லண்டன்: தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி 2014ம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை வென்றுள்ளார். ஆண்டு தோறும் உலக அழகிப் போட்டி நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான அழகிப் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு அழகிகள் கலந்து கொண்டனர். இறுதிச் சுற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவியான ரோலீன் ஸ்ட்ராஸ்(22) இந்த ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை வென்றார்.
அவருக்கு கடந்த ஆண்டு உலக அழகிப் பட்டத்தை வென்ற மெகன் யங் மகுடத்தை சூடினார். ஹங்கேரியைச் சேர்ந்த எடினா கல்க்சரும், மூன்றாவது இடத்தை அமெரிக்காவைச் சேர்ந்த எலிசபெத் சாப்ரிட்டும் பெற்றனர்.
டாக்டர் மற்றும் நர்ஸின் மகளான ரோலீன் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். அவர் தனது தந்தை வழியில் மருத்துவம் படிப்பதாக தெரிவித்தார். அவருக்கு இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவது என்றால் பிடிக்குமாம்.
பெண்கள் நலத்தில் கவனம் செலுத்த விரும்பும் ரோலீன் எம்.பி.ஏ. படிக்கவும் திட்டமிட்டுள்ளார்.
2000ம் ஆண்டு ரோலீனுக்கு 8 வயது இருக்கையில் அவர் தென்னாப்பிரிக்க அழகிப் போட்டியை பார்த்துள்ளார். அப்போது தானும் ஒரு நாள் அந்த பட்டத்தை வெல்ல வேண்டும் என்று தீர்மானித்தார்.
அதன்படி கடந்த மார்ச் மாதம் அவர் தென்னாப்பிரிக்க அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.
உலக அழகிப்பட்டம் வென்ற 3வது தென்னாப்பிரிக்கர் ரோலீன். முன்னதாக 1958ம் ஆண்டில் பெனிலோப் ஆன் கொலினும், 1974ம் ஆண்டில் அனலின் கிரியலும் உலக அழகிப்பட்டத்தை வென்றனர்.
1974ம் ஆண்டு உலக அழகியாக தேர்வான இங்கிலாந்தைச் சேர்ந்த ஹெலன் மார்கன் தனது பட்டத்தை திருப்பிக் கொடுத்துவிட்டார். அதனால் அந்த பட்டம் அனலினுக்கு அளிக்கப்பட்டது.
Former Miss World Indian actress Aishwarya Rai Bachchan makes a guest appearance with husband Abhishek Bachchan, daughter Aaradhya, mother Brindya, and Miss World organiser Julia Morley during the Miss World competition at the ExCel centre in London
The five winners of the Beauty with a Purpose section of the competition celebrate on the stage
Miss England and Miss Australia congratulate the new Miss World