ilakkiyainfo

இரவு 12 மணி­வரை என்­னுடன் அப்பம் உண்­ட­வாறு இருந்தார். காலையில் பாய்ந்து போய்­விட்டார். இவரை நம்பியா நாட்டை பொறுப்­புக்­கொடுக்கவுள்ளீர்கள்??

 

எதி­ரணி பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன மீது நம்­பிக்கை வைக்க முடி­யாது. இரவு 12 மணி­வரை என்­னுடன் இருந்து அப்பம் உண்­டவர் என்­னிடம் கூறா­ம­லேயே மறுநாள் காலையில் சென்றார். இவரை நம்பி எவ்­வாறு நாட்டை பொறுப்­புக்­கொ­டுப்­பது என்று ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷகேள்வியெழுப்பினார்.

யுத்­தத்தை முடித்து நாட்டில் அபி­வி­ருத்தியை ஏற்­ப­டுத்­திய­மைக்கா­கவும் இடம்­பெ­யர்ந்த மக்­க­ளுக்கு காணி­களை வழங்­கி­ய­மைக்­கா­கவும் யாழ்­தே­வியை கொண்­டு­வந்­த­மைக்­கா­கவும் என்னை சர்­வ­தேச நீதிமன்­றத்­துக்கு கொண்டு செல்ல முயற்­சிக்­கின்­றனர் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

எனது சகோ­த­ரர்­களை சிறிமா அம்­மை­யாரே அர­சி­ய­லுக்கு கொண்டு வந்தார். நான் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவை மட்­டுமே கொண்டு வந்தேன். யுத்தம் செய்­ததால் அவரை கொண்டு வந்தேன். எனக்கு யுத்­தத்­துக்கு நம்­பிக்­கை­யான ஒருவர் தேவைப்­பட்டார். அவர் முன்னாள்

இரா­ணுவ அதி­காரி. எனவே பயப்­ப­டாமல் கொண்­டு­வந்தேன். பாது­காப்பு தொடர்பில் புரிந்­து­ணர்வு இருந்தமை­யினால் நான் அவரைக் கொண்டு வந்தேன் என்றும் ஜனா­தி­பதி குறிப்­பிட்டார்.

உங்­களை நாங்கள் நம்­பி­யுள்ளோம். நீங்கள் என் மீது வைத்த நம்­பிக்­கையை நாங்கள் சித­ற­டிக்­க­வில்லை. எதிர்­கா­லத்தில் என் மீது வைத்­துள்ள நம்­பிக்­கையை அவ்­வாறே பாது­காப்பேன் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

நாவ­லப்­பிட்­டியில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்ற ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

ஜனா­தி­பதி அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்

makintha-12புதிய நகரம்

கடந்த 2005 ஆம் ஆண்டும் நாவ­லப்­பிட்­டிக்கு வந்து நான் உரை­யாற்­றினேன். 2010 ஆம் ஆண்டு இங்கு வந்தேன். ஆனால் 2005 ஆம் ஆண்டு இருந்த நாவ­லப்­பிட்டி இன்று இல்லை. இன்று புதிய நகரம் உருவாகியுள்­ளது.

இதற்­கான கௌரவம் எனக்கு வரக்­கூ­டாது. மாறாக இதற்­கான கௌர­வரம் அ மைச்சர் மஹிந்­தா­னந்த அளுத்­க­ம­கே­வுக்கு வர­வேண்டும். நான் அவ­ருக்கு பணம் மட்­டுமே கொடுத்தேன்.

அமைச்­சர்­க­ளு­ககு சுதந்­திரம்

நாங்கள் எமது அர­சாங்­கத்தில் அமைச்­சர்கள் சுதந்­தி­ர­மாக வேலை செய்யும் நிலை­மையை உருவாக்கியுள்ளோம். நிதியை வழங்­குவோம்.

