Site icon ilakkiyainfo

இராணுவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு இறுதிச் சந்தர்ப்பம்; தவறவிடவே கூடாது : சம்பிக்க ரணவக்க

இரா­ணுவ மயப்­ப­டுத்­தப்­பட்ட தேர்­தலை நோக்கி மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்கம் நகர்­கின்­றது. இரா­ணுவ ஆட்­சிக்கு முற்­றுப்­புள்ளி வைக்கும் இறுதி சந்­தர்ப்பம் தற்போது வந்துள்ளது.

இதை தவற விட வேண்டாம் என தெரி­விக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சம்­பிக்க ரண­வக்க, வடக்கு கிழக்கு மக்கள் யாரை ஆத­ரிக்க வேண்டும் என்­பது அவர்­களின் விரும்பம். அதற்­காக தமி­ழர்­களை வற்­பு­றுத்த வேண்டாம் எனவும் குறிப்­பிட்டார்.

புதிய ஜன­நா­யக முன்­ன­ணி­யினால் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;

ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்டி இருப்­பது வழ­மை­யா­னது. ஆனால் ஆட்­சி­யினை விரும்­பு­வதும் யார் ஆட்­சிக்கு வர வேண்டும் என்­பதை தெரிவு செய்­வதும் பொது­மக்­களேயாவர்.

ஆனால் தற்­போது மக்­களின் விருப்­பத்­தினை மீறி ஒரு சிலரின் விருப்­பத்­திற்­காக தேர்தல் வெற்றி தீர்­மா­னிக்­கப்­ப­டு­கின்­றது.

அதற்­காக அர­சாங்க ஊழி­யர்­க­ளையும் அரச உட­மை­க­ளையும் அரச ஊட­கங்­க­ளையும் பயன்படுத்துகின்றனர். இத­னையும் தாண்டி தற்­போது இரா­ணுவ பிர­சா­ரத்­தி­னையும் அர­சாங்கம் ஆரம்பித்து விட்­டது.

எதி­ர­ணியின் கூட்­டங்­க­ளிற்கும் செய்­தி­யாளர் சந்­திப்­புக்­க­ளுக்கும் புல­னாய்வு பிரிவு அனுப்­பப்­ப­டு­கின்­றது. மக்கள் யாரை ஆத­ரிக்க வேண்டும் என்­பது இரா­ணு­வத்­தினால் கட்­டா­யப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.

இரா­ணுவ ஆட்­சி­யினை நோக்­கிய பய­ணத்­திற்­கான சமிக்ஞை­யினை அர­சாங்கம் காட்­டு­கின்­றது.

மக்­க­ளுக்கு ஜன­நா­ய­கத்­தி­னையும் நல்­லாட்­சி­யி­னையும் பெற்­றுக்­கொள்ளும் இறுதி சந்­தர்ப்பம் தற்­போது அமைந்­துள்­ளது. இதனை தவற விட வேண்டாம். இதுவே நாட்டின் பாதை­யினை தீர்­மா­னிக்கும் இறுதி சந்தர்ப்­ப­மென்­ப­தனை மக்கள் மறந்து விட வேண்டாம்.

2005 ஆம் ஆண்டு தேர்­தலில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ மீது நம்­பிக்­கை­யி­ருந்­ததை விடவும் மறை முக­மான பல ஒப்­பந்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

ஜே.வி.பி.யுடனும் ஜாதிக ஹெல உறு­ம­ய­வு­டனும் முக்­கிய உடன்­ப­டிக்­கைகள் செய்து கொள்­ளப்­பட்­டன. அதேபோல் விடு­தலைப் புலி­க­ளுடன் ஒப்­பந்தம் செய்து கொள்­ளப்­பட்­டது யார் என்­ப­தற்கும் எவ்வாறானதொரு உடன்­ப­டிக்கை என்­ப­தற்கும் தெளி­வான பதிலை அர­சாங்­கத்தில் ஒரு சிலர் கொடுக்கலாம் அன்று விடு­த­லைப்­பு­லிகள் தமிழ் மக்­களின் வாக்­கு­ரி­மை­யினை தடுத்­த­மையும் அரசாங்கத்தின் வெற்­றிக்கு உத­வி­ய­மையும் முடிச்சு போடு­வதை விட இப்­போது உள்ள நிலை­மை­யினை மக்கள் விளங்கிக் கொண்டு சரி­யான முடிவு எடுக்க வேண்டும் என்றே நாம் எதிர்­பார்க்­கின்றோம்.

தற்­போது தமிழ் மக்கள் யாரை ஆத­ரிக்க வேண்டும். வடக்கு கிழக்கு தமிழ் மக்­களின் ஆத­ரவு யாருக்கு என்பதை அவர்­களே தீர்­மா­னிக்க வேண்டும்.

தமிழ், முஸ்லிம் சமூ­கத்­திற்கு அவ­சி­ய­மான தேர்தல் அல்­லது சிங்­கள மக்­க­ளுக்கு அவ­சி­ய­மான தேர்தல் என பிரித்து ஒப்­பி­டாது அனை­வரும் தேசிய பிரச்­சி­னை­யா­கவும் ஒட்டு மொத்த மக்­களின் விடுதலையாகவும் எண்ணி இத் தேர்­தலை பயன்­ப­டுத்த வேண்டும்.

அதற்­காக தமிழ் மக்­களை வற்­பு­றுத்தி தேர்­தலில் யாரை ஆத­ரிக்க வேண்டும் என எவரும் செயற்­பட அவ­சி­ய­மில்லை.

