கு நாங்கள் என்ன செய்ய? ஆட முடியாதவன் பூமி கோணல் என்று கூறுகின்றார் என்று ஒரு கதையுள்ளது. அதுபோன்ற கதையையே இவர் கூறுகின்றார்.
2005 யுத்தத்தை முடிக்க ஆணை
இன்று பலர் பல விடயங்களை மறந்துவிடுகின்றனர். நான் சில விடஙகளை இங்குகூறுகின்றேன். ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். 2005 ஆம் ஆண்டில் நான் வந்தபோது என்னிடம் ஒரு விடயத்தைக் கேட்டனர்.
இந்த நாட்டின் கடல் வளத்தில் மூன்றில் இரண்டு பகுதி எம்மிடம் இருக்கவில்லை. நாடு இரண்டாக பிரிந்திருந்தது.
பயங்கரவாதிகள் கொலைகளை செய்தனர். இந்த நிலையிலிருந்து விதலை பெற்றுத்தருமாறே கோரினர். அதுதான் அன்றைய ஒரே கோரிக்கையாக இருந்தது. என்னிடம் அன்று யாரும் தொழில் கேட்கவில்லை. அபிவிருத்தி கேட்கவில்லை.
பல வருடங்களாக முடியாமல் இருந்த அந்த விடயத்தை மற்றும் ஜனாதிபதிமார்கள் பிரதமர்களினால் முடியாமல் இருந்ததை நாங்கள் நிறைவேற்றினோம்.
நாம் மக்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்தோம். அதாவது வாழும் சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்தோம். அதுதான் உண்மைக்கதையாகும். அத்துடன் நிற்கவில்லை. மீண்டும் மக்கள் முன் வந்து நாட்டை அபிவிருத்தி செய்யக் கேட்டோம்.
2010 இல் அபிவிருத்தி
இன்று இஙகு முஸ்லிம் மத தலைவர்கள் உள்ளனர். அன்று காத்தாண்குடியில் 168 பேரை கொன்றனர். கிராமங்களை அழித்தனர். இந்து பக்தர்களுக்கு பிரச்சினை இருந்தது.
2010 ஆம் ஆண்டு நாட்டை அபிவிருத்தி செய்ய எமக்கு கொடுத்தனர். நாங்கள் நாட்டை அபிவிருததி செய்தோம். இன்று உங்கள் கிராமங்களில் வீதிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து இலகுவாகியுள்ளது. முழுச் சமூகமும் நவீனமாகியுள்ளது. மருத்துவமனைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
உட்கட்டமைப்பு வசதி மேம்பட்டுள்ளது. 98 வீதமான வீடுகளுக்கு மின்சாரம் 24 மணிநேரமும் வழங்கப்படுகின்றது. 100 வீதம் 204 மணிநேரமும் மின்சாரத்தை வழங்கும் பிராந்தியத்தின் ஒரே நாடு இலங்கையாகும்.
பாரிய அபிவிருத்தி
கொத்மலை திட்டத்தையும் நுரைச்சோலை திட்டத்தையும் செய்யாமல் இருந்தனர். ஆனால் வாக்குகளை எதிர்பார்த்து செயற்பட்டால் ஒருநாளும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது.
சமூகத்தில் யாருக்கும் அநீதி ஏற்படுத்த முடியாது. கொழும்புக்கு செல்வதற்கு 4 மணிநேரமே எடுககின்றது. இன்னும் சில காலத்தில் ஒன்றேகால் மணிநேரத்தில் கொழும்புக்கு செல்ல முடியும்.
பொலிஸாருக்கு தண்டப்பணத்தை செலுத்திவிட்டு ஒரு மணிநேரத்திலும் வரலாம். தண்டப்பணத்தையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளேன். இதுதான் உண்மை நிலை.
மாற்றத்தை பாருங்கள்
நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பாருங்கள். எந்தநாளும் ஒரேஇடத்தில் இருக்க முடியாது. முன்செல்லும் பலமான சமூகம் எனக்குத் தெரியும். அதுதான் எமக்குத் தேவை. நாம் கூறியதை செய்துள்ளோம்.
நாம் என்ன செய்யவில்லை என்று தெரியவில்லை. நாட்டில் 60 வீதமானோருக்கு குழாய் நீர் வழங்கியுள்ளோம். இதனை 100 வீதம் வழங்குவோம்.அதனை நாங்கள் செய்வோம். அந்த வசதியை வழங்கவேண்டும்.
பாதுகாப்பான எதிர்காலம்
பிள்ளைகளுக்கு சிநந்த கல்வியை வழங்கவேண்டும். சுற்றுலாப் பயணிகள் அதிகரித்துள்ளனர். அன்று நான்கு இலட்சம் பேர் வந்தனர்.