வழங்கி இதற்­கான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்­கு­மாறு கூறுவோம். அவர்­க­ளுக்கு உத­வவே அமைச்­ச­ரவை உள்­ளது. ஏதா­வது ஒரு விட­யத்தை செய்ய முடி­யா­து­விடின் அது தொடர்பில் விளக்கமளிப்போம்.

ஆனால் இங்கு ஆச்­ச­ரியம் என்­ன­வெனில் நாட்டின் சுகா­தாரம் வீழ்ச்­சி­கண்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சர் கூறு­கின்றார்.

உதா­ர­ண­மாக நாட்டின் விளை­யாட்­டுத்­துறை வீழ்ச்­சி­கண்­டி­ருந்தால் மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே பொறுப்புக்­கூ­ற­வேண்டும்.

அதே­போன்று தற்­போது சுகா­தா­ரத்­துறை வீழ்ச்­சி­கண்­டு­விட்­டதாம். உண்­மையில் அவர் கேட்ட எல்லாவற்றையும் வழ்­ங­கினோம். ஒவ்­வொரு வரு­டமும் நிதி ஒதுக்­கீட்டை பில்­லியன் கணக்­காக அதிகரித்தோம்.

சுகா­தார அமைச்­சுக்கு அதிக நிதி

சுகா­தார அமைச்­சுக்கு முதற் தட­வை­யாக நூற்­றுக்­காண பில்­லியன் ரூபா வழங்­கப்­பட்­டுள்­ளது. சில காலங்­களில் பணம் மீண்டும் வந்­து­விடும். அதற்கு நாங்கள் என்ன செய்ய? ஆட முடி­யா­தவன் பூமி கோணல் என்று கூறு­கின்றார் என்று ஒரு கதை­யுள்­ளது. அது­போன்ற கதை­யையே இவர் கூறு­கின்றார்.

2005 யுத்­தத்தை முடிக்க ஆணை

இன்று பலர் பல விட­யங்­களை மறந்­து­வி­டு­கின்­றனர். நான் சில விட­ங­களை இங்­கு­கூ­று­கின்றேன். ஞாப­கப்­ப­டுத்­திக்­கொள்­ளுங்கள். 2005 ஆம் ஆண்டில் நான் வந்­த­போது என்­னிடம் ஒரு விட­யத்தைக் கேட்­டனர்.

இந்த நாட்டின் கடல் வளத்தில் மூன்றில் இரண்டு பகுதி எம்­மிடம் இருக்­க­வில்லை. நாடு இரண்­டாக பிரிந்திருந்­தது.

பயங்­க­ர­வா­திகள் கொலை­களை செய்­தனர். இந்த நிலை­யி­லி­ருந்து விதலை பெற்­றுத்­த­ரு­மாறே கோரினர். அதுதான் அன்­றைய ஒரே கோரிக்­கை­யாக இருந்­தது. என்­னிடம் அன்று யாரும் தொழில் கேட்­க­வில்லை. அபி­வி­ருத்தி கேட்­க­வில்லை.

பல வரு­டங்­க­ளாக முடி­யாமல் இருந்த அந்த விட­யத்தை மற்றும் ஜனா­தி­ப­தி­மார்கள் பிர­த­மர்­க­ளினால் முடி­யாமல் இருந்­ததை நாங்கள் நிறை­வேற்­றினோம்.

நாம் மக்­க­ளுக்கு சுதந்­தி­ரத்தைப் பெற்­றுக்­கொ­டுத்தோம். அதா­வது வாழும் சுதந்­தி­ரத்தைப் பெற்றுக்கொடுத்தோம். அதுதான் உண்­மைக்­க­தை­யாகும். அத்­துடன் நிற்­க­வில்லை. மீண்டும் மக்கள் முன் வந்து நாட்டை அபி­வி­ருத்தி செய்யக் கேட்டோம்.

