பெஷாவர்: 15 வயதான தாவூத் இப்ராகிம் செவ்வாய்க்கிழமை பெஷாவர் இராணுவ பள்ளியில் நடந்த படுகொலையிலிருந்து தப்பித்த ஒரே ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஆவார்.
அவர் முன் தின இரவு ஒரு திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்தினருடன் சென்று வந்துள்ளார். பிறகு தனது கடிகாரத்தில் அலாரம் வைத்துவிட்டு தூங்கிவிட்டார்.
ஆனால் அவரது அலாரம் செவ்வாய்க்கிழமை காலை அடிக்காததால் தாமதமாக எழுந்துள்ளார். எனவே பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
அன்று தான் அவர் படிக்கும் பள்ளியில் தலிபான் தீவிரவாதிகள் 132 மாணவர்களை சுட்டு கொன்ற சம்பவம் நடந்தது. இந்த அதிர்ச்சி சம்பவத்தை கேள்விப்பட்ட இப்ராகிம், அவருடைய வகுப்புத் தோழர்கள் அனைவரும் கூட்டமாக புதைக்கப்படும் நிகழ்வை கண்டு கலங்கி போனார்.
இது குறித்து தாவூத் மூத்த சகோதரர் சுப்யான் இப்ராஹிம் கூறுகையில், இது தான் விதி என்பது, அவரது வகுப்பில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர்.
தாவூத் குடும்பத்தாருடன் சென்றதால் உயிர் பிழைத்துள்ளார் என்று கூறினார். அவர் ஜூடோ கற்கும் மாணவர் என்றும் கடுமையான குழந்தை அல்ல, இப்போது எந்த உணர்வு காட்ட நேரம் இல்லை என்று கூறி அவர் தான் முழு நாள் முழுவதும் தன் வகுப்பு மாணவர்கள் கூட்டமாக புதைக்கப்படும் நிகழ்வில் உடன் இருந்தார் என்று தெரிவித்தார்.
தீவிரவாதிகள் தாக்குதலில் பள்ளி முதல்வர் உட்பட மொத்தம் 142 பேர் உயிரிழந்தது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பத்திரிக்கையாளர்கள் இன்று பள்ளிக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அங்கு இரத்தம் நனைந்த பள்ளியறையின் படங்கள், உடைந்த பெட்டிகள், கிழிந்த புத்தகங்கள் மற்றும் காலணிகள் சிதறி கிடந்ததாக பத்திரிக்கையாளர் ஒருவர் கூறினார்.
இந்த இரத்த சுவடுகள் குழந்தைகள் எப்படி தப்பிக்க முயற்சி செய்துள்ளனர் என்பதை காட்டுகிறது என்று சோகமாக தெரிவித்தார்.
உயிரிழந்த பிஞ்சுகளின் உடல்கள் ஒரே குழியில் அடக்கம்.. உலுக்கிய பெற்றோரின் கதறல்!
பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் தாலிபான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 141 மாணவ மாணவியர், ஆசிரியர்களின் இறுதிச் சடங்குகள் தொடங்கியுள்ளன.
பெஷாவர் முழுவதும் சோகமும், கதறலுமாக உள்ளது. இறந்தவர்களில் 132 பேர் மாணவ மாணவியர் ஆவர்.
இவர்களுக்கு 12 முதல் 16 வயதுக்குள்தான். 9 பேர் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள். இந்த கொடும் தாக்குதலில் 120க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் 100க்கும் மேற்பட்டோர் மாணவ, மாணவியர் ஆவர்.
தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 132 மாணவ, மாணவிகளின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு உடனுக்குடன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்றிரவே பெரும்பாலான உடல்கள் ஒப்படைக்கப்பட்டு விட்டது.
சில மாணவர்கள் முகம் சிதைந்துள்ளதால், அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்று காலையில் இருந்து பலியான மாணவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.
சில இடங்களில் ஒரே பகுதியில் அடுத்தடுத்து குழிகள் தோண்டி மொத்தமாக மாணவர்கள் உடல்கள் வைத்து அடக்கம் செய்யப்பட்டது.
இதனால் பெஷாவர் நகரமே சோகமாக காணப்படுகிறது. எங்கு பார்த்தாலும் அழுகையும், வேதனையுமாக மக்கள் உள்ளனர். இந்த சம்பவம் இது பெஷாவர் நகர மக்களிடம் ஆழ்ந்த இரங்கலை ஏற்படுத்தியது.