கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் யாழ். இந்துக் கல்லூரி மாணவன் கணிதப் பிரிவில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.
நேற்றுப் பிற்பகல் வெளியாகிய க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் கணிதப் பிரிவில் மூன்று ‘ஏ’ சித்திகளைப் பெற்று பாக்கியராஜா டாருகீசன் என்ற மாணவன் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்
இதேவேளை, கணிதப் பிரிவில் தேசிய ரீதியில் 8ஆம் இடத்தையும் யாழ். இந்து மாணவன் ஒருவர் பெற்றுள்ளார்.
மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் கிளி/மத்திய கல்லூரி மாணவர்கள் இருவர் கணிதப்பிரிவில் முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்றுள்ளனர். மாவட்ட நிலையில் கு.கதீஸ் மூன்று ‘ஏ’ சித்திகளைப் பெற்று முதலாம் இடத்தையும் கா.சங்கீர்த்தனன் இரண்டு ‘ஏ’ ஒரு ‘பி’ சித்திகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
அத்துடன் விஞ்ஞானப் பிரிவில் மாவட்ட நிலையில் முதலாமிடத்தை இதே பாடசாலை மாணவர் இராமமூர்த்தி ஜனத் மூன்று ஏ சித்திகளைப் பெற்றுள்ளார்.
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் http://http//www.doenets.lk/ என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.