தென்கிழக்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சிப் பகுதியில் உள்ள யுலின் நகரத்தில் வசித்து வருபவர் 30 வயதான டான். அவர் வசித்து வந்த வீடடின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.
அப்போது பெண்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் குவியல் குவியலாக மேற்கூரையிலிருந்து கீழே விழுந்தது. அதன் எண்ணிக்கை ஏறத்தாழ 2000 எண்ணிக்கையை தாண்டும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து டான் காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.
ஒரு கட்டத்தில் உள்ளாடைகளை மேற்கூரையில் வைக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டபோது வீட்டில் உள்ள துவாரங்களிலும், படிக்கட்டுகளிலும் கூட அவர் உள்ளாடைகளை மறைத்து வைத்துள்ளார்.
அவரது வீட்டிற்கு பக்கத்தில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் குடும்பத்தினர் வெளியே செல்லும் போது தன்னிடமுள்ள மாஸ்டர் கீயின் மூலம் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து உள்ளாடைகளை அவர் திருடியிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த விசித்திர உள்ளாடை திருடனுக்கு எப்படி சாவி கிடைத்தது என்பது தான் புரியாத புதிராக உள்ளது.