இன்று 20 இலட்சம் பேர் வருகின்றனர். சுற்றுலாத்துறை வளர்கின்றது. இளைஞர்களுக்கு 150000 தொழில்வாய்ப்புக்களை வழங்க வரவு செலவுத்திட்டத்தை முன்வைத்துள்ளோம். கொழும்பில் புது நகரம் உருவாகின்றது.
எனினும் எமது சமூகத்தில் ஒழுக்கம் இல்லாவி்டின் எதனை செய்தாலும் அர்த்தம் இல்லை. பெற்றோரை பெரியோரை மதிக்கும் சமூகம் தேவை. அந்த இடத்துக்கு சமூகம் வரவேண்டும்.
சிலர் பெற்றோரை மறந்துவிட்டனர். உங்கள் பிள்ளைக்கு சிறந்தவளமான பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கவேண்டும். உங்கள் பிள்ளை இந்த நாட்டை அல்ல உலகத்தை வெல்லவேண்டும். அதற்கான திட்டமும் பலமும் எம்மிடம் உள்ளது.
அது என்னுடைய தவறு அல்ல
இன்று போட்டியிட யார் வற்துள்ளனர். இவர்கள் எந்தக் கொள்கையுடனும் வரவில்லை. அநீதி ஏற்பட்டதால் வந்தார்களாம். எனக்கு அதனை கொடுக்கவில்லை.இதனை கொடுக்கவில்லை என்று கூறுகின்றனர். தனக்கு அதிக அமைச்சுக்கள் இருந்ததாம் பின்னர் ஒன்று கிடைத்ததாம் என்று கூறுகின்றனர்.
இலங்கையில் சுகாதார அமைச்சு என்பதே பெரிய அமைச்சு. கிராமத்தில் இருந்தபோது சுகாதார அமைச்சைப் பொறுப்பேற்று முழு நாட்டுக்கும் வேலை செய்யுமாறு நான் கூறினேன். அதனை செய்ய முடியாமல் போனதற்கு நான் என்ன செய்யமுடியும்? அது என்னுடைய தவறு அல்ல?
சேறுபூசுகின்றனர்
தற்போது சேறுபூச ஆரம்பித்துள்னர். எனக்கு எனது பிள்ளைகளுக்கு சேறுபூசுகின்றனர். நான்கு சகோதரர்கள் குறித்து கூறுகின்றனர். நான் எந்த சகோததரைரையும் அரசியலுக்கு கொண்டுவரவில்லை.
என்னையும் சகோதரர்களையும் பண்டாநாயக்க அம்மையாரே கொண்டு வந்தார். என்னை வருமாறு அம்மையார் அழைத்தார். சமல் ராஜபக்ஷவையும் அவர் அழைத்தார். அவர் முடியாது என்றார். அதனால் என்னை அழைத்தார்.
பஷிலுக்கு 97 வாக்குகள்
பஷில் ராஜபக்ஷ கட்சியின் உப செயலாளர். எனக்கு 27 வாக்குகள் கிடைத்தன. பஷிலுக்கு 97 வாக்குகள் கிடைத்தன. அவ்வாறுதான் பஷில் வந்தார். 1977 ஆம் ஆண்டில் பஷில் வந்தார். நான் அழைக்கவில்லை. பண்டாரநாயக்க அம்மையாரே வழங்கினார்.
எனக்கும் அதற்கும் தொடர்பு இல்லை. பஷிலை நேரடியாக அழைத்து போட்டியிடுமாறு அம்மையார் கூறினார். அதனால்தான் இன்றும் அம்மையாரை நாங்கள் மதிக்கின்றோம். வரலாற்றை நாங்கள் மறக்கமாட்டோம். பண்டாரநாயக்க டி. ஏ. ராஜபக்ஷ ஆகியோர் அன்று எதிர்க்கட்சிக்கு சென்றனர். இன்று வரலாற்றை மறந்துவிட்டனர்.
கோத்தபாயவை மட்டுமே கொண்டுவந்தேன்
நான் கோத்தபாய ராஜபக்ஷவை மட்டுமே கொண்டு வந்தேன். யுத்தம் செய்ததால் கொண்டு வந்தேன். எனக்கு யுத்தத்துக்கு நம்பிக்கையான ஒருவர் தேவைப்பட்டார்.
அவர் முன்னாள் இராணுவ அதிகாரி. எனவே பயப்படாமல் கொண்டுவந்தேன். பாதுகாப்பு தொடர்பில் புரிந்துணர்வு இருந்தமையினால் நான் அவரைக் கொண்டு வந்தேன். அந்த பொறுப்பை அவரிடம் கொடுத்தேன். அவரின் வேலைகள் உங்களுக்கு தெரியும். கொழும்பு நகரை யார் அழகுபடுத்தியது என்று உங்களுக்குத் தெரியும்.
மைத்திரியின் சகோதரர்கள்
ஆனால் ஒரு குற்றச்சாட்டை ரணில் விக்ரமசிங்க மற்றும் அனுர குமாரதிசாநாயக்க போன்றோர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தமை எனக்குத் தெரியும்.
