ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Wednesday, November 29
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»உள்நாட்டு செய்திகள்»நல்லாட்சியை ஏற்படுத்த எம்முடன் இணையுங்கள் : த.தே.கூ.விற்கு மைத்திரி அழைப்பு (படங்கள்)
    உள்நாட்டு செய்திகள்

    நல்லாட்சியை ஏற்படுத்த எம்முடன் இணையுங்கள் : த.தே.கூ.விற்கு மைத்திரி அழைப்பு (படங்கள்)

    AdminBy AdminDecember 29, 2014No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    நல்லாட்சியை ஏற்படுத்து வதற்காக எங்களோடு இணைந்து கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன் என பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா இன்று திங்கட்கிழமை காத்தான்குடியில் வைத்து தெரிவித்தார்.

    கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக்கின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதான வீதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தொடர்ந்துரையாற்றிய பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா,

    இன மத பேதங்களுக்கு அப்பால் சிங்கள பௌத்த, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவர், பறங்கியர் என அனைவரும் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.

    இன்று இந்த பயணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், உட்பட முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தப் பயணத்தில் என்னோடு கைகோர்த்து நிற்பது எனக்கு மகிழ்ச்சியைத்தருகின்றது.

    20141229_105905-600x337அதே போல பௌத்த சிங்கள மக்களை பிரதி நிதித்துவப்படுத்த ஜாதிக ஹெல உறுமய எங்களுடன் பிரதி நிதித்துப்படுத்துகின்றது. அதே போன்று பௌத்த மதகுருக்கள் மற்றும் உலமாக்கள் எங்களுக்கு ஆசீர்வதித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

    மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான தமிழ் மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் ஒத்துழைப்பு இருக்கின்றது. இந்த நல்ல பயணத்தில் நல்லாட்சியை ஏற்படுத்து வதற்காக எங்களோடு இணைந்து கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன்.

    இந்த நாட்டில் எல்லா இனமும் சமமானவர்கள் எல்லோருக்கு அனைத்து சுதந்திரமும் உண்டு. எல்லோரும் இணைந்து நல்லாட்சியை ஏற்படுத்துவதே நமது சேவையாக இருக்கின்றது.

    அவரவர் மதங்களை பின்பற்ற கலாசாரங்களை பின்பற்ற சுதந்திரம் இருக்க வேண்டும். இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ளார்கள்.

    2010 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவை ஒரு நல்ல மனிதராக கண்டோம். யுத்தம் முடிந்த பிறகு அவருடை அத்தனை விடயங்களிலும் மாற்றத்தைக் கண்டோம்.

    இன்று தன்னை ஜனாதிபதியாக்கிய அத்தனை பேரையும் மறந்து விட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கையோ பண்டார நாயக்காவின் கொள்கையோ இன்று அவரிடத்தில் இல்லை. அவரும் அவருடைய குடும்பமும் கொள்ளையடிப்பதற்கே இந்த நாட்டை பயன் படுத்திகின்றனர்.

    காணிகளை கொள்ளையடித்துள்ளார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். உங்களது காணிகளை வியாபரிகளுக்கு விற்பனை செய்து அவர்கள் பணம் சம்பாதித்துள்ளார்கள்.

    உங்களுக்குரியதை செய்வதற்கு நிம்மதியாக வாழ்வதற்கு மதத்தை பின்பற்றுவதற்கு நிம்மதி சுதந்திரம் தேவை. தொழில் செய்யக் கூடிய நல்ல சூழலை உருவாக்க வேண்டும். அவ்வாறான நல்ல சூழல் இங்கு இல்லை.

    இந்த நாட்டின் நீதியை சட்டத்தை இல்லாமல் ஆக்கியுள்ளார்கள். மக்களின் நம்பிக்கை நாசமாக்கியிருக்கின்றார்கள். நாட்டுக்காக அபிவிருத்தி செய்யவில்லை. அவர்களின் சொந்தப் பொக்கட்டுக்களை நிரப்பிக் கொள்வதற்காக அபிவிருத்தி செய்திருக்கின்றார்கள்.

    10898255_1513146048973247_4833927590198085538_nஊழல் இல்லாத நல்லாட்சியை உருவாக்க நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். உங்களுக்கு நிறையப் பிரச்சினைகள் இருக்கின்றன. தொழிலில்லாத இளைஞர்கள் பலர் இன்றிருக்கின்றார்கள்.

    நான் வெற்றி பெற்றவுடன் தொழில் இல்லாத இளைஞர்களுக்கு நல்ல தொழிலை வழங்க நடவடிக்கை எடுப்போம்.

    விவசாயிகளுக்கு நிறையப் பிரச்சினை இருக்கின்றது. நான் ஜனாதிபதியானவுடன் விவசாயிகளுக்கு நல்ல திட்டங்களை ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

    எதிர்வரும் 8 ஆம் திகதி இந்த நாட்டில் ராஜபக்ச குடும்பம் வெற்றி பெறப் போகின்றதா அல்லது இந்த நாட்டு மக்கள் வெற்றி பெறப் போகின்றார்களா என்பது தான் தற்போதுள்ள கேள்வியாகும்.

    நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டுமென்று இன்று ஒன்று பட்டுள்ளார்கள். ஊழல் நிறைந்த ராஜபக்சவின் குடும்பத்தினை பாதுகாக்க வேண்டிய எந்த தேவையும் இந்த நாட்டு மக்களுக்கில்லை.

