சமீபத்தில் நடிகர் விஷால் மற்றும் ஹன்சிகா நடித்து வெளிவரவிருக்கும் ‘ஆம்பள’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டிற்கு நடிகை ஹன்சிகா மஞ்சள் நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் கலக்கலாக வந்திருந்தார்.
மேலும் இந்த ட்ரான்ஸ்பரண்ட் புடவைக்கு ஹன்சிகா அணிந்து வந்த ஜாக்கெட் அற்புதமாக இருந்தது. இங்கு நடிகை ஹன்சிகா ‘ஆம்பள’ திரைப்படத்தின் இசை வெளியீட்டிற்கு வரும் போது மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் ஹன்சிகா
இது தான் ஹன்சிகா அணிந்து வந்த பிங்க் பார்டர் கொண்ட மஞ்சள் மற்றும் வெள்ளை கலந்த டபுள் ஷேடட் ட்ரான்ஸ்பரண்ட் புடவை. இந்த புடவைக்கு ஹன்சிகா அணிந்து வந்த ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மிகவும் அற்புதமான லுக்கைக் கொடுத்தது.
ஹன்சிகாவின் மேக்கப்
ஹன்சிகா கன்னங்களுக்கு பிங்க் நிற பிளஷ் அடித்து, கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப் போட்டு, உதட்டிற்கு பவள நிற லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார்.
ஹன்சிகாவின் ஹேர் ஸ்டைல்
ஹன்சிகா சைடு ஸ்வெப்ட் எடுத்து, கூந்தலின் முனையில் கர்ல்ஸ் செய்து வந்திருந்தார்.
ஹன்சிகாவின் ஆபரணங்கள்
ஹன்சிகா காதுகளுக்கு வைரம் பதித்த குட்டியான கம்மலையும், கைகளுக்கு மற்றும் விரல்களுக்கு வைரம் பதித்த வளையல் மற்றும் மோதிரம் அணிந்து வந்திருந்தார்.
முதல் முறையாக தனுஷுக்கு ஜோடியாகும் சமந்தா, எமி ஜாக்சன்!
29-12-2012
29-12-2012
முதல் முறையாக தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்கள் சமந்தாவும் எமி ஜாக்சனும். வேலையில்லா பட்டதாரி படத்தை இயக்கிய வேல்ராஜ்தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றிக் கூட்டணியான வேல்ராஜ், தனுஷ், அனிருத் மீண்டும் இணைகிறார்கள்.
இதில் தனுஷுக்கு ஜோடியாக எமி ஜாக்,ன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. தற்போது இப்படத்தில் சமந்தாவும் நடிக்க இருப்பதாக தனுஷே அறிவித்துள்ளார்.
தனுஷுடன் சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பது இதுவே முதல் முறை. இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. படப்பிடிப்பு 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்குகிறது.
பாலாஜி மோகன் இயக்கிவரும் ‘மாரி’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்தியில் பால்கி இயக்கத்தில் ஷமிதாப் படத்தில் நடித்து வருகிறார். இரு படங்களுமே முடியும் கட்டத்தில் உள்ளன.