இலங்­கையில் ஜனா­தி­பதி ஒரு­வரை தெரிவு செய்­வதில் தமிழ் மக்­க­ளுக்கு அக்­க­றை­யில்லை. அவர்கள் எதிர்­பார்ப்­பது தனித் தமி­ழீழம் என்­ப­தையே விடு­தலைப் புலிகள் முன்­வைத்­தனர்.

இத­னாலேயே 2005 ஆம் ஆண்டுத் தேர்­தலில் வடக்கு கிழக்கின் தமிழ் வாக்­குகள் விடு­தலைப் புலி­க­ளினால் தடுக்­கப்­பட்­டன. ஆனால் இன்று நிலைமை மாற்­ற­ம­டைந்து விட்­டது.

இன்று விடு­தலைப் புலிகள் அழிந்து விட்­டனர். ஆகையால் இன்று எவரும் வியா­பாரம் பேசி வாக்­கு­களை மாற்ற முடி­யாது.

கேள்வி:- அப்­ப­டி­யாயின் இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ் மக்­களின் வாக்­குகள் தீர்­மா­னிக்கும் சக்தி­யாக அமை­யுமா?

தமிழ் மக்­களின் வாக்­குகள் மட்­டுமே ஆட்­சி­யினை தீர்­மா­னிக்­கு­மெனின் சிங்­க­ள­வர்­க­ளிடம் நாம் போக வேண்­டிய அவ­சியம் இல்லை. அதற்­காக தமிழ் மக்­களின் ஆத­ரவு அவ­சி­ய­மில்லை என நான் கூற­வில்லை. இது 2015 ஆம் ஆண்­டிற்­கான ஜனா­தி­பதித் தேர்தல். இதில் பேரம் பேசும் சக்­தி­க­ளுக்கு இட­மில்லை.

எனவே தமிழ் மக்கள் தமது வாக்­கு­களை அவர்­களின் விருப்­பிற்­க­மைய பயன்­ப­டுத்­தவேண்டும். ஆனால் தமது வாக்­கு­ரி­மை­யினை விட்­டுக்­கொ­டுக்கக்கூடாது. குறிப்­பாக வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் தமது வாக்­கு­களை சரி­யாக பயன்­ப­டுத்­தவேண்டும்.

ஏனெனில் எமது இரா­ணுவ வீரர்­களின் உயிர்த்­தி­யாகம் இன்று வடக்கு கிழக்கு மக்­க­ளையே பாதுகாத்துள்ளது.

அதேபோல் மக்­களின் உரி­மை­களை தடுக்கும் வகை­யிலோ மக்கள் யாரை ஆத­ரிக்க வேண்­டு­மென்ற வற்புறுத்­த­லையோ இரா­ணு­வமும் புல­னாய்வு பிரிவும் மேற்கொள்ளக்கூடாது.

இப்­போதே எமக்கு பல தக­வல்கள் கிடைத்­துள்­ளன. அர­சாங்கம் சூழ்ச்­சி­யினை செய்­வதும் அடக்கு முறை­களை கையாள்­வதும் எமக்குத் தெரியும். எதிர்­வரும் காலங்­களில் யார் இவ்வாறு செய்யற்பட்டனர் என்ற தக­வல்­களை ஆதா­ரத்­துடன் நிரூ­பிப்போம்.

கேள்வி-:- தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புடன் பேச்­சு­வார்த்தை நடத்தும் எண்ணம் உள்­ளதா?

இந்த தேர்தல் நடப்­பது ஜன­நா­ய­கத்­தினை வெற்றி கொள்­ளவே. இதில் ஜன­நா­ய­கத்­தினை வென்­றெ­டுக்க கட்சி பேத­மின்றி அனை­வரும் போரா­டு­கின்றோம்.

இன்று நாட்டில் சிங்­கள மக்­க­ளுக்கு மட்டும் பிரச்­சினை இல்லை. தமிழ் – முஸ்லிம் மக்­க­ளுக்கும் பிரச்­சினை உள்­ளது. ஆகவே நமது போராட்­டத்­திற்கு அனை­வ­ரி­னதும் ஒத்­து­ழைப்­பினை எதிர்­பார்க்­கின்றோம்.

இதில் எமக்கு ஆத­ரவு வழங்குவதும் அல்­லது எமது கொள்­கை­யினை ஆத­ரிக்­காது செயற்­ப­டு­வதும் கூட்டமைப்பின் தனிப்­பட்ட விருப்­பம். எனினும் நாம் அனை­வ­ரி­னையும் ஒன்றிணைக்கத் தயார்.

கேள்வி:– இம்முறையும் நானே ஜனாதிபதி எனக்கு யாரும் சவால் இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அண்மையில் தெரிவித்தார். இது தொடர்பில் உங்களின் கருத்து என்ன?

நான் எப்படியேனும் ஆட்சியை கைப்பற்றுவேன். எனது ஆட்சி உறுதியென தெரிவித்துள்ளார் என்றால் அதன் பின்னணி ஏதேனும் திட்டத்துடன் என்பது விளங்குகின்றது. மக்களின் ஆதரவு இன்றி யாரும் ஆட்சியமைக்க முடியாது.

மஹிந்தராஜபக் ஷவிற்கு மட்டும் இது பொருந்தாது அல்ல. எனவே மக்கள் தமது வாக்கினை சரியான ஆட்சிக்காகவும் அமைதிக்காகவும் பயன்படுத்தவேண்டும்.

Exit mobile version