சிரியாவில் செயற்பட்டுவரும் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் அமெரிக்கத் தலைமையிலான படைகளுக்குச் சொந்தமான போர்விமானத்தை சுட்டு வீழ்த்தியதிய இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள்.
இஸ்லாமிய அரசு தீவிரவாதக்குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிரியாவின் வடபகுதி நகரான ராக்கா நகருக்கு அருகே இந்த விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டு தரையில் விழுந்ததாக, சிரிய அரசின் எதிர்தரப்பை ஆதரிக்கும் லண்டனிலுள்ள மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் என்னும் அமைப்பு தெரிவித்திருக்கிறது.
இந்த விமானத்தை இயக்கிய அரேபிய நாட்டு விமான ஓட்டி சிறை பிடிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது. ஆனால் அவரது தற்போதைய நிலைமை குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. இந்த விமான ஓட்டி ஜோர்டன் நாட்டைச் சேர்ந்தவர் என்று சில செய்திகள் தெரிவித்துள்ளன.
இஸ்லாமிய அரசு தீவிரவாதக் குழுவுக்கு எதிரான வான் தாக்குதல்களில் பங்கேற்றிருக்கும் பல அரபுநாடுகளில் ஜோர்டானும் ஒன்று.