அவரின் சகோதரர்கள் குறித்து கூறினர். அந்தக் குற்றச்சாட்டை அவர்களே முன்வைத்தனர். ஒரு சகோதரர் நாட்டின் நெல் மற்றும் அரிசி விலையை கட்டுப்படுத்தினார். ட்டலி சிறிசேன என்பவர் இதனை செய்தார்.
இதனை ஐக்கிய தேசிய கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் கூறியது. .மணல் கட்டுப்பாட்டை யார் செய்தது. என்னிடம் அண்மையில் ஒருவர் ஒரு விடயத்தை கூறினார். உங்களுடன் நான்கு பேர் தான் இருந்தனர்.இவர் வந்தால் 12 பேர் உள்ளனர் என்றார்.
கற்களை எரியவேண்டாம்
கண்ணாடி வீடுகளிலிருந்து கற்களை எரியவேண்டாம். அதனை மட்டுமே நான் கூற முடியும். கேவலப்படுத்த வேண்டாம். அதற்கு மக்கள் வாக்களிக்கமாட்டார்கள். இது தீர்மானம் எடுக்கும் தேர்தல். நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் சந்தர்ப்பம். இந்த பொறுப்பை நம்பிக்கைக்குரியவருக்கு மறறும் செய்யக்கூடியவருக்கு வழங்கவேண்டும்.
என்னுடன் அப்பம் உண்டவர்
இரவு 12 மணிவரை என்னுடன் அப்பம் உண்டவாறு இருந்தார். காலையில் பாய்ந்து போய்விட்டார். எனக்கு கூறவுமில்லை. ஆனால் திஸ்ஸ அவ்வாறு இல்லை. எனக்கு திஸ்ஸவை உடனே எடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. ஆனால் அவர் மறுத்துவிட்டார்.
சிறிசேன செய்ததைப்போன்றுசெய்ய முடியாது என்று கூறிவிட்டார். தலைவருக்கு கூறிவிட்டு வந்தார். அதுதான் கனவான் குணம்.
ஆனால் மைத்திரிபால சிறிசேன மனி தத்தன்மைக்கும் முறையற்ற ஒன்றையே செய்தார். ஒரு வீட்டுக்குச் சென்று எவ்வாறு உண்ணுவது ? தேநீர் அருந்துவது? உங்களுக்கு இவ்வாறான நண்பர்கள் இருந்தால் கவனமாக இருங்கள். இது நம்பிக்கை சம்மந்தப்பட்ட விடயம். நீங்கள் நாட்டை பொறுப்புக்கொடுக்கவுள்ளீர்கள்.
சர்வதேச நீதிமன்றம்
இது உங்கள் எதிர்காலம். இன்று என்னை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். புலிகளும் இதனை கூறுகின்றனர்.
யுத்தத்துக்கு பொறுப்புக்கூறவேண்டுமாம். யுத்தத்தை வெற்றிக்கொண்டதால் இதனை செய்கின்றனர். மக்கள் அச்சமும் சந்தேகமுமி்ன்றி வாழ்வதற்கான சூழலை அமைத்தமையினால் இவ்வாறு செய்கன்றனர்.
என்ன செய்தோம் ?
யாழ்ப்பாணத்தில் இரவு 12 மணிக்கும் சென்றுவரலாம். யாழ்தேவி ரயில்சென்றது. இடம்பெயர்ந்த மக்களுக்கு காணிகள் வழங்கினோம்.
இவைதான் நாங்கள் செய்த தவறுகள். தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் இடம்பெயர்ந்தனர். முஸ்லிம்மக்களை விரட்டினர். ஒரே நாளில் 19 ஆயிரம் பேர் விரட்டப்பட்டனர். ஆனால் உலகத்துக்கு நாங்கள் இனவாதிகள் மதவாதிகள் என்று கூற முற்பட்டனர்.
ஐந்து தடவைகள் பாங்கு கூறுவதற்கு
முஸ்லிம்கள் ஐந்து தடவை பாங்கு கூறுவதற்கான உரிமையை நாங்களே பெற்றுக்கொடுத்தோம். ஆனால் சிறு சிறு விடயங்களை பெரிதுபடுத்தி உலகத்துக்கு கூறினர். அன்று நாங்கள் மதவழிபாட்டை செய்ய இடமளிக்கவில்லை என்று கூறினர்.
அன்று அவ்வாறு கூறியவர்கள் இன்று எடது அமைச்சர்கள். எனவ அவை குறித்து சிந்தியுங்கள். யாரும் வந்து கூறுவதை நம்பவேண்டாம். நாம் கூறுவதையும் அவ்வாறே நம்பவேண்டியதில்லை. அது பொய்யா உண்மையா என்று சிந்திக்கவேண்டும்.
உங்களை நாங்கள் நம்பியுள்ளோம். நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கையை நாங்கள் சிதறடிக்கவில்லை. எதிர்காலத்தில் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை அவ்வாறே பாதுகாப்பேன்.