2010 இல் அபி­வி­ருத்தி

இன்று இஙகு முஸ்லிம் மத தலை­வர்கள் உள்­ளனர். அன்று காத்­தாண்­கு­டியில் 168 பேரை கொன்­றனர். கிரா­மங்­களை அழித்­தனர். இந்து பக்­தர்­க­ளுக்கு பிரச்­சினை இருந்­தது.

2010 ஆம் ஆண்டு நாட்டை அபி­வி­ருத்தி செய்ய எமக்கு கொடுத்­தனர். நாங்கள் நாட்டை அபி­வி­ரு­ததி செய்தோம். இன்று உங்கள் கிரா­மங்­களில் வீதிகள் புதுப்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

போக்­கு­வ­ரத்து இல­கு­வா­கி­யுள்­ளது. முழுச் சமூ­கமும் நவீ­ன­மா­கி­யுள்­ளது. மருத்­து­வ­ம­னைகள் புதுப்பிக்கப்பட்­டுள்­ளன.

உட்­கட்­ட­மைப்பு வசதி மேம்­பட்­டுள்­ளது. 98 வீத­மான வீடு­க­ளுக்கு மின்­சாரம் 24 மணி­நே­ரமும் வழங்­கப்­ப­டு­கின்­றது. 100 வீதம் 204 மணி­நே­ரமும் மின்­சா­ரத்தை வழங்கும் பிராந்­தி­யத்தின் ஒரே நாடு இலங்­கை­யாகும்.

பாரிய அபி­வி­ருத்தி

கொத்­மலை திட்­டத்­தையும் நுரைச்­சோலை திட்­டத்­தையும் செய்­யாமல் இருந்­தனர். ஆனால் வாக்­கு­களை எதிர்­பார்த்து செயற்­பட்டால் ஒரு­நாளும் நாட்டை அபி­வி­ருத்தி செய்ய முடி­யாது.

சமூ­கத்தில் யாருக்கும் அநீதி ஏற்­ப­டுத்த முடி­யாது. கொழும்­புக்கு செல்­வ­தற்கு 4 மணி­நே­ரமே எடு­க­கின்­றது. இன்னும் சில காலத்தில் ஒன்­றேகால் மணி­நே­ரத்தில் கொழும்­புக்கு செல்ல முடியும்.

பொலி­ஸா­ருக்கு தண்­டப்­ப­ணத்தை செலுத்­தி­விட்டு ஒரு மணி­நே­ரத்­திலும் வரலாம். தண்­டப்­ப­ணத்­தையும் அதி­க­ரிக்க திட்­ட­மிட்­டுள்ளேன். இதுதான் உண்மை நிலை.

மாற்­றத்தை பாருங்கள்

நாட்டில் ஏற்­பட்­டுள்ள மாற்­றத்தை பாருங்கள். எந்­த­நாளும் ஒரே­இ­டத்தில் இருக்க முடி­யாது. முன்­செல்லும் பல­மான சமூகம் எனக்குத் தெரியும். அதுதான் எமக்குத் தேவை. நாம் கூறி­யதை செய்­துள்ளோம்.

நாம் என்ன செய்­ய­வில்லை என்று தெரி­ய­வில்லை. நாட்டில் 60 வீத­மா­னோ­ருக்கு குழாய் நீர் வழங்­கி­யுள்ளோம். இதனை 100 வீதம் வழங்­குவோம்.அதனை நாங்கள் செய்வோம். அந்த வச­தியை வழங்கவேண்டும்.

பாது­காப்­பான எதிர்­காலம்

பிள்­ளை­க­ளுக்கு சிநந்த கல்­வியை வழங்­க­வேண்டும். சுற்­றுலாப் பய­ணிகள் அதி­க­ரித்­துள்­ளனர். அன்று நான்கு இலட்சம் பேர் வந்­தனர்.