    இந்த நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த அனைவரும் ஒன்று சேருமாறும் எதிர்வரும் 8 ஆம் திகதி எனது சின்னமான அன்னச்சின்னத்திற்கு வாக்களிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

    இந்தக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரட்ன, எம்.எஸ்.எஸ்.அமீர் அலி உட்பட முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    இதன் போது பொது வேட்பாளரின் காத்தான்குடிக்கான பிரசார தேர்தல் அலுவலகமும் திறந்து வைக்கப்பட்டது.

    10888972_1513146008973251_2898279149939417275_n

    10881515_1512966208991231_5475277847992544654_n1013876_1512966105657908_3289937151722585201_n

    Post Views: 52

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    புலிகளின் சின்னம் பொறித்த ஆடையை அணிந்திருந்தவர் கைது

    November 28, 2023

    வட, கிழக்கில் தடைகளைத் தாண்டி உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் : கொடிகள் பொலிஸாரால் அறுப்பு !

    November 27, 2023

    மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை துப்பாக்கியால் தன்னுயிரை மாய்தார்

    November 27, 2023

    Leave A Reply Cancel Reply

    December 2014
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031  
    « Nov   Jan »
    Advertisement
    Latest News

    இரட்டை சிசுக்களை பிரசவித்த தாய் மரணம்

    November 29, 2023

    கோவை நகைக்கடையில் 200 சவரன் நகை கொள்ளை – ஏ.சி. வென்டிலேட்டர் வழியே நுழைந்தது எப்படி?

    November 29, 2023

    34 நாள் நடிச்சிருக்கேன்… இதுதானா சம்பளம்? குருநாதரிடம் கோபப்பட்ட கமல்ஹாசன்

    November 29, 2023

    தாயின் ஐடியுடன் விடுதிக்குச் சென்ற மகள்

    November 29, 2023

    வீடியோவில் தோன்றியது துவாரகா தானா? முக அசைவு, மொழிநடையில் நிபுணர்கள் சந்தேகம்

    November 29, 2023
    • வீடியோவில் தோன்றியது துவாரகா தானா? முக அசைவு, மொழிநடையில் நிபுணர்கள் சந்தேகம்
    • சரக்குக் கப்பலைக் கடத்தி மேற்கு நாடுகளை மிரட்டும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள்
    • இயேசுவின் போதனைகள், சனாதன யூதர்களின் ஆயிரமாண்டுகால நம்பிக்கைகளின் வேர்களை அசைத்துப் பார்ப்பதாக இருந்தது. ஆகவே அவர்களால் இயேசுவை ஏற்க இயலவில்லை; கொல்ல முடிவு செய்தார்கள் – நிலமெல்லாம் ரத்தம் 4
    • தீபாவளி இந்து பண்டிகையா? பௌத்தம், சமணத்தில் இருந்து வந்ததா?
    • ‘நாம் சர்வாதிகாரிகள்’ : வன்முறை, நயவஞ்சகம் – இவை தான் நமது அடையாளம்!! (யூதர்களின் இரகசிய அறிக்கை!! : ஒரு நூற்றாண்டுக்கு முன் அம்பலமான சதி!! – (பகுதி-2)

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • இரட்டை சிசுக்களை பிரசவித்த தாய் மரணம்
    • கோவை நகைக்கடையில் 200 சவரன் நகை கொள்ளை – ஏ.சி. வென்டிலேட்டர் வழியே நுழைந்தது எப்படி?
    • 34 நாள் நடிச்சிருக்கேன்… இதுதானா சம்பளம்? குருநாதரிடம் கோபப்பட்ட கமல்ஹாசன்
    • தாயின் ஐடியுடன் விடுதிக்குச் சென்ற மகள்
    Recent Comments
      Quick Links
      • முகப்பு
      • இந்தியா
      • உலகம்
      • வெளிநாட்டு
      • சினிமா
      • விளையாட்டு
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • வினோதம்
      • அரசியல்
      Quick Links
      • கட்டுரைகள்
      • தொடர் கட்டுரைகள்
      • கவிதைகள்
      • கலைகள்
      • வீடியோ
      • புகைப்பட தொகுப்பு
      • தொழில்நுட்பம்
      • வேலைவாய்ப்பு
      • கல்வி
      Quick Links
      • ஆரோக்கியம்
      • அந்தரங்கம்
      • ஆன்மீகம்
      • சுற்றுலா
      • சிறப்பு செய்திகள்
      • வினோதம்
      BRAKING NEWS
      • வீடியோவில் தோன்றியது துவாரகா தானா? முக அசைவு, மொழிநடையில் நிபுணர்கள் சந்தேகம்
      • சரக்குக் கப்பலைக் கடத்தி மேற்கு நாடுகளை மிரட்டும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள்
      • இயேசுவின் போதனைகள், சனாதன யூதர்களின் ஆயிரமாண்டுகால நம்பிக்கைகளின் வேர்களை அசைத்துப் பார்ப்பதாக இருந்தது. ஆகவே அவர்களால் இயேசுவை ஏற்க இயலவில்லை; கொல்ல முடிவு செய்தார்கள் – நிலமெல்லாம் ரத்தம் 4
      • தீபாவளி இந்து பண்டிகையா? பௌத்தம், சமணத்தில் இருந்து வந்ததா?
      • ‘நாம் சர்வாதிகாரிகள்’ : வன்முறை, நயவஞ்சகம் – இவை தான் நமது அடையாளம்!! (யூதர்களின் இரகசிய அறிக்கை!! : ஒரு நூற்றாண்டுக்கு முன் அம்பலமான சதி!! – (பகுதி-2)
      2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

      swissreplicas.to

      bestwatchreplica.co
      replica watches

      swiss replica website

      fake rolex for sale
      relogios replicas
      Go to mobile version