ilakkiyainfo

ஹோட்டல் வெய்ட்டர் என தவறாக கருதப்பட்ட பராக் ஒபாமா

அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா, தான் ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­ப­டு­வ­தற்கு முன்னர் கறுப்பு கழுத்­துப்­பட்டி சகிதம் டிப்­டொப்­பாக ஆடை­ய­ணிந்து வைப­வ­மொன்றில் பங்­கு­பற்­றி­ய­போது தன்னை ஹோட்டல் வெயிட்­டர்­களில் ஒருவர் என சிலர் எண்­ணி­விட்­ட­தாக கூறி­யுள்ளார்.

அமெ­ரிக்­காவில் இன­வாதம் குறித்த விவா­தங்கள் மீண்டும் தீவி­ர­ம­டைந்­துள்­ளன. அமெ­ரிக்­காவில் சிறந்த ஜன­நா­யகம் நில­வு­வ­தாக கூறப்­ப­டு­கின்ற­ போ­திலும் தனிப்­பட்ட ரீதியில் அந்­நாட்டு மக்கள் சில­ரி­டையே இன­வாத சிந்­த­னைகள் புதைந்து கிடப்­பதை அண்­மைக்­கால சம்­ப­வங்கள் வெளிப்­ப­டுத்­து­கின்­றன.

8224818799-121108-obamaபேர்­குசன் நகரில் மைக்கல் பிரவுண் எனும் கறுப்­பின இளை­ஞரும் நியூயோர்­ககில் எரிக் கார்ணர் எனும் கறுப்­பின இளை­ஞரும் பொலி­ஸாரால் சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட சம்­ப­வங்கள் ஏற்­கெ­னவே சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தன.

இவற்றைத் தொடர்ந்து நியூயோர்க் நகரில் கடந்த சனிக்­கி­ழ­மை பொலிஸ் உத்­தி­யோ­கஸ்­தர்கள் இருவர் கறுப்­பின நபர் ஒரு­வரால் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டுள்­ளனர்.

கறுப்­பின இளை­ஞர்கள் இருவர் சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­மைக்கு பழி­வாங்கும் வகையில் பொலிஸ் உத்­தி­யோ­கஸ்­தர்­களை தான் கொன்­ற­தாக இக்­கொ­லை­களை புரிந்த சந்­தேக நபர் தெரி­வித்­துள்­ளமை மேலும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

தற்­போது அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக பதவி வகிக்கும் பராக் ஒபா­மாவும் கறுப்­பி­னத்­தவர். அமெ­ரிக்க மக்கள் மத்­தியில் நிலவும் நிற­பே­தங்கள் குறித்து பராக் ஒபா­மாவும் அவரின் பாரி­யா­ரான மிஷெல் ஒபாமாவும் செவ்­வி­யொன்றில் கருத்துத் தெரி­விக்­கையில், தமது சொந்த அனு­ப­வங்­க­ளையும் நினை­வு­கூர்ந்­துள்­ளனர்.

ஹோட்­ட­லொன்றில் நடை­பெற்ற வைப­வத்­துக்கு டக்­ஸிடோ, கறுப்பு கழுத்­துப்­பட்டி சகிதம் மிடுக்­காக தான் சென்­ற­போது தன்னை ஹோட்டல் வெய்­டர்­களில் ஒருவர் எனக் கருதி கோப்பி கொண்­டு­வ­ரு­மாறு கூறி­ய­தாக ஜனா­தி­பதி பராக் ஒபாமா தெரி­வித்­துள்ளார்.

அதே­வேளை, பராக் ஒபாமா ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­ப­டு­வ­தற்கு முன்னர் சிகாகோ நகரில் வாடகை காரொன்றை பெற்­றுக்­கொள்­வ­தில்­ கூட நெருக்­க­டி­களை எதிர்­நோக்­கி­ய­தாக திரு­மதி மிஷெல் ஒபாமா தெரி­வித்­துள்ளார்.

தான் முதற்­பெண்­ம­ணி­யான பின்­னர்­கூட வர்த்­தக நிலை­ய­மொன்­றுக்கு சென்­ற­போது, தன்னை அணு­கிய பெண்­ணொ­ருவர், சில பொருட்­களை எடுத்­து­வைப்­ப­தற்கு உத­வு­மாறு தன்­னிடம் கோரி­ய­தாக மிஷெல் ஒபாமா கூறி­யுள்ளார்.

“அப்பெண் என்னை முதற் பெண்­ம­ணி­யாக பார்க்­க­வில்லை. தன்­ககு உத­வக்­கூ­டிய ஒரு­வ­ரா­கவே அவர் என்னை பார்த்­துள்ளார்” என மிஷெல் ஒபாமா தெரி­வித்­துள்ளார்.

தற்­போது நிலைமை முன்­னேற்­ற­ம­டைந்­துள்­ள­தாக பராக் ஒபா­மாவும் மிஷெல் ஒபாமாவும் தெரிவித்துள்ளனர்.

எனினும் இன்னும் முன்னேற்றம் ஏற்பட வேண்டியுள்ளது என அவர்கள் கூறுகின்றனர்.

எவ்வாறெனினும், நியூயோர்க்கில் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை தான் வன்மையாகக் கண்டிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா

Exit mobile version