இன்று 20 இலட்சம் பேர் வரு­கின்­றனர். சுற்­று­லாத்­துறை வளர்­கின்­றது. இளை­ஞர்­க­ளுக்கு 150000 தொழில்வாய்ப்­புக்­களை வழங்க வரவு செல­வுத்­திட்­டத்தை முன்­வைத்­துள்ளோம். கொழும்பில் புது நகரம் உரு­வா­கின்­றது.

எனினும் எமது சமூ­கத்தில் ஒழுக்கம் இல்­லா­வி்டின் எதனை செய்­தாலும் அர்த்தம் இல்லை. பெற்­றோரை பெரி­யோரை மதிக்கும் சமூகம் தேவை. அந்த இடத்­துக்கு சமூகம் வர­வேண்டும்.

சிலர் பெற்­றோரை மறந்­து­விட்­டனர். உங்கள் பிள்­ளைக்கு சிறந்­த­வ­ள­மான பாது­காப்­பான எதிர்­கா­லத்தை உரு­வாக்­க­வேண்டும். உங்கள் பிள்ளை இந்த நாட்டை அல்ல உல­கத்தை வெல்­ல­வேண்டும். அதற்­கான திட்­டமும் பலமும் எம்­மிடம் உள்­ளது.

அது என்­னு­டைய தவறு அல்ல

இன்று போட்­டி­யிட யார் வற்­துள்­ளனர். இவர்கள் எந்தக் கொள்­கை­யு­டனும் வர­வில்லை. அநீதி ஏற்­பட்­டதால் வந்­தார்­களாம். எனக்கு அதனை கொடுக்­க­வில்லை.இதனை கொடுக்­க­வில்லை என்று கூறு­கின்­றனர். தனக்கு அதிக அமைச்­சுக்கள் இருந்­ததாம் பின்னர் ஒன்று கிடைத்­ததாம் என்று கூறு­கின்­றனர்.

இலங்­கையில் சுகா­தார அமைச்சு என்­பதே பெரிய அமைச்சு. கிரா­மத்தில் இருந்­த­போது சுகா­தார அமைச்சைப் பொறுப்­பேற்று முழு நாட்­டுக்கும் வேலை செய்­யு­மாறு நான் கூறினேன். அதனை செய்ய முடி­யாமல் போன­தற்கு நான் என்ன செய்­ய­மு­டியும்? அது என்­னு­டைய தவறு அல்ல?

சேறு­பூ­சு­கின்­றனர்

தற்­போது சேறு­பூச ஆரம்­பித்­துள்னர். எனக்கு எனது பிள்­ளை­க­ளுக்கு சேறு­பூ­சு­கின்­றனர். நான்கு சகோதரர்கள் குறித்து கூறு­கின்­றனர். நான் எந்த சகோ­த­த­ரை­ரையும் அர­சி­ய­லுக்கு கொண்­டு­வ­ர­வில்லை.

என்­னையும் சகோ­த­ரர்­க­ளையும் பண்­டா­நா­யக்க அம்­மை­யாரே கொண்டு வந்தார். என்னை வரு­மாறு அம்­மையார் அழைத்தார். சமல் ராஜ­ப­க்ஷ­வையும் அவர் அழைத்தார். அவர் முடி­யாது என்றார். அதனால் என்னை அழைத்தார்.

பஷி­லுக்கு 97 வாக்­குகள்

பஷில் ராஜ­பக்ஷ கட்­சியின் உப செய­லாளர். எனக்கு 27 வாக்­குகள் கிடைத்­தன. பஷி­லுக்கு 97 வாக்­குகள் கிடைத்­தன. அவ்­வா­றுதான் பஷில் வந்தார். 1977 ஆம் ஆண்டில் பஷில் வந்தார். நான் அழைக்­க­வில்லை. பண்­டா­ர­நா­யக்க அம்­மை­யாரே வழங்­கினார்.

எனக்கும் அதற்கும் தொடர்பு இல்லை. பஷிலை நேர­டி­யாக அழைத்து போட்­டி­யி­டு­மாறு அம்­மையார் கூறினார். அத­னால்தான் இன்றும் அம்­மை­யாரை நாங்கள் மதிக்­கின்றோம். வர­லாற்றை நாங்கள் மறக்­க­மாட்டோம். பண்­டா­ர­நா­யக்க டி. ஏ. ராஜ­பக்ஷ ஆகியோர் அன்று எதிர்க்­கட்­சிக்கு சென்­றனர். இன்று வர­லாற்றை மறந்­து­விட்­டனர்.

கோத்­த­பா­யவை மட்­டுமே கொண்­டு­வந்தேன்

நான் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவை மட்­டுமே கொண்டு வந்தேன். யுத்தம் செய்­ததால் கொண்டு வந்தேன். எனக்கு யுத்­தத்­துக்கு நம்­பிக்­கை­யான ஒருவர் தேவைப்­பட்டார்.

அவர் முன்னாள் இரா­ணுவ அதி­காரி. எனவே பயப்­ப­டாமல் கொண்­டு­வந்தேன். பாது­காப்பு தொடர்பில் புரிந்­து­ணர்வு இருந்­த­மை­யினால் நான் அவரைக் கொண்டு வந்தேன். அந்த பொறுப்பை அவ­ரிடம் கொடுத்தேன். அவரின் வேலைகள் உங்­க­ளுக்கு தெரியும். கொழும்பு நகரை யார் அழ­கு­ப­டுத்­தி­யது என்று உங்­க­ளுக்குத் தெரியும்.

மைத்­தி­ரியின் சகோ­த­ரர்கள்

ஆனால் ஒரு குற்­றச்­சாட்டை ரணில் விக்­ர­ம­சிங்க மற்றும் அனுர குமா­ர­தி­சா­நா­யக்க போன்றோர் மைத்திரிபால சிறி­சே­ன­வுக்கும் இந்தக் குற்­றச்­சாட்டை முன்­வைத்­தமை எனக்குத் தெரியும்.

அவரின் சகோ­த­ரர்கள் குறித்து கூறினர். அந்தக் குற்­றச்­சாட்டை அவர்­களே முன்­வைத்­தனர். ஒரு சகோ­தரர் நாட்டின் நெல் மற்றும் அரிசி விலையை கட்­டுப்­ப­டுத்­தினார். ட்டலி சிறி­சேன என்­பவர் இதனை செய்தார்.

இதனை ஐக்­கிய தேசிய கட்­சியும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் கூறி­யது. .மணல் கட்­டுப்­பாட்டை யார் செய்­தது. என்­னிடம் அண்­மையில் ஒருவர் ஒரு விட­யத்தை கூறினார். உங்­க­ளுடன் நான்கு பேர் தான் இருந்­தனர்.இவர் வந்தால் 12 பேர் உள்­ளனர் என்றார்.

கற்­களை எரி­ய­வேண்டாம்

கண்­ணாடி வீடு­க­ளி­லி­ருந்து கற்­களை எரி­ய­வேண்டாம். அதனை மட்­டுமே நான் கூற முடியும். கேவலப்படுத்த வேண்டாம். அதற்கு மக்கள் வாக்­க­ளிக்­க­மாட்­டார்கள். இது தீர்­மானம் எடுக்கும் தேர்தல். நாட்டின் தலை­வி­தியை தீர்­மா­னிக்கும் சந்­தர்ப்பம். இந்த பொறுப்பை நம்­பிக்­கைக்­கு­ரி­ய­வ­ருக்கு மறறும் செய்­யக்­கூ­டி­ய­வ­ருக்கு வழங்­க­வேண்டும்.

என்­னுடன் அப்பம் உண்­டவர்

இரவு 12 மணி­வரை என்­னுடன் அப்பம் உண்­ட­வாறு இருந்தார். காலையில் பாய்ந்து போய்­விட்டார். எனக்கு கூற­வு­மில்லை. ஆனால் திஸ்ஸ அவ்­வாறு இல்லை. எனக்கு திஸ்­ஸவை உடனே எடுக்­க­வேண்­டிய தேவை ஏற்­பட்­டது. ஆனால் அவர் மறுத்­து­விட்டார்.

சிறி­சேன செய்­த­தைப்­போன்­று­செய்ய முடி­யாது என்று கூறி­விட்டார். தலை­வ­ருக்கு கூறி­விட்டு வந்தார். அதுதான் கனவான் குணம்.

ஆனால் மைத்­தி­ரி­பால சிறி­சேன மனி தத்­தன்­மைக்கும் முறை­யற்ற ஒன்­றையே செய்தார். ஒரு வீட்­டுக்குச் சென்று எவ்­வாறு உண்­ணு­வது ? தேநீர் அருந்­து­வது? உங்­க­ளுக்கு இவ்­வா­றான நண்­பர்கள் இருந்தால் கவனமாக இருங்கள். இது நம்­பிக்கை சம்­மந்­தப்­பட்ட விடயம். நீங்கள் நாட்டை பொறுப்­புக்­கொடுக்கவுள்ளீர்கள்.

சர்­வ­தேச நீதி­மன்றம்

இது உங்கள் எதிர்­காலம். இன்று என்னை சர்­வ­தேச நீதி­மன்­றத்­துக்கு கொண்டு செல்ல முயற்­சிக்­கின்­றனர். புலி­களும் இதனை கூறு­கின்­றனர்.

யுத்­தத்­துக்கு பொறுப்­புக்­கூ­ற­வேண்­டுமாம். யுத்­தத்தை வெற்­றிக்­கொண்­டதால் இதனை செய்­கின்­றனர். மக்கள் அச்­சமும் சந்­தே­க­மு­மி்ன்றி வாழ்­வ­தற்­கான சூழலை அமைத்­த­மை­யினால் இவ்­வாறு செய்­கன்­றனர்.

என்ன செய்தோம் ?

யாழ்ப்பாணத்தில் இரவு 12 மணிக்கும் சென்றுவரலாம். யாழ்தேவி ரயில்சென்றது. இடம்பெயர்ந்த மக்களுக்கு காணிகள் வழங்கினோம்.

இவைதான் நாங்கள் செய்த தவறுகள். தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் இடம்பெயர்ந்தனர். முஸ்லிம்மக்களை விரட்டினர். ஒரே நாளில் 19 ஆயிரம் பேர் விரட்டப்பட்டனர். ஆனால் உலகத்துக்கு நாங்கள் இனவாதிகள் மதவாதிகள் என்று கூற முற்பட்டனர்.

ஐந்து தடவைகள் பாங்கு கூறுவதற்கு

முஸ்லிம்கள் ஐந்து தடவை பாங்கு கூறுவதற்கான உரிமையை நாங்களே பெற்றுக்கொடுத்தோம். ஆனால் சிறு சிறு விடயங்களை பெரிதுபடுத்தி உலகத்துக்கு கூறினர். அன்று நாங்கள் மதவழிபாட்டை செய்ய இடமளிக்கவில்லை என்று கூறினர்.
அன்று அவ்வாறு கூறியவர்கள் இன்று எடது அமைச்சர்கள். எனவ அவை குறித்து சிந்தியுங்கள். யாரும் வந்து கூறுவதை நம்பவேண்டாம். நாம் கூறுவதையும் அவ்வாறே நம்பவேண்டியதில்லை. அது பொய்யா உண்மையா என்று சிந்திக்கவேண்டும்.

உங்களை நாங்கள் நம்பியுள்ளோம். நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கையை நாங்கள் சிதறடிக்கவில்லை. எதிர்காலத்தில் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை அவ்வாறே பாதுகாப்பேன்.

Exit mobile version